என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திறந்து விடப்பட்டு"
- டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் கிராமத்தில் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது குண்டேரிப்பள்ளம் அணை.
- இந்த அணையில் இருந்து வாய்காலுக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு வலது கரை இடது கரை 2 மதகுகள் உள்ளன.
டி.என்.பாளையம்:
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் கிராமத்தில் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது குண்டேரிப்பள்ளம் அணை. இந்த அணையின் மொத்த நீர் மட்டம் 42 அடியாகும். அணையின் மூலம் 2,498 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.
இந்த அணைக்கு நீர்வரத்தானது குன்றி உள்பட அடர்ந்த வனப்பகு தியில் பெய்யும் மழையால் குண்டேரிப்பள்ளம் அணை நிரப்பப்பட்டு இங்கு கட்லா, லோகு, சிலேப்பி உள்ளிட்ட மீன் குஞ்சுகள் விடப்பட்டு பெரிதானதும் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த அணைக்கு பண்டிகை காலங்களில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து அணையை சுற்றி பார்க்க சுற்றுலா பயணிகள் வருவர்.
இந்த அணையில் இருந்து வாய்காலுக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு வலது கரை இடது கரை 2 மதகுகள் உள்ளன. பொதுப்பணித்துறை அனுமதியுடன் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் 10 நாட்களுக்கு ஒருமுறை விட்டு விட்டு விவசாய பாசனத்திற்கு இந்த அணையின் 2 மதகுகள் திறந்து விடப்பட்டு பாசன வசதி பெறுவது வழக்கமாகும்.
இந்நிலையில் சில நாட்களுக்காகவே இந்த மதகுகள் திறந்த நிலையில் தண்ணீரானது மேட்டுக்காடு, ராமைய்யன் தோட்டம், ஆயா தோட்டம் வழியாக வாணிப்புத்தூர் வாய்க்கால் வந்து ஓடையில் வந்து தண்ணீர் வீணாக கலப்பதாக அப்பகுதி விவசாயிகள் சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து பொதுப்ப ணித்துறை அதிகாரியிடம் கேட்டபோது, தண்ணீர் திறந்து விட அனுமதி அளிக்கவில்லை என்றும், அதோடு மதகுகள் திறந்து விடப்பட்டு வாய்க்கால் வழியாக தண்ணீர் வருவதற்கு தற்போது வாய்ப்பில்லை என்று கூறினார்.
அதன்பிறகு மதகுகள் திறந்த நிலையில் தண்ணீர் வீணாக வருவதாக தெரிவி த்ததுடன் ஊழியர்களை அனுப்பி மதகுகளை சரிசெய்து விட்டோம் என்று துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்தார்.
தண்ணீர் வீணாகி வருவது கூட பொதுப்ப ணித்துறை அதிகாரி மற்றும் ஊழியர்களுக்கு தெரியவில்லையா? சில நபர்களுக்காக மட்டுமே தண்ணீர் திறந்து விடப்படு கிறதா? என்று அப்பகுதியினரிடையே கேள்வி எழுந்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்