search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதகுகளை சரிபார்க்க வேண்டும்"

    • கோவையில் பல்வேறு அணைக்கட்டு பகுதிகளில் உள்ள மதகுகள் சிதிலம் அடைந்துள்ளது.
    • அரசு உடனடியாக சாலையோரம் உள்ள கிணறுகளை சுற்றி பாதுகாப்பு தடுப்பு அமைக்க வேண்டும்

    கோவை

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சமீரன் தலைமையில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நடைபெற்றது.

    இதில் மாவட்டத்தில் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுக்களாக கொடுத்தார். கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் பேசியதாவது:-

    கோவை மாவட்டத்தில் பல்வேறு நீர் தேக்கப் பகுதிகளில் உள்ள மதகுகள் சரிபார்க்கப்பட வேண்டும். பல்வேறு அணைக்கட்டு பகுதிகளில் உள்ள மதகுகள் சிதிலம் அடைந்துள்ளது. ஷட்டர்கள் பழுது பார்க்கப்பட வேண்டும். பரம்பிக்குளம், ஆழியார் போன்ற ஷட்டர் விபத்துக்கள் தவிர்க்கப்பட வேண்டும். நீர் ஆதாரப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும்.

    தமிழகத்தில் நெல் உற்பத்தி செலவு ஒரு குவிண்டாலுக்கு ரூ.1805 ஆகிறது. கேரளாவில் நெல் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ.2820 என கேரளா அரசு தற்சமயம் அறிவித்துள்ளனர்.

    அதே போல் தமிழகத்தில் நெல் விவசாயிகளுக்கு ரூ.2820 வழங்க வேண்டும். கோவை மாவட்டத்தில் நெடுஞ்சாலை மற்றும் கிராம பொது பாதைகளில் ஓரமாக பயன்படுத்தாத கிணறுகள், விவசாயத்துக்கு பயனுள்ள கிணறுகள் உள்ளது.

    குறிப்பாக காரமடை ஒன்றியம், தொண்டா முத்தூர், புத்தூர், தேவரா யம்பாளையம் போகும் வழியில் உள்ள கிணறுகள் பாதுகாப்பாக இல்லாத நிலையில் சாலை விபத்துகள் ஏற்படுகிறது. அரசு உடனடியாக சாலையோரம் உள்ள கிணறுகளை சுற்றி பாதுகாப்பு தடுப்பு அமைக்க வேண்டும். தமிழகத்தில் வனப்பரப்பு அதிகரிக்க பசுமை தமிழகம் இயக்கம் கோவைக்கு விரிவாக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினார்.

    ×