search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கள்ள நோட்டுகள்"

    • கள்ள நோட்டுகள், கலர் ஜெராக்ஸ் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, அய்யலூர், எரியோடு, பாளையம், குஜிலியம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் இப்பகுதியில் அதிக அளவு விவசாயம் நடைபெற்று வருவதால் வியாபாரிகள் நேரடியாக வந்து விளை பொருட்களுக்கு பணம் கொடுத்து கொள்முதல் செய்து செல்கின்றனர்.

    இது தவிர அய்யலூர் ஆட்டுச்சந்தை வாரம் தோறும் கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெறும் மையமாக உள்ளது. இது போன்ற இடங்களில் சமீப காலமாக கள்ளநோட்டுகள், கலர் ஜெராக்ஸ் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

    கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு தற்போது புதிதாக வந்துள்ள 500, 200, 100 ரூபாய் நோட்டுகளில் அசல் எது, போலி எது என கண்டுபிடிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. நேற்று வடமதுரையில் உள்ள ஒரு பிரியாணி கடைக்கு வந்த வாலிபர் சாப்பிட்டு விட்டு அதற்கு பதிலாக 200 ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார்.

    அங்கிருந்த சிறுமி சாப்பாட்டுக்கு ரூ.120 எடுத்துக் கொண்டு மீதி ரூ.80 கொடுத்துள்ளார். சிறிது நேரம் கழித்து அவரது தந்தை கல்லாவில் பார்த்த போது போலியான 200 ரூபாய் நோட்டு கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    இது குறித்து தனது மகளிடம் கேட்ட போது தற்போதுதான் ஒருவர் பிரியாணி சாப்பிட்டு விட்டு இதை கொடுத்துச் சென்றதாக கூறினார். உடனே மோட்டார் சைக்கிளில் தனது மகளுடன் அங்கிருந்த கடை வீதிகளில் அந்த வாலிபரை தேடிப்பார்த்தபோது அவர் சிக்காமல் தப்பி ஓடி விட்டார்.

    கள்ள நோட்டுகளை மாற்றும் கும்பல் பெரும்பாலும் பெண்கள் இருக்கும் கடைகளிலும், சி.சி.டி.வி. பொருத்தாத கடைகளிலும் சென்று அதனை மாற்றி விட்டு மின்னல் வேகத்தில் சென்று விடுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். பின்னர் அந்த நோட்டுகளை மற்றவர்களிடம் கொடுக்கும்போதுதான் அது போலியானது என தெரிய வருகிறது.

    எனவே போலீசார் இது போன்ற கள்ள நோட்டு மற்றும் கலர் ஜெராக்ஸ் நோட்டுகளை மாற்றும் கும்பலை தீவிரமாக கண்காணித்து அவர்களை பிடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

    மேலும் இந்த கும்பலுக்கு பின்புலத்தில் உள்ள நபர்கள் யார்? என்பது குறித்தும் விசாரணை நடத்த வலியுறுத்தியுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மக்கள் அதிகம் கூடும் டாஸ்மாக் கடைகள், பெட்ரோல் பங்குகள் போன்றவற்றை குறி வைத்து கள்ள நோட்டுகளை மாற்றி வந்த கும்பல் தற்போது அங்கு கண்காணிப்பு கேமரா இருப்பதால் தங்களது திட்டத்தை வேறு வகையில் மாற்றி செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 10 ரூபாய் கள்ள நோட்டு இருப்பது தெரிய வந்தது.
    • கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 300 ரூபாய் வரை தங்கள் சொந்த பணத்தை போட்டுள்ளனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனை அருகே அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வசூலாகும் தொகையை மகளிர் சுய உதவிக்குழுவினர் மக்கள் சேவை மையத்தில் செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்றும் அம்மா உணவகத்தில் வசூலான பணத்தை மகளிர் சுய உதவிக்குழுவினர் மக்கள் சேவை மையத்தில் செலுத்த சென்றுள்ளனர். அப்போது பணத்தை என்னும் மெஷினில் பரிசோதிக்கும் போது 10 ரூபாய் கள்ள நோட்டு இருப்பது தெரிய வந்தது. இது குறித்து அம்மா உணவக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் தங்கள் கை காசுகளை போட்டு சமாளித்துக் கொண்டனர். அதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் கள்ள நோட்டு வந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 300 ரூபாய் வரை தங்கள் சொந்த பணத்தை போட்டுள்ளனர்.

    அதிசயமும் அதே சமயம் தங்களிடம் சிக்கிய 10 ரூபாய் கள்ள நோட்டை வாடிக்கையாளர்கள் கண்ணும் படும்படி இதன் பெயர் கள்ள நோட்டு என நூல் கட்டி தொங்க விட்டுள்ளனர்.

    இது குறித்து அம்மா உணவக ஊழியர்கள் கூறும்போது, தினமும் அம்மா உணவகத்திற்கு நூற்றுக்கணக்கான மக்கள் வருகின்றனர். கடந்த ஒரு வாரமாகவே கள்ள நோட்டுப் புழக்கம் இருந்து வருகிறது. பொதுமக்கள் யார் மீதும் சந்தேகப்பட முடியவில்லை. இதற்கு ஒரே தீர்வு பணம் எண்ணும் எந்திரம் இருந்தால் கள்ள நோட்டை எளிதாக கண்டுபிடிக்க முடியும் என்றனர்.

    • 3 பேர் கள்ளநோட்டுகளுடன் அங்கு நின்று கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் பிடித்தனர்.
    • உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்காளத்தில் உள்ளவர்களுடன் தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    உத்தரபிரதேச மாநிலம் போஜிபுரா பகுதியில் ஒரு கும்பல் ரூபாய் நோட்டுகளுக்கு 3 மடங்கு கள்ள நோட்டுகளை கொடுத்து பரிமாற்றம் செய்வதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது 3 பேர் கள்ளநோட்டுகளுடன் அங்கு நின்று கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.27 லட்சம் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் ஹர்வன்சிங் என்கிற சோனு, குர்னாம், சதாம் உசேன் என்று தெரிய வந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்த போது ரூ.1 லட்சம் கொடுத்தால் பதிலுக்கு ரூ.3 லட்சம் கள்ள நோட்டுகளை கொடுத்தது தெரிய வந்தது.மேலும் இவர்களுக்கு நேபாளம், டெல்லி, உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்காளத்தில் உள்ளவர்களுடன் தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    • வேலூர் வடக்கு போலீசார் அங்கு சிதறி கிடந்த ரூபாய் நோட்டுகளை சேகரித்தனர்.
    • கள்ள நோட்டுகளை வீசி சென்ற கும்பல் யார் என்பதை அறிய அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

    வேலூர்:

    வேலூர் கொணவட்டம் சென்னை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் திருமண மண்டபம் உள்ளது. இதன் அருகே இன்று காலை காரில் வந்த கும்பல் ஒன்று கட்டு கட்டாக 500 ரூபாய் நோட்டுகளை கொட்டிவிட்டு சென்று விட்டனர்.

    காற்றில் பிரிந்த ரூபாய் நோட்டுகள் சாலையில் பறந்தன. இதனை கண்ட வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ரூபாய் நோட்டுகளை போட்டி போட்டு எடுத்தனர். அதில் ஒருவர் இதுகுறித்து வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வேலூர் வடக்கு போலீசார் அங்கு சிதறி கிடந்த ரூபாய் நோட்டுகளை சேகரித்தனர். மேலும் பொதுமக்கள் எடுத்து வைத்திருந்த ரூபாய் நோட்டுகளையும் வாங்கினர். அதனை போலீஸ் நிலையம் கொண்டு வந்து எண்ணிய போது ரூ.14.50 லட்சம் ரூபாய் நோட்டுகள் இருந்தது.

    ரூபாய் நோட்டுகளை சோதனை செய்தபோது அது கலர் ஜெராக்ஸ் எடுத்த கள்ள நோட்டுகள் என தெரியவந்தது.

    கள்ள நோட்டுகளை வீசி சென்ற கும்பல் யார் என்பதை அறிய அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். இன்று காலையில் தேசிய நெடுஞ்சாலையில் வந்த வாகனங்கள் குறித்த விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர்.

    காற்றில் பறந்த ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் சிலர் எடுத்து சென்றனர். அவர்கள் இந்த ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தக்கூடாது என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    வியாபாரிகள் 500 ரூபாய் நோட்டுகளை வாங்கும்போது விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

    நேற்று முன்தினம் இரவு பள்ளிகொண்டா அருகே காரிலிருந்து லாரிக்கு பணத்தை மாற்றியபோது போலீசாரிடம் ரூ.14.70 கோடி சிக்கி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று காலை தேசிய நெடுஞ்சாலையில் கள்ள நோட்டுகளை வீசி சென்ற சம்பவம் வேலூரில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×