என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வடிவமைப்பு பயிற்சி"
- சிவகாசி பி.எஸ்.ஆர். கல்லூரியில் மென்பொருள் வடிவமைப்பு பயிற்சி முகாம் நடந்தது.
- எந்திரவியல் துறையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
சிவகாசி
சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் ''ஆட்டோடெஸ்க் யூசன் 360'' என்ற மென்பொருள் வடிவமைப்பு தொடர்பாக பயிற்சி முகாமை கல்லூரியின் ஐ.சி.டி. அகாடமி நடத்தியது.
பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி தலைமை தாங்கினார். இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் தொடங்கி வைத்தார். முதல்வர் விஷ்ணுராம் வாழ்த்துரை வழங்கினார். டீன் மாரிச்சாமி சிறப்புரை ஆற்றினார்.
இந்த பயிற்சி முகாமை சென்னை ஐ.சி.டி.அகாடமி நிர்வாக அதிகாரி திவ்யபிரசாத் நடத்தினார்.
அவர் பேசுகையில், இந்த மென்பொருள் ஆட்டோ மெஷனில் உற்பத்திதுறை மற்றும் வடிவமைப்பு துறையின் பயன்பாடு பற்றியும், இதன் மூலமாக உள்ள வேலைவாய்ப்பு பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.இதில் எந்திரவியல் துறையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், எந்திரவியல் துறை பேராசிரியர்கள் முத்தையா, குமாரசாமி ஆகியோர் செய்திருந்தனர்.
எந்திரவியல் துறைத்தலைவர் கனகசபாபதி நன்றி கூறினார்.