search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில் நிலையத்திற்கு அடிப்படை வசதிகள்"

    • தென்னக ரெயில்வேயின் தென்மண்டல ரெயில் உபயோகிப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    திண்டுக்கல்:

    தென்னக ரெயில்வேயின் தென்மண்டல ரெயில் உபயோகிப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்ட தொழில்வர்த்தகர் சங்கத்தின் கூடுதல் செயலாளர் விஜயகுமார், திண்டுக்கல் மாவட்டம் சார்பில் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுவை அளித்தார்.

    புதிதாக மற்றொரு அதிவிரைவு தேஜஸ்ரெயில் மதுரையில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட வேண்டும். பாரதபிரதமரின் வந்தேபாரத் ரெயில் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை இயக்கப்பட வேண்டும். திண்டுக்கல் ரெயில்நிலையத்தில் அனைத்து ரெயில்களும் 3 நிமிடம் மட்டுமே நின்று செல்கின்றன. இதை 5 நிமிடமாக அதிகரிக்க வேண்டும். எல்.இ.டி டிஜிட்டல் போர்டு அனைத்து பிளாட்பாரங்களிலும் புதிதாக அமைத்து செயல்படுத்த வேண்டும்.

    திண்டுக்கல் ரெயில்நிலையத்தின் முன்பகுதியில் இருந்து கடைசி பிளாட்பாரம் வரை சுரங்கப்பாதையை நீட்டிக்க வேண்டும். திண்டுக்கல் ரெயில்நிலையத்திற்கு வரும் வயதானோர், பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் பேட்டரி கார்கள் இயக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    ×