search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விலை கிலோ"

    • சத்தியமங்கலம் மார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து அதிகரித்தது. ஆனால் பூக்களை கொள்முதல் செய்ய வியாபாரிகள் பலர் வரவில்லை.
    • இதனால் தற்போது 1 கிலோ மல்லிகை ப்பூ ரூ.300-க்கு விற்பனை யானது.

    சத்தயமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமஙகலம், சிக்கரசம் பட்டி உள்பட சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் பரப்பளவில் மல்லிகைப்பூ, முல்லைப்பூ உள்பட பல்வேறு பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    இந்த பகுதிகளில் இருந்து பூக்களை பறித்து சத்திய மங்கலத்தில் செயல்படும் பூ மார்க் கெட்டுக்கு விற்ப னைக்கு கொண்டு வரப்படு கிறது. வியாபாரிகள் கொள்முதல் செய்து ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதி களுக்கு அனுப்பி வைக்கின்ற னர்.

    மேலும் கேரளா, ஆந்திரா என வெளி மாநில வியாபாரிகள் வந்து பூக்க ளை மொத்தமாக கொள் முதல் செய்து வருகிறார்கள். இதனால் பண்டிகை மற்றும் முகூர்த்த நாட்களில் தேவை அதிகரித்து பூக்களின் விலையும் அதிகமாக இருக்கும்.

    அதே போல் கடந்த மாதம் ஓணம் பண்டிகை மற்றும் முகூர்த்த நாட்கள் தொடர்ந்து வந்ததது.இதை யொட்டி கேரளா மாநிலத்து க்கு அதிகளவு பூக்கள் ஏற்று மதி செய்யப்பட்டது. தேவை அதிகரிப்பால் கடந்த மாதம் மல்லிகை ப்பூ கிலோ ரூ.4 ஆயிரத்துக்கு மேல் விற்ப னை செய்யப்பட்டது.

    இந்த நிலையில் சத்தியமங்கலம் பகுதியில் பூக்கள் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் பண்டிகை மற்றும் முகூர்த்த நாட்கள் இல்லாத தால் பூக்களின் தேவை தொடர்ந்து குறைந்து வரு கிறது.

    தற்போது வெப்ப கால நிலை நிலவுவதால் பூக்கள் உற்பத்தி 3 டன்னில் இருந்து 5 டன்னாக அதி கரித்தது. இதனால் தேவை யை விட உற்பத்தி அதிகமாக உள்ளதால் விலையும் படிப்படியாக குறைந்து வரு கிறது.

    கடந்த மாதம் ரூ.4 ஆயிரத்துக்கு மேல் மல்லி கைப்பூ விற்பனை செய்ய ப்பட்டது. அது படிப்படியாக குறைந்து கடந்த சில நாட்களாக மல்லிகைப்பூ ரூ.600-க்கு விற்பனையா னது.

    இந்த நிலையில் சத்தியமங்கலம் மார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து அதிகரித்தது. ஆனால் பூக்களை கொள் முதல் செய்ய வியாபாரிகள் பலர் வரவில்லை. இதனால் தற்போது 1 கிலோ மல்லிகை ப்பூ ரூ.300-க்கு விற்பனை யானது. இதே போல் ரூ.300-க்கு விற்பனை செய்யபப்ட்ட முல்லைப்பூ ரூ.100 ஆக குறைந்தது. ேமலும் மற்ற பூக்களின் விலையும் குறைந்தது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

    ×