search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கந்த கிரிவலம்"

    • பக்தர்கள் சரண கோஷம் முழங்க 6 முறை மலையை சுற்றி வலம் வந்தனர்
    • கன்னியாகுமரியை அடுத்த பழத்தோட்டம் பக்கம் உள்ள முருகன் குன்றத்தில் வேல்முருகன் கோவில் உள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியை அடுத்த பழத்தோட்டம் பக்கம் உள்ள முருகன் குன்றத்தில் வேல்முருகன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் ஐப்பசி மாத விசாகத்தையொட்டி நேற்று மாலை கந்தகிரிவலம் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக காலையில் விஸ்வரூப தரிசனமும் அதைத்தொடர்ந்து அபிஷேகமும் நடந்தது. பின்னர் சிறப்பு வழிபாடு நடந்தது.

    அதன் பிறகு யாகசாலை பூஜை ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து பூர்ணா குதி மற்றும் தீபாராதனையும் நடந்தது.

    பின்னர் உற்சவ மூர்த்திகளுக்கும் திருவேலுக்கும் கும்பகலச சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. பின்னர் முருகனுக்கு வெள்ளி அங்கி சாத்தி சிறப்பு வழிபாடு நடந்தது. அதன் பிறகு அன்னதானம் நடந்தது. மாலையில் திருவிளக்கு சகஸ்ர நாம வழிபாடும் அதைத் தொடர்ந்து கந்தகிரிவலமும் நடந்தது.

    அப்போது ஏராளமான முருகபக்தர்கள் முருகன் குன்றம் மலையை சுற்றி சரண கோஷங்கள் முழங்க 6 தடவை வலம் வந்தனர். இரவு பஜனையும் அதைத் தொடர்ந்து சிறப்பு வழிபாடும் அலங்கார தீபாராதனையும்நடந்தது.

    ×