search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூஞ்சோலையில் எழுந்தருளிய அம்மன்"

    • திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்பு அகரம் முத்தாலம்மன் கோவில் திருவிழா கடந்த 9ஆம் தேதி தொடங்கியது.
    • சொருகு பட்டை சப்பரத்தில் உலா வந்து பூஞ்சோலைக்கு அம்மன் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தாடிக்கொம்பு:

    திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்பு அகரம் முத்தாலம்மன் கோவில் திருவிழா கடந்த 9ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடர்ந்து தினமும் மாலையில் கலை நிகழ்ச்சி மற்றும் புராண நாடகங்கள் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கண் திறப்பு வைபவம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

    அதன் பிறகு ஆயிரம் பொன் சப்பரத்தில் உலா வந்து கொழுமண்டபத்தில் அம்மன் எழுந்தருளினார். திருவிழாவையொட்டி அம்மனுக்கு நேர்த்திக்கடனாக தீச்சட்டி எடுத்தும், அங்க பிரதட்சனம் செய்தும், கரும்புத் தொட்டிலில் குழந்தைகளை தூக்கி வந்தும் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்.

    இதைத் தொடர்ந்து இரவு 12 மணி வரை கொலுமண்டபத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதன் பிறகு புஷ்ப விமானத்தில் அம்மன் அங்கிருந்து புறப்பட்டு வானக்காட்சி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து வான வேடிக்கை நிகழ்ச்சிகள் நடந்தது.

    நேற்று மதியம் 1:30 மணி அளவில் வானக் காட்சி மண்டபத்தில் இருந்து அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் சொருகு பட்டை சப்பரத்தில் உலா வந்து பூஞ்சோலைக்கு அம்மன் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. பூஞ்சோலைக்கு அம்மன் செல்லும் வழி நெடுகிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×