search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாநகர காவல் ஆணையர்"

    • மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிசிடிவி கேமரா ஆய்வின் மூலம் விசாரணை.
    • மீதி உள்ள வழக்குகளிலும் குற்றவாளிகளை நெருங்கி விட்டோம்.

    கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளதாவது: கோவை குனியமுத்தூர் பகுதியில் கடந்த 23 ம் தேதி மதியம் ரகு என்ற இந்து முன்னணி பொறுப்பாளர் வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த அவரது காரில் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டது.

    அதே நாள் குனியமுத்தூர் பகுதியில் பாஜக பிரமுகர் பரத் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்த இரண்டு சம்பவங்களுக்கும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஒவ்வொரு வழக்கிலும் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு நுண்ணறிவு சேகரிப்பு மற்றும் சிசிடிவி கேமரா ஆய்வின் மூலம் புலன் விசாரணை நடைபெற்றது.

    இந்த வழக்குகளில் மதுக்கரையைச் சேர்ந்த ஜேசுராஜ் (34), குனியமுத்தூரை சேர்ந்த இலியாஸ்(34) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் எஸ்.டி.பி.ஐ கட்சியில் பொறுப்பாளர்களாக உள்ளனர். விசாரணைக்கு பின் நீதிமன்ற காவலுக்கு இவர்கள் அனுப்பப்படுவர்.

    கோவை நகரில் இதுபோன்ற ஆறு வழக்குகளும், ஒரு பஸ் கண்ணாடி உடைப்பு வழக்கும் உள்ளது. மீதி உள்ள வழக்குகளிலும் முன்னேற்றம் உள்ளது. மற்ற குற்றவாளிகளை நெருங்கி விட்டோம். கூடிய விரைவில் அனைவரும் கைது செய்யப்படுவார்கள். மேலும் குற்றங்கள் நடக்காமல் இருக்க கண்காணிப்பு படைப்பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×