search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சர்ச்சை"

    • மதுரை விமானநிலையத்தின் பெயர் கூகுள் மேப்பில் முத்தரையர் பன்னாட்டு விமான நிலையம் என காட்டுவதால் சர்ச்சை எழுந்துள்ளது.
    • மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    மதுரை

    மதுரை விமான நிலையத்திற்கு பெயர் சூட்டுவது தொடர்பாக பல வருடங்களாக சர்ச்சை இருந்து வருகிறது. பல்வேறு சமூகத்தினர் அவர்களது சமூகத் தலைவர்களின் பெயர்களை சூட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

    மதுரை விமான நிலை யத்திற்கு முத்துராமலிங்கத் தேவர், இமானுவேல் சேகர், முத்தரையர் என பெயர்கள் சூட்ட வேண்டும் என கோரிக்கை பல ஆண்டு களாக இருந்து வருகிறது.

    கடந்த வருடம் மதுரை விமான நிலையத்தின் பெயர் கூகுள் மேப்பில் முத்துராமலிங்க தேவர் விமான நிலையம் என காட்டப்பட்டதால் சர்ச்சை எழுந்தது. இது குறித்து செய்திகள் வெளியான பின்னர் மீண்டும் மதுரை விமான நிலையம் என திருத்தம் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது கூகுள் மேப்பில் மதுரை விமான நிலையம் இருக்கும் இடத்தின் பெயர் முத்தரையர் பன்னாட்டு விமான நிலையம் என காண்பிக்கிறது. அதே வேளையில் ஆங்கிலத்தில் madurai airport என காண்பிக்கிறது. இது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    • இட்லியில் ரசாயனம் கலக்கப்படுகிறது என குற்றம்சாட்டினர்.
    • இட்லியை ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என்று இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் -ராயக்கோட்டை ஹவுசிங் போர்டு பேஸ் 10-ல், வேடிப்பன் என்பவர், ஓட்டல் நடத்தி வருகிறார்.

    இங்கு விற்பனை செய்யப்படும், இட்லியை நேற்று முன்தினம் சிலர் வாங்கி சென்றனர்.

    அந்த இட்லி, பேக்கரியில் விற்கப்படும் பன், பிரட் போல் இருந்ததுடன், இட்லி சுவையாக இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஓட்டலுக்கு சென்ற சில இளைஞர்கள், இதுபோன்ற இட்லியை விற்பனை செய்ய வேண்டாம் என தெரிவித்தனர்.

    ஆனால், நேற்று காலையிலும், அதே சுவையுள்ள இட்லியை ஓட்டலில் விற்பனை செய்தனர். இதனால் அந்த ஹோட்டலை முற்றுகையிட்ட இளைஞர்கள் மூன்று நாட்கள் ஆனாலும் கெடாத இந்த இட்லியில் ரசாயனம் கலக்கப்படுகிறது என குற்றம்சாட்டினர்.

    அதற்கு ஓட்டல் நிர்வாகம் இட்லிக்கு மாவு அரைக்கும் போது ஆமணக்கு விதை சேர்ப்பதால் இதுபோன்று இட்லி இருக்கிறது என்றது. மேலும் சானசந்திரத்தை சேர்ந்த ஒருவர்தான் ஒரு இட்லி 3 ரூபாய் என்ற விலையில் தங்களுக்கு விற்பதாகவும், ஓசூரின் பல ஹோட்டல்களில் இதுபோன்ற இட்லி தான் விற்பதாகவும் தெரிவித்தது.

    அங்கு வந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம், இட்லியை ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என்று இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

    அதே நேரம் ஹோட்ட ல்களுக்கு இட்லி சப்ளை செய்யும் நபர் இட்லியை ஆய்வு செய்து கொள்ளுங்கள். என் குழந்தைக்கு கூட இதே இட்லியை தான் கொடுக்கி றேன் என கூறியுள்ளார்.

    இந்த சம்பவத்தால் ஓசூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • முல்லை பெரியாறு சர்ச்சை குறும்படம் தொடர்பாக தமிழக அரசு விரைந்து தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
    • முல்லை பெரியாறு குறித்து கற்பனை கலந்த முழுமையாக வதந்தியை பரப்பும் குறும்படமாக இது உள்ளது.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில். கூறியிருப்பதாவது:-

    கேரளாவை சேர்ந்த வழக்கறிஞர் ரசூல்ஜோய் வெளியிட்ட சைன் ஆப் காட் என்றஅபத்தமான குறும்படம், கேரள-தமிழக உறவுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் உள்ளது.

    முல்லை பெரியாறு குறித்து கற்பனை கலந்த முழுமையாக வதந்தியை பரப்பும் குறும்படமாக இது உள்ளது. குறிப்பாக குளோபல் டிசாஸ்டர், சேவ் கேரளா என்று வலை தளங்களில் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

    மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாயிகளுக்கு பாசன ஆதாரமாக முல்லை பெரியாறு இருந்து வருகிறது. முல்லை பெரியாறு பிரச்சினையில் பல கட்ட போராட்டங்களை கடந்துதான் மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2014-ம் ஆண்டு, உச்ச நீதிமன்றத்தில் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142அடியாக உயர்த்தி கொள்ளலாம், பேபி அணையை பழுது பார்க்கப்பட்ட பின் 152 அடியாக உயர்த்தி கொள்ளலாம் என்ற வரலாற்று சிறப்பான தீர்ப்பை பெற்று தந்தார்.

    பல கட்ட ஆய்வில் பல வல்லுநர்கள் ஆய்வு செய்ததில், அணை உறுதி தன்மையாக உள்ளது என்று சான்றிதழ் கொடுத்துள்ளனர். அ.தி.மு.க. ஆட்சியில் 3 முறை முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தினார்கள்.

    விவசாயிகளுக்கு குடிமராமத்து திட்டத்தை தந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தொடர்ந்து காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு போன்ற உரிமையை பிரச்சினைகளில் முன் நின்று களப்பணி ஆற்றினார்.

    தற்போது ரூல்கர்வ் என்பதை புகுத்தி உள்ளனர். இது சட்டமும் அல்ல. அந்த விதியின் அடிப்படையில் பருவமழை காலத்தில் நீரை தேக்காமல் திறந்து விட்டு, நீர் தேக்கும் காலங்களில் பருவமழை இருக்காது. இந்த ரூல்கர்வ் என்பது விவசாயிகளுக்கு எதிரானது ஆகும்.

    முல்லை பெரியாறு அணை பலகட்ட ஆய்வுக்கு பிறகு உறுதித் தன்மை உள்ளது என்று விஞ்ஞான சான்றுள்ளது. ஆனால் கேரளா புதிய அணை கட்ட பல்வேறு கற்பனை கலந்த வதந்தியை பரப்பி வருகிறது.

    குறிப்பாக பிஞ்சு குழந்தைகளின் இதயங்களில் நஞ்சை விதைக்கும் வகையில் கேரளாவை சேர்ந்த ரசூல்ஜோய் வெளியிட்ட சைன் ஆப் காட் குறும்படம் வேதனையை அளிக்கிறது. இந்த குறும்படம் வன்மத்தோடு எடுக்கப்பட்டது.

    இரு மாநில உறவுகளுக்கும் குந்தகம் ஏற்படும் வகையில் வன்மத்தோடு வெளியிட்டுள்ள நபர்களை சட்டப்படி கேரளா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த குறும் படத்தை தடை செய்ய வேண்டும்.

    தவறான கருத்துக்களை பரப்புவது தேசத்திற்கு விரோதமான செயலாகும், கற்பனை கலந்த இந்த குறும்படத்தை தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்க்காமல் தடை செய்ய வேண்டும். இந்த குறும்படம் மூலம் பல்வேறு சர்ச்சைகள் ஏற்படும். முதலமைச்சர் தமிழகத்தின் ஜீவதார உரிமையை காக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பா.ம.க முதல்வர் வேட்பாளராக ராமதாஸை முன்னிறுத்த உள்ளோம்.
    • ராஜராஜசோழன் இந்துவாக இருந்தால் என்ன, மராட்டியராக இருந்தால் என்ன.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வன்னியர் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பாக்கம்.சக்திவேல் தலைமை வகித்தார்.வன்னியர் சங்க மாநில செயலாளர் தங்க.அய்யாசாமி, பாட்டாளி மக்கள் கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் சித்தமல்லி. பழனிச்சாமி, மாவட்ட தலைவர் அன்பழகன், முன்னாள் மாநில துணை பொதுச்செயலாளர் ஐயப்பன், முன்னாள் சமூக முன்னேற்ற சங்கத் தலைவர் மணி, மாநில செயற்குழு உறுப்பினர் தேனூர்.ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.

    வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் துரை.முத்து வரவேற்றார்.

    இக்கூட்டத்தில் மாநில வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

    அப்போது பேசிய அவர் வரும் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பா.ம.க முதல்வர் வேட்பாளராக மருத்துவர் அன்புமணி ராமதாஸ் முன்னிறுத்தி நாங்கள் தேர்தலை சந்திக்க உள்ளோம். ஆகவே நாங்கள் இப்பொழுதே பிரச்சாரத்தை தைரியமாக துவங்குவோம்.

    வன்னியர்களுக்கான 10.5சதவீத இட ஒதுக்கீட்டை பெறுவதற்கு ராமதாஸ் அறிவிக்கும் அனைத்து போராட்டங்களையும் முன்னெடுப்போம் என்றார்.

    மேலும் ராஜராஜ சோழன் இந்துவாக இருந்தால் என்ன, மராட்டியராக இருந்தால் என்ன.

    சோழன் நாட்டை ஆண்டான்.

    அவர் இந்துவா என்ற சர்ச்சையை ஏன்? கிளப்ப வேண்டும்.

    கொள்ளிடம் ஆற்றில் அதிகளவு உபரி நீர் சென்று கடலில் கலந்தது அதனைப் பற்றி யாரும் பேசவில்லை.

    ராஜராஜ சோழன் இந்துவா என்று ஏன் பேச வேண்டும் என்றார்.

    நிறைவில் சீர்காழி நகர வன்னியர் சங்க தலைவர் வினோத்குமார் நன்றி கூறினார்.

    ×