search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு பஸ் பணிமனை"

    • பஸ்கள் நிறுத்தப்படும் அனைத்து பகுதிகளும் மழைக் காலங்களில் சேறும் சகதியுமாக மிக மோசமாக உள்ளது.
    • டிரைவர்கள் பஸ்களை பணிமனையில் இயக்குவது மிக சிரமமாக உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சி உட்பட்ட தி.இளமங்கலத்தில் கடந்த சுமார் 29 ஆண்டுகளுக்கு மேலாக அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்டம் திட்டக்குடி கிளை பணிமனை உள்ளது. இங்கு பஸ்கள் நிறுத்தப்படும் அனைத்து பகுதிகளும் மழைக் காலங்களில் சேறும் சகதியுமாக மிக மோசமாக உள்ளது.

    இதனால் டிரைவர்கள் பஸ்களை பணிமனையில் இயக்குவது மிக சிரமமாக உள்ளது. சில சமயம் பஸ்கள் பணிமனையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் சிக்கிக் கொள்வதால் டிவைர்கள் பஸ்களை இயக்க சிரமப்படுகின்றனர்.இது குறித்து பல ஆண்டுகளாக போக்குவரத்து தொழிலாளர்கள் தமிழக அரசுக்கு போக்குவரத்து பணிமனையை சீர் செய்து சமநிலைப்படுத்தி தருமாறு கோரிக்கை வைத்தும் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் அவல நிலை நீடிக்கிறது.

    பஸ்களை இயக்கும் சமயத்தில் பள்ளத்தில் பஸ் சிக்கிக் கொண்டு பழுது ஏற்பட்டால் டிவைர்கள் பொறுப்பு என அவர்களுக்கு மெமோ கொடுப்பதாக புகார் எழுந்து உள்ளது.இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் அரசு பஸ்களை பராமரிக்கும் பணிமனை பொறுப்புடன் அப்பகுதியில் சிமெண்ட் தளம் அமைத்து பஸ்களை நிறுத்த வேண்டும். மேலும் பணிமனையில் பணி புரியும் ஊழியர்கள், டிரைவர்கள், கண்டக்டர்கள் தங்கும் ஓய்வறை உயரமான தளம் அமைத்து தர வேண்டும்.

    காரணம் தற்போது தரை மட்டத்துக்கு ஓய்வறை உள்ளதால் பின்புறம் உள்ள் விவசாய நிலங்களில் இருந்து பாம்புகள் உள்ளே நுழைவது அன்றாட நிகழ்வுகளாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் போக்குவரத்து பணிமனையை போர்க்கால அடிப்படையில் சீர் செய்து தர வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். 

    ×