search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விண்ணப்பங்கள் வரவேற்பு"

    • அரசாங்கத்திற்கான தேசிய விருது -2022 வருகிற ஜனவரி மாதம் 25-ந்தேதி தேசிய வாக்காளர் தினத்தன்று பாராட்டு பத்திரம், பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.
    • தேர்தல் மேலாண்மை பகுதிகளில் சிறப்பாக செயல்படும் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் , காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரி வித்துள்ளதாவது:-

    சிறந்த தேர்தல் நடைமுறை விருதுகள், வாக்காளர் கல்வி மற்றும் விழிப்புணர்வு குறித்த சிறந்த பிரச்சாரத்திற்கான தேசிய சி.எஸ்.ஓ. விருது, அரசாங்கத்திற்கான தேசிய விருது -2022 வருகிற ஜனவரி மாதம் 25-ந்தேதி தேசிய வாக்காளர் தினத்தன்று பாராட்டு பத்திரம், பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.

    சிறந்த தேர்தல் நடைமுறைக்கான -2022 விருதில் பொதுப்பிரிவு விருது, தேர்தல் மேலாண்மை பகுதிகளில் சிறப்பாக செயல்படும் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் , காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு வழங்கப்ப டுகிறது. சிறப்புப்பிரிவு விருது - தேர்தல் மேலாண்மை பகுதிகளில் சிறப்பாக செயல்படும் மாவட்ட தேர்தல் அலுவலர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் தவிர மற்ற அதிகாரிகளுக்கு வழங்கப்படுகிறது. சிறந்த மாநில விருது - தேர்தல் மேலாண்மை துறைகளில் சிறந்த ஒட்டுமொத்த திறனை வெளிப்படுத்தும் மாநிலத்திற்கு வழங்கப்படு கிறது.

    வாக்காளர் கல்வி மற்றும் விழிப்புணர்வு குறித்த சிறந்த பிரச்சாரத்திற்கான தேசிய சி.எஸ்.ஓ. விருது - 2022, பயனுள்ள மற்றும் புதுமையான திட்டங்கள் மூலம் தேர்தல் பங்களிப்பை ஊக்குவிப்பதற்கான நிறுவனங்கள், தனிநபர்க ளுக்கு வழங்கப்படுகிறது. அரசாங்கத்திற்கான தேசிய விருது - 2022 தேர்தல் பங்கேற்பை மேம்படுத்து வதற்கான துறை , நிறு வனம், பொதுத்துறை நிறு

    வனங்களுக்கு வழங்கப்படுகிறது.

    மேலும், விண்ணப்ப தாரர்கள் தங்களது கருத்து ருக்களை 23.11.2022-க்குள் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், முதல் தளம், அறை எண்.126, மாவட்ட சமூக நல அலுவல கத்தில் சமர்ப்பிக்க லாம். இவ்வாறு அவர், அதில் தெரிவித்துள்ளார்.

    • நவீன முறை சலவையகம் அமைத்திட தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.3 லட்சம் வழங்கிட அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
    • பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.ஒரு லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக, நவீன சலவையகங்கள் அமைத்திட மேற்கண்ட இன மக்கள் 10 நபர்களை கொண்ட உறுப்பினர்கள் குழுவாக அமைத்திட வேண்டும். அக்குழுவிற்கு நவீன முறை சலவையகம் அமைத்திட தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.3 லட்சம் வழங்கிட அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

    இத்தொழிலில் முன் அனுபவம் உள்ள பிற்பட்ட வகுப்பினர், மிகப்பிற்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த மக்கள் 10 நபர்கள் கொண்ட குழுவாக கிருஷ்ணகிரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு, விண்ணப்பப் படிவங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

    பெறப்படும் விண்ணப்ப படிவங்கள் மாவட்ட கலெக்டர் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட தேர்வு குழுவினரால் பரிசீலனை செய்து, தேர்வு செய்யப்படும் விணண்ணப்பங்கள், சென்னை, மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்கக ஆணையருக்கு பரிந்துரை செய்யப்படும்.

    இதில் பயன்பெற, குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆக இருக்க வேண்டும். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும். 10 நபர்களை கொண்ட ஒரு குழுவாக இருத்தல் வேண்டும்.

    10 நபர்களுக்கும் தையல் தொழில் தெரிந்திருத்தல் அவசியம் ஆகும். குழு உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இனத்தை சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். குழுவிலுள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.ஒரு லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

    மேலும், கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை (அறை எண்.11) தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விருப்ப முடைய பெற்றோர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
    • நேரிலோ அல்லது 04343-292567 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-

    மிஷன் வட்சாலயா திட்டத்தின் படி இளைஞர் நீதி சட்டம் 2015ன் கீழ் பதிவு பெற்ற குழந்தைகள் இல்லங்களில் 6 முதல் 18 வயதிற்குட்பட்ட தத்துக்கொடுப்பதற்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் இருக்கக்கூடிய குழந்தைகள் மற்றும் பெற்றோர் பராமரிப்பு செய்ய இயலாத நிலையில் குழந்தைகள் இல்லங்களில் தங்கும் குழந்தைகள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் கண்டறியப்பட்டு, அக்குழந்தைகள் குடும்ப சூழலில் வளர்வதற்கு ஏற்றவாறு நல்ல சூழலை உருவாக்கி குழந்தைகளை வளர்த்து பராமரிப்பதற்கு விருப்ப முடைய பெற்றோர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

    வளர்ப்பு பராமரிப்பு பெற்றோர் என்பவர், சொந்த குழந்தைகள் இருந்தோ அல்லது தத்து எடுப்பதற்கு உரிய தகுதிகள் இருந்து தத்தெடுப்பிற்கு பதிவு செய்து காத்திருப்போர்களாக இருப்பவர்கள் மற்றும் குழந்தை இல்லாதவர்கள் என்ற வரையறையில் உரிய நடைமுறைகளை பின்பற்றி வளர்ப்பு பராமரிப்பில் குழந்தைகளை வளர்க்கலாம். வளர்ப்பு பராமரிப்பு காலங்களில் ஆண்டு வருமானம் 8 லட்சத்திற்கு மிகாமல் உள்ளோர் மிஷன் வட்சாலயா திட்டத்தின் மூலம் நிதி உதவி தேவைப்படுமு வளர்ப்பு பராமரிப்பு பெற்றோருக்கு ஒரு குழந்தைக்கு மாதம் ரூ.4 ஆயிரம் வீதம் உதவித்தொகை வழங்கப்படும். இந்த வளர்ப்பு பராமரிப்பு திட்டத்தில் இருக்கும் குழந்தைகள் குறுகிய காலம் அல்லது நீண்ட காலம் அல்லது குழந்தையின் 18 வயது முடியும் வரை வளர்ப்பு பராமரிப்பு பெற்றோருடன் இருக்க அனுமதி வழங்கப்படும். வளர்ப்பு பராமரிப்பு பெற்றோர் என்ற வகையில் பராமரிப்பு செய்ய தயார் நிலையில் உள்ளவர்கள் விண்ணப்பம், நிபந்தனைகள் மற்றும் நடைமுறைகள் குறித்த விவரங்களை கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம், மாவட்ட மைய நூலகம் எதிரில் உள்ள வணிக வளாகத்தில் அறை எண்.8 மற்றும் 10ல் இயங்கும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது 04343-292567 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.

    • நீதிபதியின் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு முத்தரப்பு குழு தேர்ந்தெடுக்கும்.
    • தொழிலாளர் ஆணையர் அலுவலகத்திலிருந்தும் பெற்றுக்கொள்ளலாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி தொழிலாளர் உதவி ஆணையர் (சமரசம்) மாதேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    வேலை அளிப்பவர்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையே தொழில் அமைதியும், நல்ல தொழில் உறவு நிலவுவதையும் ஊக்குவிக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு - தொழில் நல்லுறவு பரிசுத் திட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. நல்ல தொழில் உறவினை பேணிப்பா துகாக்கும் வேலையளிப்பவர்கள் மற்றும் தொழிற் சங்கங்களுக்கு 2017, 2018, 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளுக்கான சிறப்பு விருதுகளை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியின் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு முத்தரப்பு குழு தேர்ந்தெடுக்கும்.

    இந்த விருதுக்குரிய விண்ணப்பப்படிவங்களை தொழிலாளர் துறையின் வலைதளத்திலிருந்து (http://labour.tn.gov.in)பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். அல்லது இந்த விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டத்திலுள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம், தொழிலாளர் துணை ஆணையர் (சமரசம்) அலுவலகம், வட்டார தொழிலாளர் இணை ஆணையர் அலுவலங்கள், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர் அலுவலகங்கள் மற்றும் சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாத்திலுள்ள தொழிலாளர் ஆணையர் அலுவலகத்திலிருந்தும் பெற்றுக்கொள்ளலாம்.

    ஒவ்வொரு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடனும், விண்ணப்பக் கட்டணம் செலுத்திய விவரத்தினையும் இணைத்து, சென்னை தொழிலாளர் ஆணையர் அலுவலகத்திற்கு வருகிற நவம்பர் மாதம் 11-ந் தேதிக்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு விண்ணப்பத்துடனும், விண்ணப்பக் கட்டணமாக விண்ணப்பித்தவர்கள் தொழிற் சங்கமானால் ரூ.100-ம், வேலையளிப்பவரானால் ரூ.250-ம் 0230-00 Labour and Employment 800 Other Receipts – AG Receipts of Labour Department (DP Code No.0230 00 800 AG 22799 என்ற தலைப்பின் கீழ் https://www.karuvoolam.tn.gov.in/challan/echallan வலைதளத்தில் இ-செலான் மூலம் தொகை செலுத்திய அசல் செலுத்துச் சீட்டு வைத்து அனுப்ப வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×