search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொட்டிய தேனீக்கள்"

    • குன்னூர் சிம்ஸ் பூங்கா தேனீக்கள் துரத்தி துரத்தி கொட்டியது.
    • மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்துக்கு தமிழகம் மட்டும் இல்லாமல் வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் நூற்றுகணக்கானோர் வந்து செல்கின்றனர். நீலகிரிக்கு மற்ற நாட்களை விட வெயில் காலங்களிலும், விடுமுறை நாட்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும்.

    சுற்றுலா பயணிகள்

    இதில் ஊட்டி படகு இல்லம், ரோஸ் கார்டன், தாவரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, ஊட்டி தேயிலை தோட்டம், சூசைட் பாயிண்ட் ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகள் விரும்பி செல்வார்கள்.

    இந்த நிலையில் வழக்கம் போல இன்றும் நீலகிரி மாவட்டம் முழுவதும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து இருந்தனர். குன்னூர் சிம்ஸ் பூங்காவிலும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து கொண்டு இருந்தனர்.

    அப்போது பூங்காவில் இருந்த மரத்தில் இருந்த தேன் கூடு திடீரென எவ்வாறோ கலைந்தது. அதில் இருந்து வெளியேறிய தேனீகள் அங்கிருந்த சுற்றுலா பயணிகள் கொட்ட தொடங்கியது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

    துரத்தி துரத்தி கொட்டியது

    ஆனால் அவர்களை தேனீக்கள் துரத்தி துரத்தி கொட்டியது. இதனால் பலர் காயம் அடைந்தனர். சில குழந்தைகளும் காயம் அடைந்ததாக தெரிகிறது. இதனை பார்த்த பூங்கா நிர்வாகத்தினர் அங்கு வந்து மக்களை பத்திரமாக வெளியேற்றினர்.

    காயம் அடைந்தவர்கள் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் பூங்காவில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டு பூங்காவிற்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. பூங்கவில் இருந்து வேலையாட்களும் வெளியேற்றப்பட்டு அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டது.

    பூங்காவில் தேனீக்கள் சுற்றுலா பயணிகளை தாக்கி சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×