search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மலை ரெயில்"

    • ரெயிலில் செல்லும்போது யானை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள், பறவைகளையும் ரசித்தவாறே செல்லலாம்.
    • 15 நிமிடம் தாமதம் ஆனாலும் ரெயிலில் பயணித்த சுற்றுலா பயணிகள் யானைகளை பார்த்து ரசித்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் வரும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரையிலும், அதன்பிறகு குன்னூரில் இருந்து ஊட்டிக்கும் மலை ரெயில் இயக்கப்படுகிறது.

    வாகனங்களில் செல்வதை விட மலை ரெயிலில் செல்லும்போது நேரம் அதிகமானாலும் இயற்கை அழகை ரசித்தவாறே செல்லலாம் என்பதால் சுற்றுலா பயணிகள் மலைரெயிலில் செல்லவே ஆர்வம் காட்டுகிறார்கள். குறிப்பாக வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மலைரெயிலில் செல்லவே விரும்புபவர்கள். ரெயிலில் செல்லும்போது யானை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள், பறவைகளையும் ரசித்தவாறே செல்லலாம்.

    சில சமயங்களில் யானைகள் தண்டவாளத்தை ஆக்கிரமித்துக்கொண்டு நின்று விடும். அந்த சமயம் மலை ரெயில் நிறுத்தப்பட்டு யானைகள் சென்றபிறகே ரெயில் புறப்பட்டுச் செல்லும்.

    இந்தநிலையில் குன்னூா் அருகே உள்ள காட்டேரி பகுதியில் கடந்த ஒரு வாரமாக 3 காட்டு யானைகள் சுற்றித் திரிகின்றன. நேற்று குன்னூரில் இருந்து மலைரெயில் புறப்பட்டு மேட்டுப்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென 3 காட்டு யானைகளும் தண்டவாளம் வழியாக நடந்து வந்தன. இதனால் ரெயில் என்ஜின் டிரைவர்கள் துரிதமாக செயல்பட்டு ரெயிலை நிறுத்தினார். 15 நிமிடம் யானைகள் தண்டவாளத்தை விட்டு நகராமல் நின்றது. அதன்பிறகு தான் தண்டவாளத்தை விட்டு இறங்கி நடையை கட்டியது. பின்னர் மலைரெயில் புறப்பட்டுச் சென்றது.

    15 நிமிடம் தாமதம் ஆனாலும் ரெயிலில் பயணித்த சுற்றுலா பயணிகள் யானைகளை பார்த்து ரசித்தனர்.

    • நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
    • மண் சரிவு காரணமாக ரெயில் தாமதமாக குன்னூருக்கு இயக்கப்பட்டது.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குன்னூர் பகுதியில் இரவு நேரத்தில் கனமழை பெய்கிறது. மழையும், பனி மூட்டமும் உள்ளதால் கடும் குளிர் காணப்படுகிறது.

    நேற்று இரவு பெய்த மழையால் குன்னூர் அருகே ஹில்குரோவ் பகுதியில் தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டது. மண்ணும், பாறைகளும் விழுந்ததால் தண்டவாளம் சிறிது சேதம் அடைந்தது.

    உடனடியாக ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் தண்டவாளத்தில் கிடந்த மண்ணை அகற்றி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து தண்டவாளமும் சீரமைக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் இருந்து மலை ரெயில் சேவை தொடங்கியது. மண் சரிவு காரணமாக ரெயில் தாமதமாக குன்னூருக்கு இயக்கப்பட்டது.

    ×