search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 269040"

    • குமாரபாளையம் பகுதியில் ஊருக்குள் புகுந்த காட்டெருமையை தீயணைப்பு துறையினர் பிடித்தனர்.
    • காட்டெருமை நேற்று மாலை 6 மணியளவில் சமயசங்கிலி தடுப்பணை பகுதியில் உள்ளதாக தகவல் கிடைத்தது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் கத்தேரி பிரிவு அருகே காட்டெருமை மேய்ந்துள்ளது. இதை கண்ட பொதுமக்கள் சிலர் அச்சத்தில் அங்கிருந்து விலகி சென்றனர். இது குறித்து தீயணைப்பு படை யினர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தரப்பட்டது.

    டீச்சர்ஸ் காலனி, சிவசக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் எருமையை பார்த்ததாக பலர் கூறியதால் இந்த பகுதிகளில் சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்ட வனத்துறை அலுவலர்கள், ஊழியர்கள் ஈரோடு மாவட்ட வன அலுவலர் கவுதம் தலைமையில் 40-க்கும் மேற்பட்டோர் தேடி வருகின்றனர்.


    இது குறித்து நாமக்கல் மாவட்ட வன சரக அலுவலர் பெருமாள் கூறுகையில், இந்த காட்டெருமை ஏற்காடு பகுதியில் இருந்து மெல்ல மெல்ல இந்த பகுதிக்கு வந்துள்ளது.

    ட்ரோன் கேமரா மூலமும் தேடி வருகிறோம். இப்பகுதியில் கரும்பு தோட்டங்கள் அதிகம் உள்ளதால் அதற்குள் புகுந்துள்ளது. விரைவில் பிடித்து விடுவோம் என்றார்.

    இதனிடையே காட்டெருமை நேற்று மாலை 6 மணியளவில் சமயசங்கிலி தடுப்பணை பகுதியில் உள்ளதாக தகவல் கிடைத்தது. வனத்துறையினர் அங்கு சென்று காட்டெருமையை மடக்கிப் பிடித்தனர். பின்னர் காட்டெருமை சக்திய மங்கலம் காட்டுப்பகுதியில் விடப்பட்டது.

    ×