search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராவணன்"

    • நவராத்திரியை முன்னிட்டு ராம்லீலா நாடகம் நடத்தப்பட்டது.
    • நாடகத்தில் ராமனுக்கும் ராவணனுக்கும் இடையிலான போர் தொடங்கியது.

    உத்தரபிரதேச மாநிலம் அம்ரோகா மாவட்டத்தில் நவராத்திரியை முன்னிட்டு ராம்லீலா நாடகம் நடத்தப்பட்டது. அந்த நாடகத்தில் ராமன் ராவணனாக நடித்த 2 நடிகர்கள் உண்மையிலேயே சண்டையிட்டு கொண்ட நிகழ்வு அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ராம்லீலே நாடகத்தில் ராமனுக்கும் ராவணனுக்கும் இடையிலான போர் தொடங்கியது. அப்போது ராமனும் ராவணனும் அம்புகளை விட்டு சண்டையிட தொடங்குகின்றனர். அப்போது ஜெய்ஸ்ரீராம் என முழக்கங்கள் எழுப்பப்படுகின்றன.

    அப்போது ராவணனாக நடித்த நபர் திடீரென்று ராமனை தள்ளி விடுகிறார். அதனால் கோபமடைந்த ராமன் ராவணனை தாக்க வருகிறார். அப்போது ராமனை கீழே தள்ளி அவரை ராவணன் அடிக்க தொடங்குகிறார். உடனே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இருவரையும் பிரித்து சமாதானப்படுத்த முயற்சிக்கின்றனர்.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ராவணனின் பொம்மையை தசராவின்போது எரித்து கொண்டாடுவது வடமாநிலங்களில் வழக்கமாக உள்ளது.
    • ராம்லீலா நிகழ்ச்சிகளைக் கொண்டாடுவது தங்களின் கிராமத்துக்கு துரதிஷ்டத்தை வரவழைக்கும் என்று இவர்கள் நம்புகின்றனர்.

    நாடு முழுவதும் தசரா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியான ராவண வதம் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பிஸ்ராக் [Bisrakh] என்ற கிராமம் மட்டும் ஒவ்வொரு வருடமும் ராவணனின் இறப்புக்கு துக்கம் அனுசரிக்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளது.

    ராமாயணக் கதைப்படி ராவணன் தீய சக்தியாக சித்தரிக்கப்பட்டு அவரின் பொம்மையை தசராவின்போது எரித்து கொண்டாடுவது வடமாநிலங்களில் வழக்கமாக உள்ளது. மாறாக இந்த பிஸ்ராக் கிராமத்தில் ராவணன் ஆத்மா சாந்தியடைவதற்காகப் பூஜைகள் நடத்தப்படுகிறது.

    ராவணன் தங்களின் பிஸ்ராக் கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் தாங்கள் அனைவரும் ராவணனின் வழித்தோன்றல்கள் என்றும் இம்மக்கள் நம்புகின்றனர். எனவே தங்களின் மூதாதையான ராவணனின் புத்திக்கூர்மையையும், கடவுள் சிவன் மீது அவர் வைத்திருந்த பக்தியையும் போற்றுகின்றனர்.

    ராம்லீலா நிகழ்ச்சிகளைக் கொண்டாடுவது தங்களின் கிராமத்துக்கு துரதிஷ்டத்தை வரவழைக்கும் என்று இவர்கள் நம்புகின்றனர். இந்த கிராமத்தில் சிவன்கோவிலில் உள்ள லிங்கம் முற்காலத்தில் ராவணன் மற்றும் அவரது தந்தையால் வழிபடப்பட்டது என்று இவர்கள் கருதுகின்றனர். இவர்களை போல ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே உள்ள மந்தோர் கிரமத்தில் ராவணன் மூதாதையாக கருத்துப்பட்டு அம்மக்களால் வழிபடப்பட்டு வருகிறார்.

     

    தற்போது தங்கள் மூதாதை ராவணனுக்காகக் கோவில் கட்டவும் இவர்கள் திட்டமிட்டுள்ளனர். கதைப்படி ராவணன் இலங்கையைச் சேர்ந்தவர் என்று பொதுவாகக் கூறப்பட்டாலும், வெவ்வேறு பகுதிகளில் ராமாயணம் வெவ்வேறு வகையாகப் புழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

    உத்தரப் பிரதேசத்தின் கான்பூர், மத்திய பிரதேசத்தின் விதிஷா மாவட்டம், கர்நாடகாவின் மாண்டியா மாவட்டம் ஆகியவற்றில் ராவணனுக்குக் கோவில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • ஆதித்ய ஹ்ருதயம் சூரியனைக் குறித்த ஒரு துதி.
    • இது விசேஷ மந்திரங்கள் அடங்கிய ஒன்று! ராமர் இதை ஓதி ராவணனை எதிர் கொண்டார்.

    ஸ்ரீ ராமர் ராவணனை எதிர்த்து போர் புரிந்த பொழுது, அகஸ்திய மாமுனிவர் ராமர் எதிரே தோன்றி ஆதித்ய ஹ்ருதயம் என்னும் சக்தி வாய்ந்த மந்திரத்தை உபதேசித்து அருளினார்.

    ஆதித்ய ஹ்ருதயம் சூரியனைக் குறித்த ஒரு துதி.

    இது விசேஷ மந்திரங்கள் அடங்கிய ஒன்று! ராமர் இதை ஓதி ராவணனை எதிர் கொண்டார்.

    ராவணன் மீது பலம் பொருந்திய பாணங்கள் பாய்ந்தாலும் அவன் சமாளித்து மீண்டும் மீண்டும் எழுவதைக் கண்டார் ராமர்.

    அருகில் இருந்த விபீஷணன் ராமரைக் குறிப்பாக பார்த்தார்.

    விபீஷணன் ஏதோ சொல்ல விரும்புவதைத் தெரிந்து கொண்ட ராமர் விபீஷணனை அருகில் அழைத்தார்.

    ராமரை நோக்கி விபீஷணன், "ஐயனே! அன்னையை அனவரதமும் (காம வசத்தால்) நினைத்துக் கொண்டே

    இருக்கிறான் ராவணன் உலகத்திற்கே அருள்பாலிக்கும் அன்னையை அவன் இடைவிடாது அடி மனத்திலிருந்து

    நினைப்பதால் இயல்பாகவே நினைப்பவர் தம்மைக் காக்கும் அன்னையின் சக்தி அவனைக் காக்கிறது

    ஆகவே அந்த ஆசையை முதலில் நீங்கள் அழித்தால், பின்னர் அவன் அழிந்து விடுவான்"

    என்று ராவணனின் உயிர் ரகசியத்தைக் கூறினார்.

    உடனே ராமர், ஒரு பாணத்தை எடுத்து அவன் நாபியை நோக்கி அடித்தார்.

    அடிவயிற்றில் இருந்த அன்னை நினைவு போனவுடன் அது ராவணன் மரணத்திற்கு வழி வகுத்தது.

    அடுத்து பத்து பாணங்களால் பத்துக் தலைகளையும், இருபது பாணங்களால் இருபது கைகளையும் அறுத்துக் தள்ளினார் ராமர்.

    ஆக முப்பத்தியொரு பாணங்களை ராமர் செலுத்தி ராவணனை அழித்ததை துளசிதாசர் அழகாக அரக்கன் அழிவின் ரகசிய விளக்கமாக ராமசரித மானசத்தில் கூறுகிறார்.

    ஆதித்ய ஹ்ருதயம் தரும் பலன்கள்

    இப்படி பலம் பொருந்திய எதிரியை அழிக்க  வழி வகுத்தது ஆதித்ய ஹ்ருதயம்,

    எதிரி அழியத் தகுந்த உபாயங்களைத் தானே கண்டு பிடித்து அழிக்கும் மந்திரம் ஆதித்ய ஹ்ருதயம்.

    ஆதித்ய ஹ்ருதயத்தைத் தினமும் ஓதினால் பெரும் பயன் பெறலாம் என மகான்களும் ஞானிகளும் காலம் காலமாகக் கூறி வருகின்றனர்.

    • பக்தியோடு இருந்தாலும், ஒழுக்கத்தை அவன் பின்பற்றவில்லை.
    • வெற்றிக்கு ஒழுக்கம் முக்கியம் என்பதை காட்டும் நாளாக விஜயதசமி அமைந்துள்ளது.

    சிவபக்தனாக ராவணன், தினமும் கோவிலுக்குச் சென்று சிவபார்வதியை வணங்குவது வழக்கம்.

    பக்தியோடு இருந்தாலும், ஒழுக்கத்தை அவன் பின்பற்றவில்லை.

    சீதையை சிறையெடுத்து அசோகவனத்தில் வைத்தான்.

    இதனால், பார்வதிதேவிக்கு ராவணன் மீது சீற்றம் உண்டானது.

    பக்தியை விட ஒழுக்கமே முக்கியம் என்பதை உலகிற்கு உணர்த்த எண்ணினாள்.

    விஸ்வாமித்திரர் மூலம் சிறுவயதிலேயே ராமன் தேவிமந்திரத்தை அறிந்திருந்தார்.

    அம்மந்திரத்தை ஜெபித்து நவராத்திரி விரதம் மேற்கொண்டார்.

    அவருக்கு துர்க்கையாக காட்சியளித்த பார்வதி, யுத்தத்தில் வெற்றி கிடைக்க அருள்புரிந்தாள்.

    ராவணனை வெற்றி கொண்ட தினத்தையே வடமாநிலங்கள் சிலவற்றில் விஜயதசமியாக மக்கள் கொண்டாடுகின்றனர்.

    வெற்றிக்கு ஒழுக்கம் முக்கியம் என்பதை காட்டும் நாளாக விஜயதசமி அமைந்துள்ளது.

    • அம்பிகையின் திருநாமம் விசாலாட்சி ஆகும்.
    • நவ கன்னியர்கள் இங்கு காட்சி தருகிறார்கள்.

    மகாமகக் குளத்தின் வடக்கு கரையில் அமைந்துள்ளது.

    ராவணனைக் கொல்ல உருத்திராம்சம் பெற வேண்டி ராமர் இங்கு வந்து தவம் புரிந்து சிவ பெருமானை வேண்டினார்.

    சிவ பெருமானும் ராமருக்கு உத்திராட்ச ஆரோகணம் கொடுத்தார்.

    நவநதிகளின் கன்னியர்களை சிவ பெருமான் தன்னோடு இங்கு அழைத்து வந்து இந்தக் கோவிலில்தான் தங்க வைத்தார்.

    மறுநாள் மகாமக குளத்தில் நீராட வேண்டிய வசதிகளையும் செய்து கொடுத்தார்.

    காசியிலிருந்து வந்ததால் காசி விஸ்வநாதர் என்று அழைக்கப்படுகிறார்.

    இந்தக் கோவில் மேற்கு திசை நோக்கி இருக்கிறது.

    இறைவனும் மேற்குத் திசையில் அமர்ந்து அருள் பாலிக்கிறார்.

    இங்குள்ள அம்பிகை தெற்கு திசையில் இருக்கிறார்.

    அம்பிகையின் திருநாமம் விசாலாட்சி ஆகும்.

    நவ கன்னியர்கள் இங்கு காட்சி தருகிறார்கள்.

    முதலில் கங்கை, யமுனை, நர்மதை, சரஸ்வதி, நடுவில் காவிரி அடுத்து கோதாவரி, கிருஷ்ணா, துங்கபத்ரா, சரயு என்று வரிசையாக இருக்கிறார்கள்.

    இதில் கங்கை மட்டும் சங்கு, சக்கரம் அபய வரதத்துடன் நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகின்றார்.

    • தை மாதம் மாட்டுப் பொங்கல், ஸ்ரீ தாயார் தீர்த்தவாரி நடைபெறும்.
    • சுவாதி நட்சத்திரம் மற்றும் பிரதோஷங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    1. எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனின் தச அவதாரங்களில் மிக முக்கியமானது, தீமைகளை அழித்து நன்மையை வாழவைத்த ஸ்ரீ நரசிம்ம அவதாரமாகும்.

    இந்த நரசிம்ம அவதாரமே, இத்திருக் கோயிலின் மூல மூர்த்தியாக அமையப்பெற்றுள்ளது.

    2. பதினாறு திருக்கரங்களுடன் அமையப்பெற்ற ஸ்ரீ நரசிம்மர் தமிழ்நாட்டில் இத்தலம் தவிர வேறெங்கும் இல்லை என்பது மிகசிறப்பான ஒன்றாகும்.

    3. இரணியனின் மகன் பிரகலாதனுக்காக இரணியனின் கொடுமைகளை அழிக்க தூணிலிருந்து தோன்றிய அவதாரம் நரசிம்ம அவதாரமாகும்.

    இது சிங்கிரிகுடி நரசிம்மர் வரலாறு குறித்து மார்கண்டேய புராணத்துள் நரசிம்ம வன மாயுத்மியம் என்ற பகுதியில் விரிவாக கூறப்பட்டுள்ளது.

    4. இத்திருக்கோயிலில் அமையப்பெற்ற அனைத்து கல்வெட்டுகளுமே முற்றுபெறாத நிலையில் காணப்படுகிறது.

    இராஜ கோபுரவாயிலில் 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த எழுத்தமைதியுடைய ஒரு கல்வெட்டு செய்யுள் வடிவில் அமைந்துள்ளது.

    மகா மண்டபத்தின் தெற்கு சுவரில் கி.பி. 12 ம் நூற்றாண்டின் எழுத்தமைதியுடைய கல்வெட்டு ஒன்று உள்ளது.

    5. நீண்ட சதுரமான மாடவீதிகளை கொண்ட சிங்கிரிகுடி எனும் ஊரில் நடுநாயகமாக அமையப் பெற்றுள்ளது இத்திருக்கோயில்.

    6. இத்திருக்கோயில் மேற்குதிசை நோக்கி அமையப்பெற்ற சிறப்பு வாய்ந்த திருக்கோயிலாகும்.

    7. ஐந்து நிலைகளை கொண்ட கம்பீரமான இராஜ கோபுரமும் வைணவ சிந்தாத்தப்படியான 24 தூண்களை கொண்ட வசந்த மண்டபமும் அமைந்துள்ளது.

    8. வைணவத் திருக்கோயிலான இத்திருக்கோயில் இராஜ கோபுரத்தை அடுத்து பிள்ளையார் திருகோயிலும் அமையப்பெற்றது. வேறெங்கும் காண இயலாத தனிச்சிறப்பாகும்.

    9. இத்திருக்கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீ நரசிம்மர், திருவகீந்திரபுரத்து தேவ நாதனே என திருமங்கை ஆழ்வாரது பாசுரத்தில் கூறப்பட்டுள்ளது.

    10. இத்தலத்தில் 1. ஸ்ரீ நரசிம்மர் சன்னதி, 2. ஸ்ரீ கனகவல்லி தாயார் சன்னதி, 3. ஸ்ரீ ஆண்டாள் சன்னதி, 4. ஸ்ரீ ராமர் சன்னதி, 5. ஆழ்வார்கள் சன்னதி, 6. ஸ்ரீ விநாயகர், 7. ஸ்ரீ துர்க்கா சன்னதி ஆகியவை முக்கிய சன்னதிகளாகும்.

    11, சன்னதி திறந்திருக்கும் நேரங்கள்:

    காலை 7.30 மணி முதல் 12.00 மணி வரை

    மாலை 4.30 மணி முதல் 9.00 மணி வரை

    12. பூஜை காலங்கள்:

    காலை 9.00 மணி காலைசந்தி

    பகல் 12.00 மணி உச்சிக்காலம்

    மாலை 6.00 மணி நித்தியாணு

    மாலை 6.30 மணி சாயரட்சை

    இரவு 8.30 மணி அர்த்தசாமம்

    13. இத்தலத்து தாயார் பெயர் ஸ்ரீ கனகவல்லித் தாயார்

    14. விமானத்தின் பெயர் ஸ்ரீ பாவன விமானம்

    15. ஜமத்க்கனி தீர்த்தம், இந்திர தீர்த்தம், ப்ருகு தீர்த்தம், வாமன தீர்த்தம், கருட தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் சிங்கிரிகுடியில் உள்ளன.

    16. இங்கு புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு ஆராதனை நடைபெறும்.

    17. தை மாதம் மாட்டுப் பொங்கல், ஸ்ரீ தாயார் தீர்த்தவாரி நடைபெறும்.

    18. சுவாதி நட்சத்திரம் மற்றும் பிரதோஷங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    19. புதுச்சேரி ரயில் நிலையத்திலிருந்தும் திருப்பாதிரிப்புலியுர் ரயில் நிலையத்திலிருந்து சமதொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

    20. இத்தலம் கடலூர், புதுச்சேரியில் இருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ளது.

    • அப்போது லட்சுமி முனிவர்களை பார்க்காமல் நரசிம்மரையே பார்த்தார்.
    • இந்த திருக்கோவிலில் பஞ்சராதிர ஆகமப்படி இரண்டு காலபூஜைகள் நடக்கின்றன.

    முனிவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நரசிம்மர் பூவரசன்குப்பம் தலத்தில் மகாலட்சுமியை தன் இடது மடியில் அமர்த்தி காட்சி அளித்தார்.

    அப்போது லட்சுமி முனிவர்களை பார்க்காமல் நரசிம்மரையே பார்த்தார்.

    உடனே நரசிம்மர், "நீ முனிவர்களை பார்த்து அருள்பாலிக்காமல் என்னை மட்டும் ஏன் பார்த்து கொண்டிருக்கிறாய்" என்றார்.

    அதற்கு லட்சுமி, "கோபமாக உள்ள நீங்கள் உங்களது வெப்பத்தை, தரிசிக்க வரும் பக்தர்களிடம் காட்டக்கூடாது. எனவேதான் நான் உங்களையே பார்த்து கொண்டிருக்கிறேன்" என்றார்.

    அதன் பின் நரசிம்மரின் கட்டளைக்கிணங்க லட்சுமி ஒரு கண்ணால் நரசிம்மரையும், மற்றொரு கண்ணால் பக்தர்களையும் பார்த்து அருள்பாலித்து வருகிறாள்.

    பிரகாரத்தினுள் இராமானுஜர், நாகசன்னதியும் இருக்கிறது.

    இந்த லட்சுமி நரசிம்மபெருமாளை 48 நாட்கள் விரதமிருந்து உள்ளன்போடு வழிபட்டால் கடன்தொல்லைகள் தீரும்.

    பதவி உயர்வு வந்து சேரும் மற்றும் எதிரிகள் எல்லாம் இல்லாமல் நண்பர்களாகி விடுகிறார்கள் என்பது ஐதீகம்.

    இந்த திருக்கோவிலில் பஞ்சராதிர ஆகமப்படி இரண்டு காலபூஜைகள் நடக்கின்றன.

    இதில் மற்றுமொரு சிறப்பு சித்திரை மாதம் நடக்கும் நரசிம்ம ஜெயந்தியன்று சகஸ்ரகலச திருமஞ்சனம் எனும் இந்த விழா இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    ஸ்ரீலட்சுமி நரசிம்மபெருமாளை வேண்டினால் கடன் தொல்லை தீரும், பொருள்கள் குவியும், இங்கே உற்சவர் வரதராஜ பெருமாள் இவர் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் காட்சி தருகிறார்.

    தினமும் இங்கே அன்னதானம் நடைபெறுகிறது.

    சுவாதி நட்சத்திரத்தன்று விசேஷ வழிபாடுகள் மற்றும் பூஜைகள் உண்டு.

    • ஓம் நமோ நாராயணா என்னும் நாமத்தை நிலை நிறுத்திய அவதாரம்தான் நரசிம்ம அவதாரம்.
    • வேண்டுதல் நிறைவேற நெய்விளக்கு ஏற்றி, துளசி அர்ச்சனை செய்கிறார்கள்.

    கடலூர் மாவட்டம் சிங்கிரி குடியில், 16 திருக்கரங்களுடன் இரணியனை சம்ஹாரம் செய்த நிலையில் நரசிம்மர் உக்கிரமாக அருள் பாலிக்கிறார்.

    ஓம் நமோ நாராயணா என்னும் நாமத்தை நிலை நிறுத்திய அவதாரம்தான் நரசிம்ம அவதாரம்.

    "நாளை என்பது நரசிம்மனிடத்தில் இல்லை' என்னும் வாக்கிற்கு ஏற்ப, சரணடைந்த உடனேயே அருள்பாலிப்பவர் நரசிம்மர்.

    ஐந்து நிலை, ஏழு கலசங்களுடன் மேற்கு பார்த்த ராஜகோபுரமும், மிகப்பெரிய கொடி மரமும் உள்ளது.

    வைகானஸ ஆகமப்படி இத்தலத்தில் பூஜை நடக்கிறது.

    மன நிலை பாதிப்பு, கடன் தொல்லை, திருமணத்தடை, குழந்தை பாக்கியம், எதிரிகளால் தொந்தரவு, கிரக தோஷம் உள்ளவர்கள் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

    வேண்டுதல் நிறைவேற செவ்வாய்க் கிழமைகளில் நெய்விளக்கு ஏற்றி, துளசி அர்ச்சனை செய்கிறார்கள்.

    பிரகலாதனின் விருப்பப்படி நரசிம்மர், மூலஸ்தானத்தில் 16 திருக்கரங்களுடன், இரணியனை வதம் செய்த கோலத்தில் மிகப்பிரமாண்டமாக அருள் பாலிக்கிறார்.

    இரணியனை மேற்கு பார்த்து நின்று நரசிம்மர் வதம் செய்ததைக் குறிக்கும் வகையில், மேற்கு பார்த்த நிலையில் உள்ளார்.

    ஒரே மூலஸ்தானத்தில் மூன்று நரசிம்மர் அருள்பாலிப்பதை காண்பது அரிது.

    இவ்வகை அபூர்வ நரசிம்மர் தலங்கள் ராஜஸ்தானிலும், தமிழகத்தில் இங்கு மட்டுமே உள்ளதாகக் கூறுகிறார்கள்.

    மற்ற நரசிம்மர் தலங்களை விட சிறப்பு வாய்ந்ததாக கருதப்படும் தலம் இது.

    உற்சவர் பிரகலாத வரதன், ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் பாவன விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்.

    • அவர் 16 கைகளுடன் சிங்கிரிகுடி தலத்தில் எழுந்தருளியுள்ளார்.
    • இவ்வாறு ஒரே கருவறையில் மூன்று நரசிம்மர் அருள்பாலிப்பது சிறப்பாகும்.

    தன் பக்தன் பிரகலாதன், அவனது தந்தை இரணியனால் கொடுமைப்படுத்த படுவதை அறிந்த திருமால், நரசிம்ம அவதாரம் எடுத்து அவனைக் கொன்றார்.

    அவர் 16 கைகளுடன் சிங்கிரிகுடி தலத்தில் எழுந்தருளியுள்ளார்.

    அவரது கோபத்தை தணிக்கும் வகையில் நரசிம்மரின் இடப்புறம் இரணியனின் மனைவி நீலாவதி, வலதுபுறம் மூன்று அசுரர்கள், பிரகலாதன், சுக்கிரன், வசிஷ்டர் ஆகியோர் உள்ளனர்.

    வடக்கு நோக்கியபடி யோக நரசிம்மர், பாலநரசிம்மர் உள்ளனர்.

    இவ்வாறு ஒரே கருவறையில் மூன்று நரசிம்மர் அருள்பாலிப்பது சிறப்பாகும்.

    உற்சவர் பிரகலாத வரதன், ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.

    நரசிம்மர் கைகளில் பிரயோக சக்கரம், குத்து கத்தி, பாணம், சங்கு, வில், கதை, கேடயம், வெட்டப்பட்ட தலை ஆகியவற்றை ஏந்தியுள்ளார்.

    மற்ற கைகள் இரணியனை வதம் செய்த நிலையில் உள்ளது.

    • உலகிலேயே இரட்டைஆஞ்சநேயர் உள்ள ஒரே சன்னதி இந்த ஆலயத்தில் உள்ளது.
    • நடு நாட்டு வைணவத் தலங்களில் பரிக்கல் தலம் தனித்துவம் கொண்டது.

    1. நடு நாட்டு வைணவத் தலங்களில் பரிக்கல் தலம் தனித்துவம் கொண்டது.

    2. பரிக்கல் ஆலய கருவறைக்குள் ஸ்ரீவியாசாரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீஆஞ்சநேயர் உள்ளார்.

    3. உலகிலேயே இரட்டைஆஞ்சநேயர் உள்ள ஒரே சன்னதி இந்த ஆலயத்தில் உள்ளது.

    4. இத்தலத்து லட்சுமி நரசிம்மர் அனைத்து பிரிவு மக்களாலும் குல தெய்வமாக கொண்டாடப்படுகிறார்.

    5. பரிக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் அரை மைல் தொலைவில் இந்த ஆலயம் உள்ளது.

    6. சென்னை&திருச்சி நெடுஞ்சாலையில் கெடிலம் கூட்ரோட்டில் இருந்து இந்த ஆலயத்துக்கு செல்ல பஸ் வசதி உள்ளது.

    7. விழுப்புரத்தில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் வழித்தடத்தில் சுமார் 21 கி.மீ. தொலைவுக்கு இத்தலம் உள்ளது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

    8. விழுப்புரத்தில் இருந்து இந்த ஆலயத்துக்கு வர காலை 2 தடவை, மதியம் 1 தடவை, மாலை 1 தடவை ஆகிய 4 தடவை மட்டுமே பஸ் வசதி உள்ளது.

    9. கெடிலம் பகுதியில் இருந்து இத்தலத்துக்கு வர மினி பஸ், ஆட்டோ வசதி இருக்கிறது.

    10. 1800 ஆண்டுகள் பழமையான இத்தலம் மிகச் சிறந்த பிரார்த்தனை தலமாகும்.

    11. பரிக்கல் தலத்தில் இருந்து பூவரசன் குப்பம் தலம் சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது.

    12. இத்தலம் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரைக்கும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரைக்கும் திறந்து இருக்கும்.

    13. காலை 8 மணி முதல் 9 மணி வரை காலசாந்தி பூஜை, 11 மணி முதல் 12 மணி வரை உச்சிகால பூஜை, இரவு 7.30 மணி முதல் 8 மணி வரை ராக்கால பூஜை நடைபெறும்.

    14. இத்தலத்தில் ரூ.10 கட்டணம் செலுத்தி சகஸ்ரநாமம் அர்ச்சனை செய்யலாம்.

    15. இத்தலத்தில் வருடத்தில் 12 மாதங்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. சித்திரையில் பிரம்மோற்சவம், வைகாசியில் நரசிம்ம ஜெயந்தி நடத்தப்படுகிறது.

    16. ஆந்திராவைச் சேர்ந்த பலர் இத்தல நரசிம்மரை குல தெய்வமாகக் கொண்டாடுகிறார்கள்.

    எனவே தெலுங்கு வருடப் பிறப்பு இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

    17. முதல் அமைச்சரின் அன்னதானத்திட்டம் இத்தலத்தில் செயல்படுத்தப்படுகிறது.

    தினமும் 50 பேருக்கு மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது.

    18. இந்தியாவிலேயே இத்தலத்தில் மட்டுமே நரசிம்மரும் லட்சுமி தாயாரும் ஆலிங்கனம் செய்தபடி உள்ளனர்.

    19. திருமண தடை இருப்பவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆலயத்தில் வழிபட உடனடி பலன் கிடைக்கிறது.

    20. நரசிம்மரிடம் வேண்டிக் கொண்டவர்கள் இத்தலத்தில் எண்ணை, பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, மஞ்சள், சந்தனம் ஆகியவை மூலம் அபிஷேகம் செய்யலாம்.

    21. இத்தலத்தில் செய்யப்படும் வழிபாடுகளால் நவக்கிரக தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம்.

    22. முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களும் இத்தலத்துக்கு வந்து வழிபாடுகள் செய்வது குறிப்பிடத்தக்கது.

    23. வரதராஜபெருமாள் தெற்கு நோக்கி உள்ளார். ஸ்ரீரங்கத்திலும் வரதராஜ பெருமாள் இதே அமைப்புடன்தான் உள்ளார்.

    24. இத்தலத்தின் புராண கால பெயர் ''பரகலா'' என்பதாகும்.

    25. ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திர தினத்தன்று மாலையில் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்படுகிறது.

    • அந்த ஆலயத்தில் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை விதம், விதமான வழிபாடுகள் நடத்தப்பட்டன.
    • சுவாதி உள்பட நரசிம்மருக்கு உகந்த நாட்களில் இந்த வழிபாட்டை செய்வது மிகவும் நல்லது.

    பரிக்கல் லட்சுமி நரசிம்மர் ஆலயம் எத்தனையோ பழமை சிறப்புகள் கொண்டது.

    அந்த ஆலயத்தில் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை விதம், விதமான வழிபாடுகள் நடத்தப்பட்டன.

    அவற்றில் பல வழிபாடுகள் கால ஓட்டத்தில் மறைந்து விட்டன.

    அந்த வழிபாடுகளில் சில தற்போது மீண்டும் நடைமுறைக்கு வரத் தொடங்கியுள்ளன.

    அதில் ஈரத்துணியுடன் 48 தடவை பரிக்கல் ஆலய முதல் பிரகாரத்தை சுற்றி பிரதட்சணம் செய்யும் வழிபாடு புத்துயிர் பெற்றுள்ளது.

    யார் ஒருவர் "ஓம் நமோ நாராயணா" என்று உச்சரித்தப்படி பரிக்கல் லட்சுமி நரசிம்மரை நினைத்து மனம் உருகி ஈர உடையுடன் 48 தடவை பிரதட்சணம் செய்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக பலன் கிடைக்கும்.

    அவர்கள் என்ன வேண்டுதல் வைக்கிறார்களோ அதை லட்சுமி நரசிம்மர் நிறைவேற்றி வைப்பார்.

    இந்த வழிபாட்டுக்கு உதவும் வகையில் பரிக்கல் ஆலயம் அருகில் இரவில் பக்தர்கள் தங்குவதற்கான வசதிகள் உள்ளன.

    இரவில் அங்கு தங்கி விட்டு அதிகாலை எழுந்து குளித்து விட்டு ஈரத்துணியுடன் 48 தடவை ஆலய பிரதட்சணம் செய்யலாம்.

    சுவாதி உள்பட நரசிம்மருக்கு உகந்த நாட்களில் இந்த வழிபாட்டை செய்வது மிகவும் நல்லது.

    பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஆண்டுதோறும் பல திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

    பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஆண்டு தோறும் பல திருவிழாக்கள், பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன.

    தைத்திங்கள் 5ம் நாள் பரிக்கல் நரசிம்மர் புறப்பாட்டில் ஊர்வலமாக பெண்ணையாறு சென்று அங்கு ஒரு நாள் இரவு தங்குவார்.

    இது ஒரு பிரார்த்தனை திருத்தலம்.

    இங்கு பக்தர்களுடைய விருப்பம் நிறைவேற வேண்டுமென்றால், அதற்கு இங்கு பொதுமக்களால் அர்ச்சகரை கொண்டு ஆகம விதிப்படி பூஜைகள் நடத்தப்படுகின்றன.

    பொதுவாக மனிதர்களுக்கு மூன்று விதமான துன்பங்கள் நேரிடும்.

    1. கடன் தொல்லை.

    2. பக்கத்திலுள்ளவர்களாலோ அல்லது உறவினர்களால் ஏற்படும் பகை.

    3. வியாதியினால், மருந்துகளாலோ குணப்படுத்த முடியாத படி மிகப் பெரிய தொல்லை.

    இப்படிப்பட்ட தொல்லைகளிலிருந்து விடுபட ஒரு சிறப்பு பூஜை இக்கோவிலில் நடத்தப்படுகிறது.

    ×