search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இனிப்புகள் வாங்க குவிந்தனர்"

    • ஜவுளி கடையில் குடும்பத்துடன் வந்து தங்களுக்கு பிடித்த துணிகளை தேர்வு செய்தனர்.
    • வாகனங்கள் ஊர்ந்த படியே சென்றன.

    சேலம்:

    தீபாவளி பண்டிகை வருகிற 24-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. தித்திக்கும் தீபாவளி பண்டிகையை புத்தாடை அணிந்தும், இனிப்பு சாப்பிட்டும், பட்டாசு வெடித்தும் உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம். இன்னும் 2 நாட்களே உள்ளதால் மக்கள் ஜவுளி, இனிப்பு, பட்டாசுகள் வாங்க சேலம் நகர கடை வீதிகளில் குவிந்துள்ளனர்.

    குறிப்பாக சேலம் சின்னக் கடை வீதி, பெரிய கடை வீதி, அக்ரஹாரம் 4 ரோடு, புதிய பஸ் நிலையம் உள்பட மாநகரின் பல பகுதிகளில் இன்று காலை முதலே அதிக அளவில் மக்கள் திரண்டு இருந்தனர்.

    தீபாவளியை ஒட்டி ஜவுளி கடைகளில் புத்தம் புது டிசைன்களில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஏராளமான ஜவுளிகள் குவித்து வைக்கப்பட்டு உள்ளன. ஜவுளி கடையில் குடும்பத்துடன் வந்து தங்களுக்கு பிடித்த துணி களை தேர்வு செய்தனர்.

    மேலும் சேலம் கடை வீதி மற்றும் புதிய பஸ் நிலையம் பகுதிகளில் உள்ள நகை கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. இதேபோல், பண்டிகைக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்க செவ்வாய்ப்பேட்டை, கடை வீதியிலும் அதிக அளவில் குவிந்து இருந்தனர்.

    சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்தும் அதிக அளவில் கார் மற்றும் பஸ்களில் பொதுமக்கள் வந்திருந்ததால் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இதனால் சேலம் 4 ரோடு கடைவீதி உள்பட பல பகுதிகளில் வாகனங்கள் ஊர்ந்த படியே சென்றன.போக்குவரத்தை போலீசார் ஒழுங்குபடுத்தி வருகின்றனர். மேலும் திருட்டு சம்பவங்களை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டு உள்ளனர். 10 இடங்களில் கோபுரம் அமைத்தும் ஒளிப்பெருக்கி மூலம் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    இது ஒரு புறம் இருக்க மறுபுறம் சேலம் மாவட்டத்தில் சேலம், ஆத்தூர், வாழப்பாடி மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர் உள்பட பல பகுதிகளில் பட்டாசு கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

    குழந்தைகளுக்கு, கம்பி மத்தாப்பூ, தரைசக்கரம் உள்ளிட்டவை வாங்க பெற்றோர்கள் அதிக அளவில் திரளுகின்றனர். அதுபோல் வாலிபர்கள், பெரிய பட்டாசுகளை வாங்குகின்றனர்.குறிப்பாக வானில் வெடித்து சிதறும் வர்ண ஜாலம் பட்டாசுகள் அதிக அளவில் வாங்குகின்றனர். இதே போல மளிகை கடைகள், நகை கடைகளிலும் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

    ×