search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு"

    • திருச்சி ஜி.வி.என். மருத்துவமனை சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது
    • இதில் அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், ஆஸ்பத்திரியின் சேவைகள் குறித்து விளக்கம் அளித்தார்

    திருச்சி:

    உலகமெங்கும் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து திருச்சி ஜி.வி.என். ரிவர்சைடு மருத்துவமனையில் இந்த மாதம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

    இதில் இந்த மாதம் முழுவதும் 40 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மெமோகிராம் மற்றும் பெப்ஸ்மியர் சிகிச்சை முறைக்கு முன்பதிவு செய்து இந்த மருத்துவமனையில் முற்றிலும் இலவசமாக செய்து கொள்ளலாம். இதைத்தொடர்ந்து இன்று காலை திருச்சி சென்னை பைபாஸ் சாலையில் உள்ள ஜி.வி.என். ரிவர்சைடு மருத்துவமனையுடன் இணைந்து ரோட்டரி சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் பிங்கத்தான்-2022 என்ற பெயரில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

    இந்த ஊர்வலத்தை திருச்சி மாநகர காவல்துறை துணை ஆணையர் அன்பு தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் கல்லூரி மாணவர்கள் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலம் மருத்துவமனை முன்பு தொடங்கி கும்பகோணத்தான் சாலை, மாம்பழச்சாலை சாலை, காவிரி பாலம் வழியாக சென்று இ.ஆர்.மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள திருச்சி தேசியக்கல்லூரி மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது.

    இதில் அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், இந்த ஜி.வி.என். மருத்துவமனை 100 ஆண்டுகள் பாரம்பரியமிக்கது. முன்பெல்லாம் அரசு மருத்துவமனைக்கு நிகராக இந்த மருத்துவமனைக்கு தினமும் சிகிச்சை பெற 1,000 பேர் வருவார்கள். இவர்களில் தாத்தா விசுவநாதன், டாக்டர்கள் ஜெயபால், கனகராஜ் சிறப்பாக செயல்பட்டார்கள்.

    அதேபோல் டாக்டர் செந்தில் செயல்படுகிறார். இவர் இப்போதுதான் வெளியில் தெரிகிறார். இவர்கள் சேவை மனப்பான்மையுடன் தான் செயல்படுகிறார்கள். காசு முக்கியமல்ல, சேவைதான் முக்கியம் என்ற நோக்கில் சேவை செய்து வருகிறார்கள். இவர்கள் என்ன சேவை செய்தாலும் வெளியில் தெரியமாட்டார்கள்.

    வெளியில் வந்து சேவை செய்தால்தான் அனைவருக்கும் தெரிவார்கள். வெளியில் வந்து சேவை செய்ய வேண்டும். உங்கள் பின்னால் 1 லட்சம் பேர் திரள வேண்டும். எனவே உங்கள் பணி வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன் என்றார்.

    திருச்சி ஜி.வி.என். ரிவர்சைடு மருத்துவமனை தலைவர் டாக்டர் செந்தில் அனைவரையும் வரவேற்று, நன்றி கூறினார். இதில் மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட தி.மு.க. செயலாள் வைரமணி, கதிரவன் எம்.எல்.ஏ. மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    ×