என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விளையாத்துறை அமைச்சகம்"
- தகுதியுள்ள விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், அமைப்புகள், விண்ணப்பிக்கலாம்.
- இதற்கென்றே உருவாக்கப்பட்டுள்ள இணையப் பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது, அர்ஜூனா விருது, துரோணாச்சார்யா விருது, தியான் சந்த் விருது, தேசிய விளையாட்டு ஊக்குவிப்பு விருது மற்றும் நடப்பாண்டிற்கான மௌலானா அபுல் கலாம் ஆசாத் கோப்பை ஆகியவற்றுக்கு மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுக்கள் அமைச்சகம் விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பை வெளியிட்டது.
ஆகஸ்ட் 27 அன்று இதற்கான அறிவிப்பு அமைச்சகத்தின் www.yas.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்த விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி தேதி நேற்றுடன் (செப்டம்பர் 27) நிறைவடைந்த நிலையில், அக்டோபர் 1ந் தேதி(சனிக்கிழமை) அது நீடிக்கப்பட்டுள்ளது.
தகுதியுள்ள விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், அமைப்புகள், பல்கலைக்கழகங்கள் இந்த விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கென்றே உருவாக்கப்பட்டுள்ள dbtyas-sports.gov.in என்ற இணையப்பக்கத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அக்டோபர் 1-ந் தேதிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது என்று மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுக்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.