search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூய்மை கங்கா தேசிய இயக்கம்"

    • உத்தராகண்ட் உள்பட ஐந்து மாநிலங்களில் செயல்படுத்தப் படுகிறது.
    • ஆற்றுப் படுகை மேம்பாடு, கழிவுநீர் சுத்திகரிப்பு உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

    தூய்மை கங்கா தேசிய இயக்கத்தின் 45-வது நிர்வாக குழு கூட்டம் அதன் தலைமை இயக்குநர் ஜி.அசோக் குமார் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ரூ.1145 கோடி மதிப்பீட்டில் கங்கை நதியை தூய்மைப்படுத்தும் வகையில் வடிகால் மேலாண்மை, தொழில்துறை மாசு கட்டுப்பாடு, பல்லுயிர் பாதுகாப்பு மரம் நடுதல், ஆற்றுப் படுகை மேம்பாடு மற்றும் பரவலாக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு உள்பட 14 திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. 


    உத்தராகண்ட், உத்தரப்பிரதேசம், பிகார், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஐந்து முக்கிய கங்கை நதிப் படுக்கையில் உள்ள மாநிலங்களில் கழிவுநீர் மேலாண்மைக்கான எட்டுத் திட்டங்கள் இதில் அடங்கும்.

    ரூ. 308.09 கோடி மதிப்பில் நான்கு வடிகால் மேலாண்மை திட்டங்களை உத்தரப் பிரதேசத்தில் மேற்கொள்ள இந்த கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதேபோல அம்மாநிலத்தின் நான்கு மாவட்டங்களில் நான்கு பல்லுயிர் பூங்காக்களை அமைக்கவும் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டதாக மத்திய ஜல்சக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×