search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விளையாட்டுகள்"

    • பனை மரத்திலிருந்து தயாரிக்கப்பட்ட பல்வேறு வகையான கைவினை பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டன.
    • திருமண மாலைகள், கார்த்திகை பூ சுற்றுதல் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகள் பம்பரம் சுற்றுதல் உள்ளிட்ட விளையாட்டுகள் இடம்பெற்றன.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் பகுதியில் கீரின்நீடா என்ற சுற்றுச்சூழல் அமைப்பு சார்பில் பனை திருவிழா நீடாமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    இந்த விழா அரங்கில் பனையில் இருந்து தயாரிக்கப்பட்டபனை அல்வா உள்ளிட்ட பொருட்கள், மற்றும் பனை மரத்திலிருந்து தயாரிக்கப்பட்ட பல்வேறு வகையான கைவினைப் பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டன.

    பனை திருவிழாவினை தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவர் நாராயணன் தொடங்கி வைத்து பேசுகையில் பனைமரம் தமிழகத்தின் பாரம்பரிய மரம்.

    பனைமரம் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்கிறது. நாம் அனைவரும் வீடுகளில் பனை மரம் வளர்க்க வேண்டும். பனைமரத்தால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது என்றார்.

    மேலும் பனைத் திருவிழாவில் நாம் மறந்துபோன பனை ஓலை காத்தாடி, பனங்காய் நுங்கு வண்டி, பனங் கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் பனை அல்வா, பனை குல்பி, பனை ஓலையில் செய்யப்பட்ட கைப்பை , திருமண மாலைகள், கார்த்திகை பூ சுற்றுதல் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகள் பம்பரம் சுற்றுதல் உள்ளிட்ட விளையாட்டுகள் இடம்பெற்றன.

    இதுதவிர கவியரங்கம், கருத்தரங்கம், நாட்டுப்புறப் பாடல்கள் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

    ×