search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரவேணு"

    • தேயிலை தோட்டத்தில் மலைப்பாம்பு ஒன்று படுத்து கிடந்தது
    • 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக பிடித்து மீட்டனர்.

    அரவேணு,

    கோத்தகிரி கட்டபெட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட பிக்காபதி பிரிவு, பெரகனி நெடுகுளா கிராமத்தில் குடியிருப்புகளை ஒட்டி உள்ள தேயிலை தோட்டத்தில் மலைப்பாம்பு ஒன்று படுத்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியான தொழிலாளர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவல் அறிந்ததும் வனசரகர் செல்வகுமார் உத்தரவின் பேரில் வனக்காப்பாளர் குட்டன், வன காவலர் ராஜேஷ் உள்ளிட்ட வனத்துறையினர் விரைந்து வந்து தேயிலை தோட்டத்தில் படுத்து கிடந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக பிடித்து மீட்டனர். பின்னர் அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று பாதுகாப்பாக விட்டனர்.

    • பல இடங்களில் வங்கி ஏ.டி.எம். மையங்கள் உள்ளன.
    • வங்கிக்கு சென்றால் ஏ.டி.எம்.மிற்கு செல்லுங்கள் என்கிறார்கள்.

     அரவேணு

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் மக்கள் பயன்பாட்டுக்காக பல இடங்களில் வங்கி ஏ.டி.எம். மையங்கள் உள்ளன. கடந்த சில நாட்களாக இந்த ஏ.டி.எம். மையங்களில் போதிய பணம் இல்லாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கூறுகையில் காலை முதல் மாலை வரை நாங்கள் பல ஏ.டி.எம். மையங்களுக்கு சென்றோம். ஆனால் எந்த ஏ.டி.எம்.மிலும் பணம் இல்லை. வங்கிக்கு சென்றால் ஏ.டி.எம்.மிற்கு செல்லுங்கள் என்கிறார்கள். நாங்கள் எங்கே போவோம் என தெரிவித்தனர்.

    • சந்தைகளில் ரூ.15 முதல் ரூ.17வரை மட்டுமே கிடைக்கிறது.
    • நல்ல ஒரு லாபமாக இருக்கும் என்றனர்.

    அரவேணு,

    கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளான நெடுகுளா, உயிலட்டி, கேர்க்கம்பை, காக்காசோலை, மிளிதேன் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிகளிவல் மேரக்காய் பயிட்டுள்ளனர்.

    தற்போது பெய்த மழை காரணமாக மேரக்காய் நல்ல விளைச்சலை எட்டியுள்ளது. மேரக்காய் விளைச்சலுக்கு அதிகபடியான தண்ணீர் தேவைப்படும். கடந்த 3 வாரங்களாக அவ்வப்போது மிதமானது முதல் சாரல் மழை பெய்து வருவதால் விவசாயத்திற்கு நீர்வரத்தும் அதிகரித்துள்ளது.

    தற்போதைய விளைச்சலுக்கு முந்தைய விளைச்சல் அறுவடையில் சமவெளிப்பகுதி சந்தைகளில் மேரக்காய் கிலோ ஒன்றிற்கு ரூ.25 முதல் ரூ.30 விலை கிடைத்த நிலையில் தற்போது மேரக்காய் விளைச்சல் அதிகரித்த நிலையில் தற்போது சமவெளிப் பகுதி சந்தைகளில் ரூ.15 முதல் ரூ.17வரை மட்டுமே கிடைக்கிறது.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், மேரக்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. ஆனால் விலை சற்று குறைந்து காணப்படுகிறது. வண்டி வாடகை, பணியாட்கள் கூலி, முதலீடு ஆகியவைகளை ஈடுகட்ட இது பெரிய லாபம் இல்லை என்றாலும் சமநிலை விலையாக இருக்கிறது. இருப்பினும் 25 ரூபாயில் இருந்து 30 ரூபாய் வரை கிடைத்தால் நல்ல ஒரு லாபமாக இருக்கும் என்றனர்.

    • இந்த பூவினை பேப்பர் பூ என கூறுவார்கள் இதன் மீது தண்ணீர் பட்டவுடன் பூவானது தானாகவே மூடிக்கொள்ளும்
    • சாலை பகுதிகளில் தான் இந்த பூக்கள் அதிகம் வளரும்.

    அரவேணு

    கோத்தகிரி பகுதிகளில் மஞ்சள் நிற பேப்பர் பூக்கள் பூத்துக் குலுங்குகிறது. இதன் மீது தண்ணீர் பட்டவுடன் பூவானது தானாகவே மூடிக்கொள்ளும் வெயில் பட்டவுடன் தானாக விரிந்து கொள்ளும் தன்மை கொண்டது.

    இந்த பூ 3 நாட்களுக்கு அல்லது 4 நாட்கள் வரை பறித்த பின்னும் வாடாமல் இருக்கும். இந்த பூவின் மீது சுற்றுலா பயணிகளுக்கு அதிகமான ஈர்ப்பு உள்ளது.

    இப் பூவினை சுற்றுலா பயணிகள் 5 பூக்கள் ரூ.10, 20 பூக்கள் ரூ.20 ெகாடுத்து வாங்கி வருகிறார்கள். சுற்றுலா பயணிகளிடம் அதிக வரவேற்பை பெற்ற சுற்றுலா பூவாகும். சாலை பகுதிகளில் தான் இந்த பூக்கள் அதிகம் வளரும்.

    ×