search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழில்நுட்பக் கல்வித்துறை இயக்ககம்"

    • அரசு தொழில்நுட்பத்துறை கல்வி இயக்ககம் புதிய முறைப்படி தட்டச்சு தேர்வு நவம்பர் 12 மற்றும் 13-ந் தேதிகளில் நடத்தப்படும் என அறிவித்துள்ளது.
    • தட்டச்சு செய்யும் முதல் தாள் இரண்டாவதாகவும், அறிக்கை தட்டச்சு செய்யும் இரண்டாவது தாள் முதலாவதாகவும் நடத்தப்படுகிறது.

    விருதுநகர்:

    தட்டச்சு தேர்வினை நடத்துவது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பழைய முறைப்படி தட்டச்சு தேர்வு நடத்த உத்தரவிட்டார். இதனை ஆட்சேபித்து திருச்சியை சேர்ந்த பிரவீன் குமார் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

    அதில் புதிய முறைப்படி தட்டச்சு தேர்வினை நடத்த உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்ய நாராயண ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு ஏற்கனவே 2021-ல் புதிய முறைப்படி நடத்தப்பட்ட தட்டச்சு தேர்வில் 85 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் புதிய முறைப்படி தட்டச்சு தேர்வினை வருகிற நவம்பர் 13-ந் தேதிக்குள் நடத்த வேண்டும் என அரசு தொழில்நுட்ப கல்வித்துறை இயக்ககத்திற்கு உத்தரவிட்டனர்.

    மேலும் இதுதொடர்பான அறிக்கையை நவம்பர் 14-ந் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். இந்நிலையில் அரசு தொழில்நுட்பத்துறை கல்வி இயக்ககம் புதிய முறைப்படி தட்டச்சு தேர்வு நவம்பர் 12 மற்றும் 13-ந் தேதிகளில் நடத்தப்படும் என அறிவித்துள்ளது. அதன்படி விரைவாக தட்டச்சு செய்யும் முதல் தாள் இரண்டாவதாகவும், அறிக்கை தட்டச்சு செய்யும் இரண்டாவது தாள் முதலாவதாகவும் நடத்தப்படுகிறது.

    ×