search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கந்த சஷ்டி திருவிழா"

    • 29-ந்தேதி வேல்வாங்குதல் நிகழ்ச்சி நடைபெறும்.
    • 30-ந்தேதி "சூரசம்ஹார லீலை "நடைபெறும்.

    தமிழ் கடவுள் முருகப்பெருமான் குடிகொண்டு அருள் ஆட்சி புரியும் அறுபடைவீடுகளில் முதற்படை வீ்டான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் .நடப்பு ஆண்டிற்கான கந்தசஷ்டி திருவிழா வருகின்ற 25-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. திருவிழாவின் தொடக்கமாக 25-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணியளவில் மேளதாளங்கள் முழங்க உற்சவர் சன்னதியில் சுப்பிரமணியசுவாமி தெய்வானைக்கும், 8.10 மணியளவில் சண்முகர் சன்னதியில் தெய்வானை, வள்ளி சமேத சண்முகருக்கும் காப்பு கட்டுதல் நடக்கிறது. இதனையடுத்து முருகப்பெருமானின் பிரதிநிதி (நம்பி பட்டருக்கு) காப்பு கட்டப்படுகிறது. இதனை தொடர்ந்து 8.45 மணியளவில் கம்பத்தடி மண்டப வளாகத்தில் பக்தர்களுக்கு காப்பு கட்டுதல் நடக்கிறது.

    வருகின்ற 29-ந்தேதி மாலை 6.30 மணியில் இருந்து இரவு 7.30 மணிக்குள் கோவிலுக்குள் ஆலயப்பணியாளர்கள் திருக்கண்ணில் முருகப்பெருமான் சூரனை சம்ஹாரம் செய்வதற்காக தன் தாயார் கோவர்த்தனாம்பிகையிடம் "சக்திவேல்" பெறக்கூடிய வேல்வாங்குதல் நிகழ்ச்சி நடைபெறும்.

    திருவிழாவின் சிகரமாக 30-ந்தேதி மாலை 6.30 மணியளவில் சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவில் முன்பு பக்தர்கள் புடைசூழ முருகப்பெருமான் சக்திவேல் கொண்டு சூரபத்மனை வதம் செய்யக்கூடிய"சூரசம்ஹார லீலை "நடைபெறும். திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக 31-ந்தேதி காலை 7-15 மணியளவில் மலையை சுற்றி சட்டதேர்வலம் வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் துணை கமிஷனர் சுரேஷ் தலைமையில் சிவாச்சாரியர்கள், மற்றும் கோவில் ஊழியர்கள் செய்துவருகின்றனர்.

    • கந்தசஷ்டி விழா வருகிற 25-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி வரை 7 நாட்கள் நடக்கிறது
    • விழா நாட்களில் சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனை, அன்னதானம் நடைபெறும்.

    தோவாளை செக்கர்கிரி சுப்பிரமணியசாமி கோவிலில் கந்தசஷ்டி விழா வருகிற 25-ந் தேதி தொடங்கி 31-ந் தேதி வரை 7 நாட்கள் நடக்கிறது. முதல்நாள் காலையில் கணபதி ஹோமம், 10 மணிக்கு செக்கர்கிரி வேலவனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், மதியம் 12 மணிக்கு சிறப்பு தீபாராதனை, 12.30 மணிக்கு காப்புகட்டுதல், அன்னதானம் போன்றவை நடக்கிறது. தொடர்ந்து வரும் விழா நாட்களில் சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனை, பக்தி பஜனை, அன்னதானம் போன்றவை நடைபெறும்.

    30-ந் தேதி காலை 9.30 மணிக்கு வேலவன் செக்கர்கிரி மலையில் இருந்து பல்லக்கில் எழுந்தருளல், மாலை 4 மணிக்கு செக்கர் கிரி வேலவன் போர்க்கோலமுருகனாக குதிரை வாகனத்தில் சூரசம்ஹாரத்தில் எழுந்தருளல், மாலை 6.30 மணிக்கு சூரசம்ஹாரம், பின்னர் சிறப்பு வாணவேடிக்கை ஆகியவை நடக்கிறது. இரவு 9 மணிக்கு வெற்றிவேலவன் மயில்வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும்.

    31-ந் தேதி காலை 9 மணிக்கு செக்கர்கிரி வேலவன் ஆராட்டுக்கு எழுந்தருளல், 10 மணிக்கு அபிஷேகங்கள், 11 மணிக்கு செக்கர் கிரி வேலவன் பச்சை சாத்தி எழுந்தருளல், தொடர்ந்து சிறப்பு அன்னதானம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தோவாளை செக்கர் கிரிசுப்பிரமணியசாமி கோவில் நிர்வாககுழு மற்றும் விழா குழுவினர் செய்து வருகிறார்கள்.

    • கந்தசஷ்டி விழா வருகிற 25-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி வரை 7 நாட்கள் நடக்கிறது.
    • விழா நாட்களில் சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனை போன்றவை நடைபெறும்.

    ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் இந்து நாடார் சமுதாய வவ்வால் குகை பாலமுருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா வருகிற 25-ந் தேதி தொடங்கி 31-ந் தேதி வரை 7 நாட்கள் நடக்கிறது. விழாவில் முதல்நாள் காலையில் கணபதி ஹோமம், 10 மணிக்கு வவ்வால் குகை பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, பின்னர் காப்பு கட்டுதல் ஆகியவை நடக்கிறது. தொடர்ந்து வருகிற விழா நாட்களில் சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனை, பக்தி பஜனை போன்றவை நடைபெறும்.

    30-ந் தேதி காலையில் வவ்வால் குகை பாலமுருகனுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை, மாலை 4 மணிக்கு பாலமுருகன் போர்காலமுருகனாக குதிரை வாகனத்தில் சூரசம்ஹாரத்திற்கு எழுந்தருளல், தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு சூரனை பாலமுருகன் வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி, பின்னர் வாணவேடிக்கை, பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, பாலமுருகன் மயில் வாகனத்தில் எழுந்தருளல் போன்றவை நடக்கிறது.

    31-ந் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியும், பின்னர் மாபெரும் அன்னதானமும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் இந்து நாடார் சமுதாய அறக்கட்டளை தலைவர் சண்முகபெருமாள் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    • 30-ந்தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது.
    • 31-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.

    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். கோவிலில் இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா வருகிற 25-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.

    அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறுகிறது. அதிகாலை 5.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு புறப்படுகிறார். காலை 7.30 மணிக்கு யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்குகிறது.

    தொடர்ந்து காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடைபெறும். நண்பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனையை தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி- தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு சிறப்பு மகா தீபாராதனை நடைபெறும்.

    மதியம் 3 மணிக்கு மூலவருக்கு சாயரட்சை தீபாராதனையை தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு சுவாமி- அம்பாள்களுக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடைபெறுகிறது. பின்னர் சுவாமி- அம்பாள்கள் கிரி வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    கந்தசஷ்டி திருவிழா முதல் நாளன்று சூரியகிரகணம் நடைபெறுவதால் மாலை 4 மணிக்கு சுவாமிக்கு பட்டு சாத்தி, கோவில் நடை அடைக்கப்படுகிறது. பின்னர் சூரியகிரகணம் முடிந்ததும், மாலை 6.45 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு, மற்ற கால பூஜைகள் நடைபெறும்.

    2-ம் திருநாளான 26-ந்தேதி (புதன்கிழமை) முதல் 5-ம் திருநாளான 29-ந்ேததி (சனிக்கிழமை) வரையிலும் தினமும் காலை 7 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்குகிறது. மதியம் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனையை தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் வேல்வகுப்பு, வீரவாள்வகுப்பு முதலிய பாடல்களுடன் மேளவாத்தியங்களுடனும் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெறும்.

    பின்னர் மாலை 4 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளும் சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து சுவாமி கிரி வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து மீண்டும் கோவில் சேர்கிறார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 6-ம் திருநாளான வருகிற 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணியளவில் நடக்கிறது. அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. பின்னர் யாகசாலையில் தீபாராதனைக்கு பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளுகிறார்.

    அங்கு மகா தீபாராதனையை தொடர்ந்து சுவாமி-அம்பாள்களுடன் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடைபெறும். மாலை 4 மணியளவில் கடற்கரையில் எழுந்தருளும் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறும். இதில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கின்றனர்.

    7-ம் திருநாளன 31-ந்தேதி (திங்கட்கிழமை) இரவில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், செந்தில் முருகன், ராமதாஸ், கணேசன், இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • இந்த விழா 25-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி வரை 7 நாட்கள் நடக்கிறது.
    • 31-ந்தேதி பகல் 12 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது

    நாகர்கோவில் பெருவிளை தெய்வி முருகன் கோவிலில் 53-வது கந்த சஷ்டி விழா வருகிற 25-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி வரை 7 நாட்கள் நடக்கிறது.

    விழாவின் முதல்நாள் சிறுவர் பக்த சங்கவிழாவாக காலை 6 மணிக்கு காப்பு கட்டுதல், சஷ்டி விரதம் ஆரம்பம், முருகன் பாலமுருகன் அலங்காரத்தில் காட்சி அளித்தல், மாலை 6 மணிக்கு திருமாங்கல்ய பூஜை நடக்கிறது. 26-ந்ேததி உழவர் விழாவாக முருகன் சுப்பிரமணிய அலங்காரத்தில் காட்சி அளித்தல், மாலை 6 மணிக்கு பஜனை, 27-ந்தேதி வியாபாரிகள் விழாவாக முருகன் வேடன் அலங்காரத்தில் காட்சி அளித்தல், இரவு 7 மணிக்கு ஓவியப்போட்டி, கோலப்போட்டி, பரிசு வழங்குதல், 28-ந்தேதி முருகன் ஆறுமுகன் அலங்காரத்தில் காட்சி அளித்தல், இரவு 8 மணிக்கு புத்தக வெளியீட்டு விழா மற்றும் பாராட்டு விழா நடக்கிறது. நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் கலந்து கொண்டு புத்தகத்தின் முதல் பிரதியை வெளியிட திட்ட இயக்குனர் தனபதி பெற்றுக்கொள்கிறார்.

    29-ந்தேதி போர்கோல முருகன் அலங்காரத்தில் காட்சி அளித்தல், இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை, மகளிர் மாநாடு நடக்கிறது.

    30-ந்தேதி கந்த சஷ்டி விழாவான காலை 11 மணிக்கு கும்பாபிஷேகம், பகல் 12 மணிக்கு சக்திவேல் வாங்க வருதல், மதியம் 1 மணிக்கு சூரசம்ஹாரத்துக்கு புறப்படுதல், மாலை 6.30 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது. சூரசம்ஹாரத்தில் யானை ஊர்வலம், சிங்காரி மேளம், மயிலாட்டம், கோலாட்டம், கதகளி ஆகியவை நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு ராஜமன்னார் தலைமையில் சிலம்பம் போட்டி நடக்கிறது. நிகழ்ச்சிக்கு எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. கலந்து கொள்கிறார். வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசு தொகை, கேடயம் வழங்கப்படுகிறது.

    31-ந்தேதி பகல் 12 மணிக்கு திருக்கல்யாணம், அன்னதானம் மாலை 5 மணிக்கு சகஸ்ராம அர்ச்சனை, புஷ்பாபிஷேகம், 6.30 மணிக்கு மணிகோல முருகன் அலங்காரத்தில் காட்சி அளித்தல், தீபாராதனை ஆகியவை நடக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை தெய்விமுருகன் கோவில் தலைவர் வெற்றிவேலன், கவுரவத்தலைவர் அருள்குமரன், மகளிர் மன்ற தலைவி ராஜாத்தி குமரன், லதா வேலன், லதா முருகதாஸ் மற்றும் மன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்து வருகிறார்கள்.

    • திருச்செந்தூர் கோவிலில் கந்த சஷ்டி வருகிற 25-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது.
    • கோவில் வளாகத்தில் 4 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்படுகிறது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா வருகிற 25-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது.

    கலெக்டர் ஆய்வு

    30-ந் தேதி சூரசம்ஹாரமும், 31-ந் தேதி திருக்கல்யாணமும் நடை பெறுகிறது. விழாவில் லட்ச கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். பக்தர்களுக்கு தேவையான முன்னேற்பாடுகள் குறித்து ஏற்கனவே அனைத்துதுறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இந்நிலையில் கோவிலில் பக்தர்களுக்காக நடைபெற்று வரும் பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் கலெக்டர் செந்தில்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    தற்காலிக பந்தல்கள்

    இவ்வாண்டு கோவில் உள் பிரகாரத்தில் தங்கி விரதம் இருப்பதற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை. கந்த சஷ்டி விழாவில் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக 12 இடங்களில் 70 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் தற்காலிக தங்கும் பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகிறது. கோவில் வளாகத்தில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள 350 கழிப்பறைகளுடன், கூடுதலாக 100 தற்காலிக கழிப்பறைகளும் அமைக்கப்படுகின்றன.

    பாதுகாப்பு பணியில் 2729 காவலர்கள் மற்றும் 300 ஊர்க்காவல்படையினர் ஈடுபடுத்தப்படுவார்கள். கோவிலில் உள்ள 275 தூய்மைபணியாளர்கள், திருவிழாவிற்காக கூடுதலாக நியமிக்கப்பட்ட 175 தூய்மைபணியாளர்கள் மற்றும் நகராட்சி மூலம் 80 தூய்மைபணியாளர்கள் ஆகியோர் சுழற்சிமுறையில் தூய்மைபணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

    தீயணைப்புதுறையினர் தயார் நிலையில் பணியில் ஈடுபடுவர். கோவில் வளாகத்தில் 4 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்படுகிறது. மேலும் 3 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்படும். குடிநீர் வடிகால் வாரியம் மூலம் தினமும் 5 லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர் கிடைத்திட நடவடிக்கை எடுக்க ப்பட்டுள்ளது. கோவில் அருகில் 800 கார்கள் நிறுத்தும் அளவுக்கு வாகன நிறுத்தம் அமைக்கப்பட வுள்ளது.

    சிறப்பு பஸ்கள்

    சூரசம்ஹாரம் நடைபெறும் கடற்கரையை தூய்மை செய்வதற்கு சென்னையில் இருந்து ஒரு எந்திரம் கொண்டு வரப்படவுள்ளது. தற்போது வேளாண் பொறியியல் துறை எந்திரம் மூலம் கடற்கரையை சமப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது. பல்வேறு வழித்தடங்களில் 350 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    சென்னை, கோவை மற்றும் கேரளாவில் இருந்து அதிக பக்தர்கள் வருவதால் கூடுதலாக ெரயில்கள் இயக்கிட ெரயில்வே நிர்வாகத்திடம் கோரப்பட்டுள்ளது.

    தற்போது 80 சி.சி.டி.வி. கண்காணிப்புகேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் கோவில் வளாகம் முழுவதும் 50 கேமிராக்கள் பொறுத்தப்படும். அதே போல் 3 டிரோன் காமிராக்கள் மூலம் கடற்கரை முழுவதும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது, கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி, திருச்செந்தூர் கோட்டாட்சியர் புஹாரி, டி.எஸ்.பி.ஆவுடையப்பன், மாவட்ட சுகாதாரபணிகள் துணை இயக்குநர் பொற்செல்வன், தாசில்தார் சுவாமிநாதன், துணை தாசில்தார் பாலசுந்தரம், வருவாய் ஆய்வாளர் மணிகண்டன்வேல், தாலுகா காவல் ஆய்வாளர் முரளிதரன், நகராட்சி ஆணையர் வேலவன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • கந்தசஷ்டி திருவிழா 25-ந்தேதி தொடங்குகிறது.
    • சூரசம்ஹார நிகழ்ச்சி 30-ந்தேதி நடக்கிறது.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா வருகின்ற 25-ந் தேதி தொடங்குகிறது. சூரசம்ஹார நிகழ்ச்சி 30-ந் தேதியும், 31-ம் தேதி திருக்கல்யாணமும் நடக்கிறது.

    இந்நிலையில் கோவிலில் பக்தர்களுக்காக நடைபெற்று வரும் அடிப்படை வசதிகளை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    கந்தசஷ்டி திருவிழாவில் இந்த ஆண்டு கோவில் உள் பிரகாரத்தில் தங்கி விரதம் இருக்க பக்தர்களுக்கு அனுமதியில்லை. ஆனால் கந்த சஷ்டி விழாவில் விரதம் இருக்கும் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக கோவில் வளாகத்தில் 12 இடங்களில் தற்காலிக தங்கும் கொட்டகைகள் அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல், கோவில் வளாகத்தில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள 350 கழிப்பறைகளுடன், கூடுதலாக 100 தற்காலிக கழிப்பறைகளும் அமைக்கப்பட உள்ளது. மேலும் பக்தர்களின் பாதுகாப்புக்காக 2 ஆயிரத்து 729 போலீசார் மற்றும் 300 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    கோவில் வளாகத்தில் 4 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட உள்ளது. மேலும் 3 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்படும். திருவிழா காலங்களில் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் தினமும் 5 லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    பக்தர்களின் வசதிக்காக பல்வேறு வழித்தடங்களில் இருந்து 350 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. மேலும் கூடுதலாக ரெயில்கள் இயக்க ரெயில்வே நிர்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது கோவில் வளாகத்தில் 80 கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 50 கேமிராக்கள் கூடுதலாக பொறுத்தப்படும். அதேபோல் 3 ட்ரோன் கேமிராக்கள் மூலம் கடற்கரை முழுவதும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது, கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி, திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி, துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவுடையப்பன், மாவட்ட சுகாதாரபணிகள் துணை இயக்குனர் பொற்செல்வன், திருச்செந்தூர் தாசில்தார் சுவாமிநாதன், நகராட்சி ஆணையாளர் வேலவன் உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கந்தசஷ்டி திருவிழா 25-ந்தேதி தொடங்குகிறது.
    • சூரசம்ஹாரம் 30-ந்தேதி நடக்கிறது.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா வருகிற 25-ந் தேதி தொடங்குகிறது.

    இத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 30-ந் தேதி நடக்கிறது. அன்று திருச்செந்தூருக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் ஏராளமான வாகனங்களில் வருவார்கள்.

    இதையடுத்து, திருச்செந்தூரில் போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் வகையிலும், பக்தர்களுக்கு வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது.

    இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஸ் குமார் மற்றும் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சரவணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினத்தில் உள்ள ஜெ.ஜெ. நகர் பகுதி, நெல்லை ரோட்டில் உள்ள செந்தூர் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் அருகில் உள்ள காலி இடம், கோவில் வளாகத்தில் உள்ள நாழிக்கிணறு கார் பார்க்கிங், சூரசம்ஹாரம் நடைபெறும் கடற்கரை பகுதி மற்றும் கலையரங்கம் பகுதிகளில் ஆய்வு செய்தனர்.

    ஆய்வின் போது, திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவுடையப்பன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன், சப்-இன்ஸ்பெக்டர் கல்யாணசுந்தரம், போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திக், ரகு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இந்த திருவிழா 25-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி வரை நடைபெறுகிறது.
    • 30-ந்தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது.
    • 31-ந்தேதி இரவு திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா வருகிற 25-ந் தேதி தொடங்கி 31-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு 25-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.

    1.30 மணிக்கு விஸ்வரூபதரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. காலை 5.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலையில் எழுந்தருளுவார். அங்கு யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்குகிறது.

    காலை 9 மணிக்கு உச்சிகால அபிசேகம், மாலை 3 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. அன்றையதினம் மாலை 5 மணியில் இருந்து 6.15 மணி வரை சூரியகிரகணம் நடக்கிறது.

    அதனால் மாலை 4 மணிக்கு சுவாமிக்கு பட்டு சாத்தி நடை சாத்தப்படும். மீண்டும் மாலை 6.45 மணிக்கு நடைதிறக்கப்பட்டு மற்ற காலங்கள் மற்றும் யாகசாலை பூஜைகள் தொடர்ந்து நடைபெறும்.

    2-ம் திருவிழா முதல் 5-ம் திருவிழா வரை (26-ந்தேதி முதல் 29-ந் தேதி வரை) 4 நாட்கள் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிசேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிசேகம், மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான 6-ம் திருவிழாவான 30-ந்தேதி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.

    1.30 மணிக்கு விஸ்வருப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிசேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிசேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. அன்று மாலை 4 மணிக்கு கடற்கரையில் சூரசம்ஹாரம் நடக்கிறது.

    7-ம் திருவிழாவான 31-ந்தேதி கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிசேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிசேகம், பிற்பகல் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

    மாலை 5 மணிக்கு அம்பாள் தபசு காட்சிக்கு புறப்படுதல் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு சுவாமி- அம்பாளுக்கு மாலை மாற்று வைபவம் நடக்கிறது. தொடர்ந்து இரவு திருக்கல்யாண வைபவமும் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் அன்புமணி (கூடுதல் பொறுப்பு), அறங்காவலர் குழு தலைவர் இரா.அருள்முருகன், உறுப்பினர்கள் அனிதா குமரன், ராம்தாஸ், கணேசன், செந்தில் முருகன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • சஷ்டி திருவிழா 24-ந் தேதி தொடங்கி நவம்பர் 4-ந்தேதி வரை நடக்கிறது.
    • 31-ந்தேதி சண்முகர் தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமிநாதசாமி கோவில் உள்ளது. இக்கோவில் முருகனின் ஆறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாகும். சூரபத்மனை, முருகன் வதம் செய்த சூரசம்ஹார நிகழ்வு கந்த சஷ்டி திருவிழாவாக ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா வருகிற 24-ந் தேதி அன்று இரவு 7 மணிக்கு மேல் விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞையுடன் தொடங்கி, அடுத்த மாதம் 4-ந் தேதி வரை நடைபெற உள்ளது. 25-ந் தேதி சந்திரசேகரர், அம்பாள், வள்ளி-தெய்வானை, சண்முகர் சமேதரமாக, வீரகேசரி, வீரபாகு உடன் மலைக்கோவிலில் இருந்து படியிறங்கி உற்சவ மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.

    அதைத்தொடர்ந்து தினமும் சாமி வீதி உலா நடைபெற உள்ளது. வருகிற 30-ந் தேதி வள்ளி, தெய்வானை சமேத சண்முகருக்கு காலை 11 மணிக்கு 108 சங்காபிஷேகம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு தாயார் மீனாட்சி அம்மனுடன், சண்முக சுவாமி ஆட்டுக்கிடா வாகனத்தில் வந்து சக்திவேல் வாங்குதல் நிகழ்வும் மற்றும் கிழக்கு சன்னதியில் கஜமுக சூரன் மற்றும் சிங்கமுக சூரன் ஆகியோரை வதம் செய்கிற நிகழ்வும் தெற்கு வீதியில் சூர பத்மனை வதம் செய்கின்ற நிகழ்வும் நடக்கிறது.

    31-ந் தேதி சண்முகர் காவிரி ஆற்றில் குருதி கழுவுதல் நிகழ்ச்சி நடக்கிறது. அதைத்தொடர்ந்து தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. பின்னர் 3 நாட்களுக்கு ஊஞ்சல் உற்சவ விழா நடக்கிறது.

    விழாவில் பங்கேற்க வரும் பக்தர்களுக்கு பஸ் வசதி, கழிவறை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. முதியோர் மற்றும் ஊனமுற்றோர் எளிதில் கீழ்ப்பிரகாரத்தில் சுவாமி தரிசனம் செய்யும் வண்ணம் தெற்கு ராஜகோபுரத்தில் இருந்து சாய்வு தளம் அமைத்து சக்கர நாற்காலியுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கந்த சஷ்டி விழாவில் விரதம் இருக்கும் பக்தர்களுக்கு தினமும் மதியம் கற்கண்டு பால் வழங்க கோவில் துணை ஆணையர் உமாதேவி மற்றும் கோவில் கண்காணிப்பாளர், பணியாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

    ×