search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தண்ணீர் தேங்கியது"

    • ஜெயங்கொண்டம் அருகே பெய்த தொடர் மழையால் சாலையில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்
    • மேலும் சாலையின் இரண்டு புறமும் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைப்பதுடன், சுமார் 100 மீட்டர் தொலைவிற்கு தார்ச் சாலை அமைத்து தர கோரிக்கை எழுந்துள்ளது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவமங்கலம் வடக்குத் தெருவில் சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள சிமெண்ட் சாலையில் நேற்று முன்தினம் பெய்த மழையால் சாலையில் முழுவதும் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.

    மேலும் இதனால் சில வீடுகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து இரவில் தூங்க முடியாத சூழல் ஏற்பட்டது.

    தேங்கி நிற்கும் மழை நீரால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. மக்கள் வெளியில் வர முடியாமல் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.

    அவ்வழியாக குடியிருப்பு வாசிகள், பாதசாரிகள், இருசக்கர வாகனம், ஆடு, மாடுகள் உள்ளிட்டவைகள் செல்லும்போது மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

    மேலும் குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளில் ஓதம் காத்து வீட்டில் படுக்க முடியாத சூழல் உள்ளது. இதனால் குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்து மருத்துவமனை சென்று திரும்பிய சம்பவமும் நடந்துள்ளது.

    மேலும் இதனால் அப்பகுதியில் குடியிருப்பு வாசிகளுக்கு அதிவிரைவில் நோய் தொற்று பரவும் அபாயமும் இருப்பதால் அந்த மழை நீரை உடனடியாக அப்புறப்படுத்தி சாலையில் சரலை மண் கொட்டி மேடாக்கி சாலையை உயர்த்த கோரிக்கை எழுந்துள்ளது.

    மேலும் சாலையின் இரண்டு புறமும் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைப்பதுடன், சுமார் 100 மீட்டர் தொலைவிற்கு தார்ச் சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வாடிப்பட்டியில் 1½ மணி நேரம் கனமழை பெய்தது.
    • வடிகால் இல்லாததால் தாதம்பட்டி மந்தை முழுவதும் தண்ணீர் தேங்கியது.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் நேற்று இரவு 8.15 மணியளவில் திடீரென்று இடி, மின்னல் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது.

    சுமார் 1½ மணி நேரம் பெய்த இந்த மழையால் பள்ளமான பகுதிகளில் வெள்ளம் தேங்கி குளமாக காட்சியளித்தது. வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் முழுவதும் மழைவெள்ளம் சூழ்ந்தது.

    விடியவிடிய தேங்கிய மழைநீர் காலை 8 மணிக்கு ஜே.சி.பி. எந்திரம் மூலம் சீரமைக்கப்பட்டது. பஸ் நிலையம் உட்புறத்தில் தரைத்தளத்தில் தெற்கு பக்கம் உள்ள வணிக வளாகம் முன்பு மூன்று அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி நின்று வடிந்தது.

    தாதம்பட்டியில் எம்.எல்.ஏ. அலுவலகம் எதிரில் உள்ள காம்பவுண்ட் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து அரிசி, பருப்பு, படுக்கைகள், துணிமணிகள் உள்ளிட்ட பல பொருட்கள் மூழ்கி சேதமடைந்தது.

    மேலும் அங்கு 3 அடி அளவில் தண்ணீர் தேங்கி நின்றதால் குடியிருப் பவர்கள் தண்ணீர் வடியும் வரை மேடான பகுதிக்கு சென்று நின்று கொண்டிருந்தனர்.

    அதேபோல் சடையாண்டி கோவில் எதிரில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் தண்ணீரை வாலியில் இரைத்து ஊற்றினர்.

    மேலும் ஒட்டன்குளம் நிறைந்து வடிகால் இல்லாததால் தாதம்பட்டி மந்தை முழுவதும் தண்ணீர் தேங்கியது. பெரு மாள் கோவிலுக்குள் 3 அடிக்குதண்ணீர் புகுந்து உட்புறத்தில் சூழ்ந்து தேங்கி நின்றது.

    வருவாய் ஆய்வாளர் அலுவலகம் சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்ததால் வெள்ளத்தில் மிதந்தது. இதனால் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பிருந்து சடையாண்டி கோவில் வரை வாகன ஓட்டிகள் தண்ணீருக்குள் மிதந்தபடி சென்றனர்.

    எம்.எல்.ஏ. அலுவலகம் எதிரில் தொடங்கும் வடிகால் ஜெமினி பூங்கா வரை செல்கிறது. இந்த வடிகாலில் தற்போது முழுவதும் மூடப்பட்டுள்ளது. அதற்குள் மழை நீரால் அரித்து வரப்படும் மண் தேங்கி நிற்பதால் அடைப்பு ஏற்படுகிறது. இதனால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடும் அவல நிலை உள்ளது.

    எனவே போர்க்கால அடிப்படையில் உடனடியாக வடிகாலுக்குள் உள்ள மண்ணை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×