search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீன் வியாபாரி"

    • அரிய வகை மீனில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது.
    • பரிசு தொகையை தனது குழுவினருடன் பகிர்ந்து கொள்வதாக ஹாஜி கூறினார்.

    பாகிஸ்தான் கராச்சி நகரை சேர்ந்தவர் ஹாஜி பலோச். இவர், இப்ராஹிம் ஹைதேரி மீன்பிடி கிராமத்தில் வசித்து வருகிறார். மீன்பிடி தொழில் செய்து வரும் ஹாஜி தான் பிடிக்கும் மீன்களை ஏலத்தில் விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

    இந்நிலையில், ஹாஜியும் அவரது குழுவும் கடந்த திங்கட்கிழமை அன்று அரபிக்கடலில் இருந்து தங்க மீன் அல்லது "சோவா" என்று அழைக்கப்படும் அரிய வகை மீனைப் பிடித்தனர்.

    கராச்சி துறைமுகத்தில் மீனவர்கள் தாங்கள் பிடித்த மீனை ஏலம் விடுத்தபோது சுமார் 7 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டன. இந்த அரிய வகை மீனில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது.

    சோவா மீன் விலை உயர்ந்ததாகவும், அரிதானதாகவும் கருதப்படுகிறது. ஏனெனில் அதன் வயிற்றில் உள்ள உறுப்புகள் சிறந்த மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளன. மீனில் இருந்து ஒரு நூல் போன்ற பொருள் அறுவை சிகிச்சை முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

    பெரும்பாலும் 20 முதல் 40 கிலோ வரை எடையுள்ள மற்றும் 1.5 மீட்டர் வரை வளரக்கூடிய மீன், கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகம் விரும்பப்படுகிறது.

    பரிசு பெற்ற 7 கோடி ரூபாய் பணத்தை தனது ஏழு பேர் கொண்ட குழுவினருடன் பகிர்ந்து கொள்வதாக ஹாஜி கூறினார்.

    • ஆத்திரம் அடைந்த ஜெயப்பிரகாஷ் தனது நண்பனை கொலை செய்ய முடிவு செய்தார்.
    • இறந்து கிடந்த கருப்பசாமியின் உடலை மீட்டு போடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகே உள்ள சில்லமரத்துப்பட்டியை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ் (வயது40). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 மகன்கள் உள்ளனர்.

    ஜெயப்பிரகாஷ் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவரது நண்பர் தேவாரம் அருகில் உள்ள கிருஷ்ணம்பட்டியை சேர்ந்த கருப்பசாமி (36). இவர் கார்பெண்டர் வேலை பார்த்து வருகிறார். இருவரும் சேர்ந்து மது அருந்துவது வழக்கம். கருப்பசாமி நெருங்கிய நண்பராக இருந்ததால் அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றுள்ளார்.

    கருப்பசாமிக்கு திருமணம் ஆகவில்லை என்பதால் ஜெயப்பிரகாஷ் குடும்பத்துக்கு பண உதவிகள் செய்து வந்துள்ளார். ஆனால் அந்த பணத்தை ஜெயப்பிரகாஷ் கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். இதனிடையே கொடுத்த பணத்தை வாங்குவதற்காக ஜெயப்பிரகாஷ் வீட்டிற்கு அடிக்கடி வந்து அவரது மனைவியிடம் கருப்பசாமி பணம் கேட்டு வந்துள்ளார். இதனை அக்கம் பக்கத்தினர் பார்த்து ஜெயப்பிரகாசிடம் கூறவே இனிமேல் தனது வீட்டிற்கு வரவேண்டாம் என கருப்பசாமியிடம் கூறி உள்ளார்.

    அவரும் சம்மதம் தெரிவித்து விட்டு ஜெயப்பிரகாசுக்கு தெரியாமல் அவரது வீட்டிற்கு சென்று வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயப்பிரகாஷ் தனது நண்பனை கொலை செய்ய முடிவு செய்தார்.

    வழக்கம்போல் மது அருந்த வருமாறு கருப்பசாமியை அழைத்துள்ளார். அதன்படி அவர்கள் 2 பேரும் சேர்ந்து பொட்டிப்புரம் செல்லும் சாலையில் ஒண்டிவீரன் கோவில் அருகே மது குடித்தனர். கருப்பசாமிக்கு போதை தலைக்கேறியபோது தான் மறைத்து வைத்திருந்த மீன் வெட்டும் கத்தியால் அவரை சரமாரியாக வெட்டி கொன்றார். அதன்பின் ரத்தக்கறையுடன் போடி தாலுகா போலீஸ் நிலையத்துக்கு வந்து தான் கொலை செய்துவிட்டதாக கூறினார்.

    ஆனால் அவர் மீன் வியாபாரி என்பதால் அதனால் ரத்தக்கறை ஏற்பட்டிருக்கலாம் என நினைத்தும், போதையில் உளறுவதாக நினைத்தும் போலீசார் நம்ப மறுத்துவிட்டனர்.

    ஆனால் தான் கொலை செய்து விட்டேன் என கூறி அழுதுகொண்டே இருந்ததால் டி.எஸ்.பி. பெரியசாமி தலைமையில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்கு சென்றனர். அங்கு இறந்து கிடந்த கருப்பசாமியின் உடலை மீட்டு போடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    கொலை செய்ததை ஒத்துக்கொண்ட பிறகும் போலீசார் அலட்சியத்தால் இரவு முழுக்க போலீஸ் நிலையத்தில் இருந்து பின்னர் போலீசார் ஜெயப்பிரகாசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
    • உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கன்னியாகுமரி :

    களியக்காவிளை அருகே படந்தாலு மூடு பகுதியை சேர்ந்தவர் ஜீசஸ் கிறிஸ்டி (வயது 29). இவர் மீன் வியாபாரி. இவர் மனைவி குடும்பத்துடன் படந்தாலுமூடு பகுதியில் வசித்து வந்தார்.

    ஜீசஸ் கிறிஸ்டிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் அவர் சரிவர வேலைக்கு செல்வதில்லை. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு ஜீசஸ் கிறிஸ்டி அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். பிறகு மனைவியிடம் தகராறு செய்துவிட்டு தனது அறையில் சென்று கதவை மூடிவிட்டு படுத்து உள்ளார்.

    ஜீசஸ் கிறிஸ்டி எவ்வளவு போதையில் இருந்தாலும் இரவு உணவு சாப்பிடாமல் தூங்கமாட்டார். அவர் ஏன் இரவு உணவு சாப்பிட வரவில்லை என்று சந்தேகம் அடைந்த மனைவி அறை கதவை திறந்து பார்த்தபோது ஜீசஸ் கிறிஸ்டி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.

    இது குறித்து அக்கம் பக்கத்தினர் களியக்காவிளை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜீசஸ் கிறிஸ்டியின் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து இவர் தற்கொலை செய்தது ஏன்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அவர் அடிக்கடி குடித்துவிட்டு வருவதால் வீட்டில் பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது.
    • மார்த்தாண்டம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் நந்தன்காடு பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 55). இவர் மார்த்தாண்டம் மார்க்கெட்டில் மீன் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. செல்வம் அடிக்கடி குடித்துவிட்டு வருவதால் வீட்டில் பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் முன்பு உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரது மனைவி கலா மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரது உடலை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×