search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம்"

    • ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் முதல் மணிக்கூண்டு பகுதி வரை ஜவுளி கடைகள், நகை கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
    • மாநகர் பகுதியில் பொதுமக்கள் அதிகம் கூடும் 6 இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    நாளை தீபாவளி பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் தீபாவளி உற்சாகமாக கொண்டாட சொந்த ஊருக்கு ஆயிரக்க ணக்கான மக்கள் சென்ற வண்ணம் உள்ளனர். இதனால் கடந்த 2 நாட்களாக ஈரோடு ெரயில், பஸ் நிலையங்களில் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

    ஏற்கனவே முன்பதிவு அனைத்தும் நிரம்பி விட்டதால் சிறப்பு பஸ்கள், சிறப்பு ரெயில்களில் மக்கள் சொந்த ஊருக்கு செல்கின்றனர். 2 நாட்களாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இன்று இரவும் சிறப்பு பஸ்கள் இயக்கப்ப டுகின்றன.

    இந்நிலையில் இன்று காலை ஈரோடு கடைவீதிகளில் மக்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. குறிப்பாக ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் முதல் மணிக்கூண்டு பகுதி வரை ஜவுளி கடைகள், நகை கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    இதனால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. ஆர்.கே.வி.ரோடு பகுதிகளில் உள்ள நகைக்கடைகள், துணிக்கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. இதேபோல் ஈஸ்வரன் கோவில் வீதிகளிலும் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் இருந்தது.

    தீபாவளி பண்டிகையை யொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு மாவட்டம் முழுவதும் மக்கள் கூடும் பொது இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து கண்கா ணித்து வருகின்றனர்.

    கூட்ட நெரிசலை பயன்படுத்தி சிலர் பணத்தை திருடுவதும், நகைகளை திருடுவதும் கைவரிசை காட்டுகின்றனர். இதை தடுக்கும் பொருட்டு ஈரோடு மாநகர் பகுதியில் பொதுமக்கள் அதிகம் கூடும் 6 இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த கண்காணிப்பு கோபுரத்தில் சி.சி.டி.வி கேமிராக்கள் பொரு த்தப்பட்டு பொதுமக்கள் நடவடிக்கை துல்லியமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இங்கு 24 மணி நேரமும் போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல் மாவட்டம் முழுவதும் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் ஏ.டி.எஸ்பி.க்கள், டி.எஸ்பி.க்கள் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 1,100 போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் பெண் போலீசார் மாறு வேடங்களிலும் பொது மக்களை கண்காணித்து வருகின்றனர்.

    இன்று பட்டாசு விற்பனை மும்முரமாக இருந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு ரகங்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர். இந்த வருட தீபாவளிக்காக புதிய ரக பட்டாசுகள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன.

    ×