search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொலைவெறி தாக்குதல்"

    • போலீசாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • போலீஸ் ஏட்டு மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய 4 பேர் கைது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி வில்லியனூர் அருகே கோபாலன் கடை பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். ரவுடியான இவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. இவரது தம்பி பிரதீப். இவர்கள் இருவரும் சேர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக வில்லியனூர் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் அடிப்படையில் போதைப் பொருள் ஒழிப்பு தடுப்பு பிரிவு போலீஸ் ஏட்டு வசந்த் மற்றும் வில்லியனூர் போலீசார் கோபாலன் கடை பகுதிக்கு சென்றனர். வில்லியனூர் போலீசாரை சற்று தூரத்தில் நிற்க வைத்து விட்டு சதீஷ் வீட்டுக்கு போலீஸ் ஏட்டு வசந்த் சென்றார்.

    அங்கு சதீசை மடக்கி பிடித்து கை விலங்கிட்டு போலீஸ் ஏட்டு வசந்த் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்ல முயன்றார். அப்போது சதீசின் மனைவி ராஜேஸ்வரி சதீசை அழைத்து செல்ல விடாமல் தடுக்க முயன்றார்.

    மேலும் சதீசின் தம்பி பிரதீப் மற்றும் 17 வயதுடைய மற்றொரு தம்பி, ராஜேஸ்வரி, சதீஷ் ஆகிய 4 பேரும் சேர்ந்து போலீஸ் ஏட்டு வசந்த்தை சரமாரியாக தாக்கினர். அதோடு குக்கரின் மூடியால் வசந்த்தின் முகத்தில் குத்தினர். இதில் நிலை குலைந்து போன வசந்த் அலறல் சத்தம் போட்டார்.

    இந்த சத்தம் கேட்டு சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்த வில்லியனூர் போலீசார் விரைந்து வந்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த போலீஸ் ஏட்டு வசந்த்தை மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதை தொடர்ந்து போலீஸ் ஏட்டு மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய ரவுடி சதீஷ், அவரது மனைவி ராஜேஸ்வரி, தம்பி பிரதீப் மற்றும் 17 வயதுடைய மற்றொரு தம்பி ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • பெத்தானூர் கிராமத்தில் சுப்பிரமணி புதிதாக வீடு கட்டி வருவதாக கூறப்படுகிறது
    • ஆட்டோவின் மூலம் கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் பெத்தானூர் கிராமத்தில் வசிக்கும் காசி இவருடைய மகன் சுப்பிரமணி இவருக்கு ராணி என்ற மனைவி உள்ளார். பெத்தானூர் கிராமத்தில் சுப்பிரமணி புதிதாக வீடு கட்டி வருவதாக கூறப்படுகிறது. வீட்டின் பணி 80 சதவீதம் முடிந்த நிலையில் அந்த வீட்டிற்கு ஒயரிங் வேலை செய்வதற்கு அதே பகுதியில் வசிக்கும் அஜித் வயது 28 என்ற இளைஞர் வீட்டு உரிமையாளரை அணுகி உள்ளார். அப்பொழுது வீட்டின் உரிமையாளர் சுப்பிரமணி அஜித் ஒயரிங் வேலை செய்வதற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அஜித் சுப்பிரமணி வீட்டிற்கு குடிபோதையில் சென்றுள்ளார். அப்பொழுது வீட்டில் இருந்த சுப்பிரமணியின் மனைவி ராணியிடம் உன் வீட்டுக்காரன் எங்கே அவனை இங்கே வர சொல்லு எனக்கூறி தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

    பின்னர் ராணி என் கணவர் வீட்டில் இல்லை என கூறியுள்ளார். பின்பு ராணியை கீழே தள்ளி எட்டி உதைத்ததாக கூறப்படுகிறது. ராணி வலி தாங்க முடியாமல் அருகில் இருந்த மளிகை கடைக்கு தப்பித்து ஓடி விட்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர் வீட்டிற்கு வந்த சுப்பிரமணியிடம் ராணி நடந்த விஷயத்தை கூறியுள்ளார். பின்னர் அஜித்திடம் என் மனைவியை எதற்காக அடித்தார் என கேட்ட சுப்பிரமணியையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இச் சம்பவத்தால் ராணிக்கு காயம் ஏற்பட்டது இதனால் ஆட்டோவின் மூலம் கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். பின்பு சின்னசேலம் காவல் நிலையத்தில் நேற்று ராணி புகார் கொடுத்தார் புகாரின் அடிப்படையில் வழக்கை பதிவு செய்த விசாரணை கொண்டு வருகின்றனர்.

    ×