search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொலையாளியை பிடிக்க"

    • ஆறுமுகசாமி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கார்த்தியையும், கவுதமையும் சரமாரியாக குத்தினார்.
    • 2 பேரையும் பிடிக்க டவுன் டி.எஸ்.பி ஆனந்தகுமார் தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு :

    ஈரோடு முனிசிபல் காலனி கிருஷ்ணசாமி வீதியை சேர்ந்தவர் லோகநாதன். இவர்களுக்கு கவுதம் (வயது 30), கார்த்தி (26) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

    இவர்கள் செக் எண்ணெய், மசாலா பொடிகள், மலை தேன் போன்றவற்றை வீட்டிலேயே விற்பனை செய்து வந்தனர். இவர்களு க்கும் அவரது மாமாவான மாணிக்கம்பாளையத்தை சேர்ந்த ஆறுமுகசாமிக்கும் முன்விரேதம் இருந்து வந்தது.

    இந்நிலையில் கவுதம், கார்த்தி ஆகியோருக்கும் ஆறுமுகசாமிக்கும் செல்போனில் பேசிக்கொள்ளும்போது வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு 8.30 மணிஅளவில் கவுதம், கார்த்தி ஆகிய 2 பேரும் வீட்டில் இருந்தனர்.

    அப்போது அவர்களது வீட்டுக்கு ஆறுமுகசாமி வந்து தகராறு செய்து உள்ளார். சத்தம் கேட்டு கவுதம், கார்த்தி ஆகியோர் வீட்டில் இருந்து வெளியே வந்தனர்.

    அப்போது அண்ணன்-தம்பிக்கும், ஆறுமுக சாமிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதை கார்த்தி செல்போனில் வீடியோ எடுத்து பதிவு செய்துள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த ஆறுமுகசாமி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கார்த்தியையும், கவுதமையும் சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் 2 பேரும் அங்கேயே சரிந்து விழுந்தனர்.

    பின்னர் ஆறுமுகசாமி அங்கிருந்து தப்பி ஓடினார். உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த கவுதம், கார்த்தி ஆகிய 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஒரு காரில் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் பலனளிக்காமல் அவர்கள் 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

    இதுகுறித்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட கார்த்திக் நாம் தமிழர் கட்சியின் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக இருந்து வந்தார்.

    மேலும் இந்த கொலையில் ஆறுமுக சாமியுடன் மற்றொரு வரும் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து 2 பேரும் தலைமறைவாகி விட்டனர்.

    இந்நிலையில் அவர்கள் 2 பேரையும் பிடிக்க டவுன் டி.எஸ்.பி ஆனந்தகுமார் தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    ஈரோட்டில் இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடந்து வரும் நிலையில் அண்ணன், தம்பியை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பெருந்துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயல் மேற்பார்வையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
    • சந்தை பகுதியில் உள்ள ஏராளமானவரிடம் நேற்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை சந்தை பகுதியில் சாந்தா (57) என்ற பெண் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இது தொடர்பாக பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இந்த நிலையில் கொலையாளி யார்? எதற்காக கொலை நடந்தது? என்ற விவரம் தெரியாததால் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் பெருந்துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயல் மேற்பார்வையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

    இதில் பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம், சென்னிமலை இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

    மேலும் பெருந்துறை சப்-டிவிஷன் குற்றப்பிரிவு போலீசார் தலைமையிலும், பெருந்துறை சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமை யிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    சந்தை பகுதியில் உள்ள ஏராளமானவரிடம் நேற்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விரைவில் கொலையாளியை பிடித்து விடுவோம் என போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர்.

    ×