என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "லஞ்சம் கேட்ட அதிகாரி"
- தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைத்தீர்க்கும் முகாம் நடைபெற்றது.
- முகாமில் அரக்காசனஅள்ளியில் விவசாயத்திற்கு இலவச மின் இணைப்பு பெற லஞ்சம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயி கலெக்டரிடம் மனு அளித்தார்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள அரக்காசனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல்.
இவர் இன்று தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் முகாமில் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
விவசாயியான நான், அரக்காசனஅள்ளியில் குடும்பத்துடன் வசித்து வருவதாகவும், தனக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு இலவச மின் இணைப்பிற்காக பெரும்பாலை மின்வாரியத்தில் அதிகாரியிடம் விண்ணப்பித்து இருந்தேன்.
அந்த அதிகாரி தனக்கு பிறகு விண்ணப்–பளித்த அனைவருக்கும் பணம் பெற்றுக் கொண்டு இலவச மின் இணைப்பு கொடுத்தது தெரியவந்தது. ஆனால், தனது நிலத்திற்கு இதுவரை மின் இணைப்பு தராமல் கால–ம் தாழ்த்தி வந்தார்.
இதுகுறித்து அதிகாரி–யிடம் கேட்டபோது, இலவச மின் இணைப்புக்காக லஞ்சம் கேட்டார். அப்போது நான் விண்ணப்பத்துடன் 10 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்தேன். அதனை பெற்றுக்கொண்டு மேலும் ரூ.20 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே மின் இணைப்பு வழங்க முடியும் என்று அதிகாரி கூறினார்.
ஒரு மின் இணைப்பிற்கு ரூ.20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை லஞ்சம் பெற்றுக் கொண்டுதான் மின் இணைப்பு வழங்கு–கிறார். மேலும் தனக்கு முக்கிய பிரமுகர்கள் ஆதரவு இருப்பதால் அதிகாரியை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்று மிரட்டி வருகிறார்.
எனவே இந்த மனுவை ஏற்று விசாரணை செய்து எனக்கு மின் இணைப்பு வழங்குமாறும், லஞ்சம் வாங்கும் மின்வாரிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனுவை பெற்று கொண்ட கலெக்டர் சாந்தி உடனே அங்கிருந்த மின்–வாரிய அதிகாரியை அழைத்து விசாரிக்க உத்தர விட்டார்.
- கோவிலில் பூசாரியாக உள்ளவர் அண்ணாதுரை. இவரிடம் புரட்டாசி மாதம் அதிக அளவில் பக்தர்கள் வருவதால் ரூ.21 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும்.
- இல்லை எனில் கோவில் பூஜை பணியை தொடர்ந்து செய்ய விடமாட்டேன் என்றும் செயல் அலுவலர் லட்சுமி காந்தன் கூறியதாக தெரிகிறது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் நைனாமலை வரதராஜ பெருமாள் கோவில் செயல் அலுவலராக பணியாற்றி வருபவர் லட்சுமிகாந்தன் (வயது 51). இவர் சேந்தமங்கலம் அருகே உள்ள முத்துகாப்பட்டி பெரியசாமி கோவிலையும் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார்.
இந்த கோவிலில் பூசாரியாக உள்ளவர் அண்ணாதுரை. இவரிடம் புரட்டாசி மாதம் அதிக அளவில் பக்தர்கள் வருவதால் ரூ.21 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் எனவும், இல்லை எனில் கோவில் பூஜை பணியை தொடர்ந்து செய்ய விடமாட்டேன் என்றும் செயல் அலுவலர் லட்சுமி காந்தன் கூறியதாக தெரிகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத பூசாரி அண்ணாதுரை இது குறித்து நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனையின் பேரில் ரசாயன பவுடர் தடவிய ரூ.21 ஆயிரத்தை அண்ணாதுரை நேற்று ஏளூர் அகரம் பகுதியில் வைத்து செயல் அலுவலர் லட்சுமி காந்தனிடம் கொடுத்து உள்ளார். அப்போது அங்கு மறைந்து இருந்த இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் தலைமையிலான குழுவினர் லட்சுமிகாந்தனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
பின்னர் அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தியபோது அவர் மாவட்ட இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமேஷ் (45) லஞ்சம் வாங்க சொன்னதால் தான் பூசாரியிடம் லஞ்சம் வாங்கினேன் என கூறி உள்ளார். அதற்கான ஆடியோவையும் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் உதவி ஆணையர் ரமேஷையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணைக்கு பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே கைதான 2 பேரையும் சஸ்பெண்டு செய்ய உயர் அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்