search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அறிமுகம்"

    • தேர்வு வசதியில் சிறிய தடங்கல் ஏற்பட்டதால் பாதிப்பு
    • இந்தியன் ஆயில் நிறுவன தலைமை பொது மேலாளர் அறிவிப்பு

    கோவை,

    இந்தியன் ஆயில் நிறுவனம் கடந்த 1-ந் தேதி தொலை தொடர்பு சேவை மாற்றப்பட்டதை தொடர்ந்து, ஐ.வி.ஆர்.எஸ். மாநில மொழி தேர்வு வசதியில் சிறிய தடங்கல் ஏற்பட்டது.

    தற்போது இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு மீண்டும் தமிழ் மொழியில் கியாஸ் சிலிண்டர் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் விருப்பமான மொழியை தேர்வு செய்து, பதிவு செய்யலாம்.

    இந்த தகவலை இந்தியன் ஆயில் நிறுவன தலைமை பொது மேலாளர் வெற்றி செல்வகுமார் தெரிவித்துள்ளார். 

    • நடைபாதை பாலத்தில் ஏறி இறங்கி சென்று கியூ வரிசையில் காத்திருந்து டிக்கெட் எடுத்து வந்த பயணிகள் மகிழ்ச்சி
    • தானியங்கி எந்திரத்தில் டிக்கெட் எடுத்து ரெயிலில் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்

    மேட்டுப்பாளையம்,

    கோவை மேட்டுப்பாளையம் ெரயில் நிலையத்தில் இருந்து கோவைக்கு தினமும் 5 முறை மெமு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

    இதுதவிர சென்னை செல்லக்கூடிய நீலகிரி மற்றும் சேரன் எக்ஸ்பிரஸ் ெரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. வாரம் ஒரு முறை திருநெல்வேலிக்கும் சிறப்பு ெரயில் இயக்கப்பட்டு வருகிறது.

    மேட்டுப்பாளையம் ெரயில் நிலையத்தில் இருந்து தினமும் 3 ஆயிரத்தி ற்கும் மேற்பட்ட பயணிகள் கோவை மட்டுமின்றி, பிற நகரங்களுக்கும் சென்று வருகின்றனர்.

    குறிப்பாக மேட்டுப்பாளையம்-கோவை இடையான ெரயிலில் அன்றாடம் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர் சீசன் டிக்கெட் எடுத்துள்ளனர்.

    சீசன் டிக்கெட் எடுக்காதவர்கள், ரெயில் நிலையத்தில் உள்ள நடைமேடைக்கு எதிரே உள்ள கட்டிடத்தில், டிக்கெட்டை வாங்கிக்கொண்டு மீண்டும் நடைபாதை பாலம் வழியாக ஏரி இறங்கிதான் நடைமேடைக்கு வர வேண்டிய நிலை இருந்து வந்தது.

    இதனால் முதியோர்கள், குழந்தைகள், பெண்கள் மிகுந்த அவதி அடைந்து வந்தனர். எனவே ரெயில் நிலையத்தில், தானியங்கி டிக்ெகட் எந்திரம் நிறுவ வேண்டும் என மேட்டுப்பாளையம் ெரயில் நிலைய ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், ெரயில் நிலைய பயணிகள் சங்க நிர்வாகிகள், பயணிகள் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இவர்களின் கோரிக் கையை ஏற்று, மேட்டுப்பாளையம் ரெயில் நிலைய நடைமேடையில் இருப்பு பாதை போலீஸ் நிலையத்துக்கு அருகே தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரம் நிறுவப்பட்டது.

    இந்த எந்திரம் நேற்று முதல் பயன்பாட்டிற்க வந்தது. அதில் பயணிகள் டிக்கெட் எடுத்து ரெயிலில் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்.

    நீண்ட நாட்களாக நடைபாதை பாலம் ஏறி, இறங்கி வரிசையில் காத்திருந்து டிக்கெட் எடுத்து வந்த பயணிகள் தற்போது நடைபாதையில் வைக்கப்பட்டுள்ள எந்திரத்தில் டிக்கெட் எடுத்து சென்று வருகின்றனர். இது அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இந்த தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரத்தில், க்யூ ஆர் கோடு ஸ்கேன் செய்தும் டிக்கெட்டை பெற முடியும். இதனால் ெரயில் பயணிகள் பெரிதும் பயனடைவார்கள்.

    • பிரிட்டிஷ் எம்பயர் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படும் இந்த பீர் 650 மில்லி லிட்டர், 325 மில்லி லிட்டர் அளவுகளில் வருகிறது.
    • சிறிய வகை ‘டின்’களிலும் பிரிட்டிஷ் எம்பயர் பீர் கிடைக்கும்.

    சென்னை:

    டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பல்வேறு நிறுவனங்களின் பிராந்தி, விஸ்கி, ஒயின், ரம் மற்றும் பீர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே பல கம்பெனிகளின் பீர் தயாரிப்புகள் புழக்கத்தில் உள்ளன.

    தற்போது புதிதாக பீர் மதுபானம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதன் முதலாக பார்லி வகை தானியங்கள் மூலம் தயாரிக்கப்படும் பீர் டாஸ்மாக் கடைகளில் விரைவில் விற்பனைக்கு வருகிறது. பிரிட்டிஷ் எம்பயர் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படும் இந்த பீர் 650 மில்லி லிட்டர், 325 மில்லி லிட்டர் அளவுகளில் வருகிறது.

    சூப்பர் ஸ்ட்ராங் பீர் என்ற புதிய தயாரிப்பின் பீர் விற்பனை பீர் பிரியர்களிடம் அதிக வரவேற்பை பெறும் என்று டாஸ்மாக் நிர்வாகம் கருதுகிறது.

    650 மி.லி முழு பாட்டில் விலை ரூ.200-ம் 325 மி.லி. அரை பாட்டில் விலை ரூ.100-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறிய வகை 'டின்'களிலும் பிரிட்டிஷ் எம்பயர் பீர் கிடைக்கும். இந்த பீர் சில நாட்களில் மதுக் கடைகளில் விற் பனைக்கு கிடைக்கும் என்று டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்தனர்.

    • புதிய மருத்துவ சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டது.
    • கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 500 படுக்கைகள், அதிதீவிர சிகிச்சை, அவசர சிகிச்சை உள்ளிட்ட புதிய மருத்துவ சேவைகள் தொடக்க விழா நடந்தது.

    கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். அமைச்சர்கள் சுப்ரமணியன், ராஜ கண்ணப்பன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய மருத்துவ சேவைகளை தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பயிற்சி) சிவானந்தம், ராமநாதபுரம் தி.மு.க மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராம லிங்கம் எம்.எல்.ஏ.க்கள் கருமாணிக்கம், முருகேசன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் திசை வீரன், ராமநாதபுரம் நகர் சபை தலைவர் கார்மேகம், துணை

    தலைவர்பிரவீன் தங்கம், ராமநாதபுரம் ஒன்றிய தலைவர் பிரபாகரன், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி உறுப்பினரும், நகராட்சி உறுப்பினருமான ஜஹாங்கீர், போகலூர் ஒன்றிய தலைவர் சத்யா குணசேகரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) விஜயகுமார், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் செந்தில் குமார், மருத்துவர்கள் மலையரசு, மனோஜ்குமார், ஆனந்த் சொக்கலிங்கம் உள்பட பலர் கொண்டனர்.

    • புகார் தெரிவிக்க புதிய உதவி எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.
    • பொதுமக்கள் எளிதில் நினைவில் கொள்ள புதிய நம்பர் 15 52 14 என்ற உதவி எண்ணும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குழந்தைதொழி லாளர்களை எவ்வித பணிக ளிலும், அபாய கரமான தொழில்களில் வளரிளம் பருவத் தொழிலாளர்களை பணியமர்த்துவதும், குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தொழிலாளர்களை தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல் சட்டம் 1986-ன் படி தண்ட னைக்குரிய குற்றமாகும்.

    அவ்வாறு பணியமர்த்தப்பட்டுள்ளது கண்டறியப்பட்டால் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் அல்லது 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

    குழந்தைகள் இடைநிற்றல் இன்றி பள்ளிக்கு செல்ல வேண்டும். பள்ளிக்கு அனுப்பாமல் தமது குழந்தைகளை பணிக்கு அனுப்பும் பெற்றோர் மீதும் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்புச்சட்டம் 1976-ன் படி ஓராண்டு முதல் 3 ஆண்டு வரை தண்டனை விதிக்கப்படும்.

    குழந்தை மற்றும் கொத்தடிமை தொழிலாளர் முறை முற்றிலும் ஒழிக்க மற்றும் புகார் தெரிவிக்க தமிழ்நாடு அரசு சார்பில் உதவி எண்கள் 1800 42 52 650 அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது கூடுதலாக பொதுமக்கள் எளிதில் நினைவில் கொள்ள புதிய நம்பர் 15 52 14 என்ற உதவி எண்ணும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

    ஆகவே குழந்தைத் தொழிலாளர் மற்றும் கொத்தடிமை தொழிலாளர் முறை குறித்து புகார் தெரிவிக்க மேற்கண்ட உதவி எண்களை பொது மக்கள் பயன்படுத்தலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
    • மானாவாரியில் 12 நாட்கள், இறவையில் 122 நாட்களுக்கு ஏற்றது.

    உடுமலை:

    வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், கதிரி லெபாக் ஷி 1812 என்ற புதிய நிலக்கடலை ரகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.தேசிய எண்ணெய் வித்துக்கள் இயக்கம் வாயிலாக, இந்த புதிய ரகம் விவசாயிகளுக்கு கிடைக்கவும் ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட கிராமங்களில், தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.அவ்வகையில் காட்டுப்பாளையம் கிராமத்தில் நடந்த பயிற்சி வகுப்பில், திட்ட ஆலோசகர் அரசப்பன் பேசியதாவது:-

    மானாவாரி சாகுபடியை அதிகப்படுத்தவும், நிலக்கடலையில் கூடுதல் மகசூல் பெறவும், வேளாண் துறை சார்பில் புதிய ரகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது வறட்சியை தாங்கி வளரும்.மானாவாரியில் 12 நாட்கள், இறவையில் 122 நாட்களுக்கு ஏற்றது. அதிக மகசூல் தரக்கூடியது. எக்டருக்கு 5,000 கிலோ வரை மக்குல் கிடைக்கும்.இதில் 51 சதவீதம் எண்ணெய் சத்து மற்றும் 28 சதவீதம் புரதச்சத்து உள்ளது. பூச்சி மற்றும் நோய் எதிர்ப்புத திறன் கொண்டதால் பயிர் பாதுகாப்பு, மருந்து செலவு குறையும்.இவ்வாறு அவர் பேசினார்.

    • மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகள் அறிமுகம் செய்யப்பட்டது.
    • பேஷன் வடிவமைப்பு அனைவராலும் மிகவும் விரும்பப்படும் துறையாக மாறி வருகிறது.

    திருப்பரங்குன்றம்

    பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் இந்த ஆண்டு புதிய பாடப்பிரிவுகள் சேர்க்கப்பட்டன. இதுகுறித்து கல்லூரியின் செயலர் எம்.விஜயராகவன், முதல்வர் ராமசுப்பையா, இயக்குநர் பிரபு ஆகியோர் கூறியதாவது:-

    மன்னர் திருமலைநாயக்கர் கல்லூரியில் இந்த ஆண்டு இளநிலை பிரிவுகளில் பி.எஸ்.சி.சி.எஸ், செயற்கை நுண்ணறிவு, பி.எஸ்.சி. ஆடை வடிவமைப்பு, பேஷன் டெக்னாலஜி ஆகிய புதிய படிப்புகள் சேர்க்கப்பட்டன. ஆடை வடிவமைப்புத் துறை தொடர்ந்து வளர்ந்து வருகிறது. எனவே ஆடை வடிவமைப்பாளர்கள் இந்தத் துறையில் தொழில் நுட்ப அறிவு, நடைமுறை திறன்களை பெறுவது அவசியமாகிறது. சமீப காலங்களில் பேஷன் வடிவமைப்பு அனைவராலும் மிகவும் விரும்பப்படும் துறையாக மாறி வருகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் அதிகளவில் வேலை வாய்ப்புகளை நிர்ணயிக்கும் படிப்பாக இது உள்ளது. சுய வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொள்ளும் வகையிலும் இந்த படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • திருச்செங்கோட்டில் பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது.
    • இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் நன்கொடை மற்றும் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக, பிரத்யேகமாக கியூ.ஆர்.கோடு அடங்கிய பலகை தயாரிக்கப்பட்டது.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் நன்கொடை மற்றும் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக, பிரத்யேகமாக கியூ.ஆர்.கோடு அடங்கிய பலகை தயாரிக்கப்பட்டது.

    இந்த பலகை நேற்று திருச்செங்கோடு பாரத வங்கி தலைமை மேலாளரால், கோவிலின் அறங்காவலர் குழுத் தலைவர் தங்கமுத்து, கோவில் உதவி ஆணையர் ரமணிகாந்தன் மற்றும் அறங்காவலர்கள் முன்னி லையில் வழங்கப்பட்டு, கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் கோவில் கண்காணிப்பாளர் சுரேஷ், திருச்செங்கோடு சரக ஆய்வர் நவீன்ராஜா மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • மதுரை அருகே புதிய ரக வாழைக்கன்று அறிமுகம் செய்யப்பட்டது.
    • பேப்ஸ் இயக்குநர் அருள், சிபோ பழனிவேல் உள்பட தொண்டு நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.

    வாடிப்பட்டி

    சிறுமலை வாழை உற்பத்தியை அதிகப்படுத்தும் விதத்தில் வாழை புத்தாக்க திட்டத்தில் புதிய ரக திசுகள் சார் வாழைக்கன்று அறிமுகம் வாடிப்பட்டியில் நடந்தது. கிரட்செயலாளர் அழகேசன் தலைமை தாங்கினார். நபார்டுமாவட்ட மேலாளர் சக்தி பாலன் முன்னிலை வகித்தார். கிரட் இயக்குநர் கண்மணி வரவேற்றார். மாவட்ட மேலாளர் பாலசந்திரன், சிறுமலை வாழை புத்தாக்க திட்டத்தின் கீழ் திசுக்கள் சார் முதல் வாழை கன்றை சிறுமலை காய்கறி உற்பத்தியாளர்கள் நிறுவன இயக்குநர் கீதாவுக்கு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் பேப்ஸ் இயக்குநர் அருள், சிபோ பழனிவேல் உள்பட தொண்டு நிறுவனத்தினர் கலந்து கொண்டனர். சீனிவாசன் நன்றி கூறினார்.

    • பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.396-ல், ரூ10 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
    • 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் இந்த காப்பீட்டு திட்டத்தில் சேரலாம்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்ட அஞ்சல் கோட்ட கண்கா ணிப்பாளர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் டாடா ஏ.ஐ.ஜி ஜெனரல் இன்சூரன்ஸ் மற்றும் பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.396-ல், ரூ10 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

    18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் இந்த காப்பீட்டு திட்டத்தில் சேரலாம்.விண்ணப்ப படிவம், அடையாள, முகவரி சான்றின் நகல்கள் போன்ற எந்த விதமான காகித பயன்பாடுமின்றி, தபால்காரர் கொண்டு வரும் ஸ்மார்ட் போன், விரல் ரேகை மூலம், வெறும் 5 நிமிடங்களில் முற்றிலும் டிஜிட்டல் முறையில் இந்த பாலிசி வழங்கப்படுகிறது.

    இத்திட்டத்தின் சிறப்பம்சங்களாக ரூ.10லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீடு மற்றும் விபத்தினால் ஏற்படும் மருத்துவ செலவுகளில் உள்நோயாளி செலவு களுக்கு அதிகபட்சம் ரூ.60 ஆயிரம் வரையும், புறநோயாளி செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.30ஆயிரம் வரையும், விபத்தினால் மரணம், ஊனம், பக்கவா தம் ஏற்பட்டவரின் குழந்தைகளின் கல்வி செலவுகளுக்கு ரூ.1 லட்சம் வரையும், விபத்தினால் மருத்துவமனையில் அனும திக்கப்படும் நாட்களுக்கு, தினப்படி தொகை ஒரு நாளைக்கு ரூ.1000 வீதம் 10 நாட்களுக்கும், விபத்தில் பாதிக்கப்பட்டவரை பார்க்க பயணிக்கும் குடும்பத்தினரின் பயண செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.25,000 வரையும், விபத்தினால் உயிரிழக்க நேரிட்டால், ஈமக்கிரியைகள் செய்ய ரூ.5,000 வரையும் காப்பீடு வழங்கப்படுகிறது.

    பொது மக்கள் அனை வரும் பரமத்தி வேலூர், பொத்தனூர், பரமத்தி, ஜேடர்பாளையம், பாண்ட மங்கலம் உள்ளிட்ட பல்வேறு அஞ்சலகங்கள், தபால்காரர்கள் மூலம் இந்த குழு விபத்து காப்பீட்டு திட்டத்தில் இணைந்து பயன்பெறுலாம்.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார். 

    ×