search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கஞ்சா வியாபாரிகள் கைது"

    • போலீசார் க.புதுப்பட்டி ரோட்டில் வாகன தணிக்கை யில் ஈடுபட்டு க்கொண்டி ருந்தனர். அப்போது சரக்கு வாகனத்தில் வந்த ஒரு கும்பலை மடக்கி சோதனை நடத்தினர்.
    • 12 கிலோ கஞ்சாவை கடத்தி வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். மேலும் கஞ்சா மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்தனர்.

    உத்தமபாளையம்:

    உத்தமபாளையம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாட்ராயன் தலைமையிலான போலீசார் க.புதுப்பட்டி ரோட்டில் வாகன தணிக்கை யில் ஈடுபட்டு க்கொண்டி ருந்தனர். அப்போது சரக்கு வாகனத்தில் வந்த ஒரு கும்பலை மடக்கி சோதனை நடத்தினர்.

    அதில் வந்த கம்பம் உலகத்தேவர் தெருவை சேர்ந்த பாண்டி (வயது33), கவுதம் (33), குரங்குமாயன் தெருவை சேர்ந்த கார்த்திக் (29), சூரியன் (34) ஆகியோர் ரூ.1.80 லட்சம் மதிப்பிலான 12 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தனர். போலீசார் கஞ்சா மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்து அவர்கள் 4 பேரையும் கைது செய்த னர்.

    இதேபோல் கூடலூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமை யிலான ேபாலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்த பாலு (71) என்பவர் 120 கிராம் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

    • கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தனர்.
    • போலீசார் அவர்களை கைது செய்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

    கூடலூர்:

    கூடலூர் தெற்கு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர்.

    அப்போது 8-வது வார்டு காந்தி கிராமம் பகுதியைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா (வயது 21), கோட்டை மேட்டுத்தெருவைச் சேர்ந்த கோபிநாத் (19) ஆகிய இருவரும் கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தனர்.

    போலீசார் அவர்களை கைது செய்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

    • மாமல்லபுரம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • வாகன சோதனையில் கஞ்சா வியாபாரிகள் 2 பேர் பிடிபட்டனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அவர்கள் இருவரும் கஞ்சா வியாபாரிகளான செங்கல்பட்டு திம்மராஜகுளம் பகுதியை சேர்ந்த அருள், மாமல்லபுரம் அடுத்த மணமையை சேர்ந்த குருமூர்த்தி என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து 2 கிலோ கஞ்சா, ரூ.13 ஆயிரம் ரொக்கம், 2 மோட்டார் சைக்கிள், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

    • தமிழகம் முழுவதும் ஆபரேஷன் கஞ்சா வேட்டை நடைபெறுகிறது.
    • ஏராளமான கஞ்சா வியாபாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் பயன்பாட்டை ஒழிக்க கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து ஆபரேஷன் கஞ்சா வேட்டை என்ற பெயரில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

    இந்த சோதனையில் தமிழகம் முழுவதும் உள்ள கஞ்சா வியாபாரிகளின் 2000 வங்கி கணக்குகள், சுமார் 50 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மற்றும் பணம் ஆகியவை முடக்கப்பட்டுள்ளன என்றும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

    நூற்றுக்கும் மேற்பட்ட கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, தென் மண்டலத்தில் மட்டும் 160 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தமிழக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

    ×