search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கங்கைகொண்டான்"

    • தொழிலாளர்கள் எங்களை அனுமதிக்கவில்லை.
    • 21 கிராமங்களை சேர்ந்தவர்கள் இங்கு தொழிலாளர்களாக பணியாற்றி வருகிறோம்.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் சுமார் 100 ஆண்டுகளாக சரக்கு முனையம் செயல்பட்டு வந்தது.

    கூட்ஸ் ரெயில் மூலம் கொண்டு வரப்படும் உரம், அரிசி, கோதுமை, நெல் உள்ளிட்டவைகள் இங்கிருந்து லாரிகள் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு வந்தது.

    இந்நிலையில் சரக்கு முனையத்தால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாக கூறி, இந்த சரக்கு முனையத்தை சமீபத்தில் கங்கைகொண்டான் ரெயில் நிலையத்திற்கு இடமாற்றம் செய்தனர்.

    நெல்லை சரக்கு முனையத்தில் சுமார் 120 சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இவர்கள் தங்களுக்கு கங்கைகொண்டானில் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். அவர்களுக்கு அங்கு பணி அமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்ததாக தெரிகிறது.

    இந்நிலையில் கங்கை கொண்டான் சரக்கு முனையத்தில் பணியாற்றும் சுமை தூக்கும் பணியாளர்கள், லாரி டிரைவர்கள் ஆகியோர் சந்திப்பு ரெயில் நிலையத்தில் பணியாற்றிய பணியாளர்களை கங்கை கொண்டானில் அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி இன்று கங்கைகொண்டான் ரெயில் நிலையம் முன்பு திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    தர்ணா போராட்டத்தில் வட்டார லாரி சங்க தலைவர் அலெக்ஸ் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் பொருளாளர் இஸ்ரவேல், மாரிமுத்து, செந்தில் குமரன், முருகன், ஆறுமுகம், வட்டார விவசாய சங்க தலைவர் இலோசியஸ், ஊர் நாட்டாண்மை துரைப் பாண்டியன், பஞ்சாயத்து தலைவர்கள் கவிதா பிரபாகரன், புதிய தமிழகம் மாவட்ட செயலாளர் ராமர், மானூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ், மாவட்ட கவுன்சிலர் மகேஷ் குமார், விடுதலை கட்சி மாவட்ட செயலாளர் சுரேஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறும் போது, நாங்கள் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் சரக்கு முனையம் செயல்பட்ட போது பணிக்கு சென்ற நிலையில் அங்குள்ள தொழிலாளர்கள் எங்களை அனுமதிக்கவில்லை.

    கங்கைகொண்டானை சுற்றியுள்ள 21 கிராமங்களை சேர்ந்தவர்கள் இங்கு தொழிலாளர்களாக பணியாற்றி வருகிறோம். அவர்களை இங்கே அனுமதித்தால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே அவர்களை இங்கு அனுமதிக்க கூடாது. அதனை மீறி அனுமதித்தால் நாங்கள் எங்களது குடும்பத்தினருடன் சேர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

    தகவல் அறிந்ததும் தாழையூத்து டி.எஸ்.பி. பாலச்சந்திரன், இன்ஸ்பெக்டர் வேல்கனி மற்றும் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வருவாய் ஆய்வாளர் அமுதா, தாசில்தார் ஜெயலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமாரி உள்ளிட்டவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    • கர்நாடகா மாநிலம் பெங்களூரு காவேரி நகரை சேர்ந்தவர் பால கிருஷ்ணன் (வயது 50). இவர் கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பாதுகாப்பு மேலாளராக பணியாற்றி வருகிறார்.
    • அங்கு வைக்கப்பட்டிருந்த 50 கிலோ காப்பர் வயர்கள் திருட்டு போனது.

    நெல்லை:

    கர்நாடகா மாநிலம் பெங்களூரு காவேரி நகரை சேர்ந்தவர் பால கிருஷ்ணன் (வயது 50). இவர் கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பாதுகாப்பு மேலாளராக பணியாற்றி வருகிறார்.

    அந்நிறுவன வளாகத்தில் ஏராளமான காப்பர் வயர்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு வைக்கப்பட்டிருந்த 50 கிலோ காப்பர் வயர்கள் திருட்டு போனது. இதுதொடர்பாக பாலகிருஷ்ணன் கங்கை கொண்டான் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காப்பர் வயர்களை திருடிய மர்மநபர்களை தேடி வரு கின்றனர்.

    • தனியாருக்கு சொந்தமான சோலார் நிறுவனம் ஒன்று மேட்டு பிராஞ்சேரியில் செயல்பட்டு வருகிறது.
    • சுமார் 300 கிலோ எடை கொண்ட காப்பர் வயர்கள் திருட்டு போயிருந்தது.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த கங்கைகொண்டான் அருகே உள்ள மேட்டு பிராஞ்சேரியில் தனியாருக்கு சொந்தமான சோலார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

    இந்த நிறுவனத்தின் காவலாளியாக நாங்குநேரி அருகே உள்ள சிந்தாமணியை சேர்ந்த முருகன்(வயது 48) என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று நிறுவனத்தின் வளாகத்தில் ஆய்வு செய்தார்.

    அப்போது அங்கு ஒரு மூலையில் வைக்கப்பட்டு இருந்த சுமார் 300 கிலோ எடை கொண்ட காப்பர் வயர்கள் திருட்டு போயிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த முருகன் உடனடியாக கங்ைககொண்டான் போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காப்பர் வயர்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். திருட்டு போன காப்பர் வயரின் மதிப்பு ரூ.90 ஆயிரம் என்று கூறப்படுகிறது.

    ×