search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹில்காப் மோட்டார்"

    • இந்த வாகனத்தில் ஆம்புலன்ஸ்சில் உள்ள அனைத்து முதலுதவி சிகிச்சை பொருட்களும் வைக்கப்பட்டுள்ளது
    • பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக குன்னூரில் இருந்து சிம்ஸ் பார்க் வரை சோதனை ஓட்டம் நடந்தது.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டத்தில் முக்கிய நகரங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்க காவல்துறையினர் துரித ரோந்து பணிக்கு பயன்படுத்த ஹில் காப் என்ற இருசக்கர வாகனத்தை கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஊட்டி நகர் பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஸ் ராவத் அறிமுகப்படுத்தி வைத்தார்.

    ஹில் காப் இரு சக்கர வாகனம் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி ஆகிய பகுதிகளுக்கு மொத்தம் 9 வாகனங்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளது.அதன் தொடர்ச்சியாக குன்னூர் பகுதியில் காவல்துறையினர் துரித ரோந்து பணிக்கு பயன்படுத்தும் ஹில் காப் என்று கூறப்படும் இருசக்கர வாகனத்தை ஏ.டி.எஸ்.பி மோகன் நவாஸ் தொடங்கி வைத்தார்.

    இந்த வாகனம் மூலமாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக குன்னூரில் இருந்து சிம்ஸ் பார்க் வரை சோதனை ஓட்டம் நடந்தது.

    இதுகுறித்து ஏ.டி.எஸ்.பி மோகன் நவாஸ் கூறியதாவது:-

    மலை மாவட்டங்களில் இந்த வாகனத்தை அறிமுகப்படுத்தியதால் சுற்றுலா பயணிகளுக்கு ஏற்படும் சாலை போக்குவரத்து இடையூறு குறைந்துள்ளது.

    இந்த வாகனத்தில் ஆம்புலன்ஸ்சில் உள்ள அனைத்து முதலுதவி சிகிச்சை பொருட்களும் வைக்கப்பட்டுள்ளது இதை பெண் காவலர்களும் சிறப்பாக இயக்கி வருகிறார்கள். இதில் போலீசாரிடம் உள்ள காமிரா அவர்களை சுற்றி நடக்கும் அனைத்து விஷயங்களையும் படம் பிடித்து காட்டக் கூடியது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×