search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்வியை தொடங்கிய குழந்தைகள்"

    • திண்டுக்கல்லில் இன்று விஜயதசமியை முன்னிட்டு ஏராளமான பெற்றோர் தங்கள் குழந்தைகளின் கல்வியை போதிக்கும் நிகழ்ச்சியை தொடங்கினர்.
    • வழிபாடு நடத்தி அரிசி மற்றும் நெல்லில் குழந்தைகள் அகர வரிசையின் முதல் எழுத்தான ‘அ’ என்ற எழுத்தை எழுத வைத்தனர்.

    திண்டுக்கல்:

    விஜயதசமி நாளில் குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தலை தொடங்கும் வித்யாரம்பம் நடத்தப்படுவது வழக்கம். திண்டுக்கல்லில் இன்று விஜயதசமியை முன்னிட்டு ஏராளமான பெற்றோர் தங்கள் குழந்தைகளின் கல்வியை போதிக்கும் நிகழ்ச்சியை தொடங்கினர்.

    சரஸ்வதி படம் முன்பு தேங்காய், பழம், மஞ்சள்குங்குமம் உள்ளிட்டவை வைத்து வழிபாடு நடத்தி அரிசி மற்றும் நெல்லில் குழந்தைகள் அகர வரிசையின் முதல் எழுத்தான 'அ' என்ற எழுத்தை எழுத வைத்தனர். மேலும் குழந்தைகளின் நாக்கிலும் கல்விக்கான போதனையை தொடங்கும் வகையில் அகர எழுத்துக்களை எழுதினர்.

    பல்வேறு மழலையர் பள்ளிகளில் காலை முதலே இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதனால் பள்ளிகளில் கூட்டம் அலைமோதியது. கல்விக்குரிய கடவுள்களான சரஸ்வதி மற்றும் ஹயகிரீவர் படங்களை வைத்து அதன்முன்பு குழந்தைகளை அமரவைத்து கணபதி நாமத்தை தொடங்கி விரலிமஞ்சளால் அகர எழுத்துக்கள் எழுத வைக்கப்பட்டன.

    முன்னதாக இதற்காக சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டன.

    ×