என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நோய் அபாயம்"
- கோழி கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகள், என டன் கணக்கில் உப்பம்பள்ளம் ஆற்றில் கொட்டப்படுகிறது,
- பொதுமக்கள் முகம் சுளிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம், வெள்ளிசந்தையில் பாலக்கோடு - ஓசூர் மெயின் ரோட்டில் சாலை குறுக்கே உப்பம்பள்ளம் ஆறு ஓடுகிறது.
பஞ்சப்பள்ளி சின்னாற்றில் இருந்து வெளியேறும் உபரி நீரானது பாப்பன ஏரி வழியாக உப்பம்பள்ளம் ஆற்றில் கலந்து தண்டுகாரனஅள்ளி, கொண்டசாமனஅள்ளி உள்ளிட்ட 12 ஏரிகளுக்கு சென்று தும்பல அள்ளி அனையில் சேர்கிறது .
இந்நிலையில் வெள்ளிசந்தையில் உள்ள உப்பம்பள்ளம் ஆற்றில் பிக்கனஅள்ளி, ஜக்க சமுத்திரம் ஆகிய 2 ஊராட்சிகளில் சேகரிக்கப்படும், வீட்டுக் கழிவுகள், அழுகிய உணவுகள், கோழி கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகள், என டன் கணக்கில் உப்பம்பள்ளம் ஆற்றில் கொட்டப்படுகிறது,
இதனால் ஆற்று நீர் மாசுபடுவது மட்டுமின்றி, அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது, மேலும் பன்றிகள் குப்பை கழிவுகளை கிளறுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்படுவது மட்டுமின்றி,அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் முகம் சுளிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் ஆற்று நீர் மாசுபடுவதால் விவசாயம் மற்றும் குடிநீர் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. ஆற்றில் குப்பை கொட்டுவதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- குடிநீர் எடுக்க தண்ணீர் வராததால் பல ஆண்டுகளாக பல சிரமங்களை அடைந்து வருகிறார்கள்.
- தண்ணீரை பருகும் கிராம மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டம் மரக்காணம் அருகே எண்டியூர் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்ப ங்கள் வசிக்கின்றனர். திண்டிவனம் மரக்காணம் செல்ல சாலை ஓரம் உள்ள இப்பகுதியில் வசிக்கும் கிராமத்தில் உள்ளவர்கள் குடிநீர் குழாயின் மூலம் தாங்கள் குடும்பத்திற்கு குடிநீர் எடுக்க தண்ணீர் வராததால் பல ஆண்டுகளாக பல சிரமங்களை அடைந்து வருகிறார்கள்.
இதனால் தங்கள் பகுதி க்கு தண்ணீர் சீராக வருவதில்லை. எனவே தண்ணீர் பிடிப்பதற்கு பள்ளம் தோண்டுகிறார்கள். இந்த தண்ணீரை பருகும் கிராம மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த கிராம த்திற்கு சீரான குடிநீர் வழங்க வேண்டும் என்று அப்பகுதியில் வசிக்கும் குடும்ப த்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
- பாதாள சாக்கடை அடைத்து நிரம்பி கழிவு நீர் முழுவதும் சாலையில் வழிந்து ஓடுகிறது.
- சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பாதாள சாக்கடையை சரி செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
கடலூர்:
கடலூர் கடற்கரை சாலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் இயங்கி வருகிறது. மேலும் இந்த சாலை வழியாக தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர். இதன் காரணமாக தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்திலும், பாதசாரிகள் சென்று வருகின்றனர்.மேலும் ஆயிரக்கணக்கான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் இவ்வழியாக தினந்தோறும் சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் கடற்கரை சாலையில் வேன் ஸ்டாண்ட் அருகே பாதாள சாக்கடை அடைத்து நிரம்பி கழிவு நீர் முழுவதும் சாலையில் வழிந்து ஓடுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் செல்லும் போது எதிர்பாராமல் கழிவு நீர் பொதுமக்கள் மீது தெளித்து அருவருப்பை ஏற்படுவதோடு, நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இது மட்டும் இன்றி வழிந்தோடும் கழிவுநீரால் துர்நாற்றம் கடுமையாக வீசி வருவதால் பொதுமக்கள் கடும் பாதிப்பு அடைந்து வருகின்றனர். மேலும் கழிவுநீர் வழிந்து வருவதால் இவ்வழியாக செல்லக்கூடிய அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதோடு இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பாதாள சாக்கடையை சரி செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்