search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சங்கிலி"

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுக்கா நன்செய் இடையாறு காவேரி ஆற்றங்கரை அருகே உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவில் திருவிழா நடைபெற்றது.
    • நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும், பழி பூஜையும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பகல் 12 மணி அளவில் அசைவ பூஜை நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுக்கா நன்செய் இடையாறு காவேரி ஆற்றங்கரை அருகே உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவில் திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு சங்கிலி கருப்பண்ணசாமி, பொன்னாச்சி அம்மன், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. நேற்றுமுன்தினம் சனிக்கிழமை காலை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்தக் குடங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீர்த்தக் குடங்களுடன் மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். அதனைத் தொடர்ந்து பச்சை பூஜையும்,அபிஷேக ஆராதனையும் நடைபெ ற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும், பழி பூஜையும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பகல் 12 மணி அளவில் அசைவ பூஜை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சங்கிலி கருப்பண்ணசாமி மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அசைவ அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய திருப்புணிகுழு, குடிப்பட்டு மக்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • அரியலூர் மாவட்டத்தில் மனிதச் சங்கிலி நடந்தது
    • சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி

    அரியலூர்:

    சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி அரியலூர், செந்துறை, திருமானூர், ெஜயங்கொண்டம், ஆண்டிமடம், தா.பழூர் ஆகிய பகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மனிதச் சங்கிலி போராட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

    அரியலூரில் நடைபெற்ற மனிதச் சங்கிலி அறப்போராட்டத்துக்கு விசிக ஒன்றியச் செயலாளர்கள் தங்கராசு,உத்திராபதி ஆகியோர் தலைமை வகித்தனர். இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் சங்கர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலர் தண்டபாணி, மார்க்கிஸ்ட் கம்யூனிஸ் கட்சி ஒன்றியச் செயலர் துரை.அருணன் ,திராவிட கழக நிர்வாகி கோவிந்தராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    செந்துறையில் ஒன்றியச் செயலர் (வ) வீரவளவள், திருமானூரில் ஒன்றியச் செயலர் (கி) கண்ணன், ஜயங்கொண்டத்தில் ஒன்றியச் செயலாளர்கள் பாரதி, முத்துகிருஷ்ணன், ஆண்டிமடத்தில் ஒன்றியச் செயலாளர் (வ) தேவேந்திரன், தா.பழூரில் ஒன்றியச் செயலர் தங்கராசு ஆகியோர் தலைமையில் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி அறப்போராட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த பொருப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.



    ×