என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மின்சாரம் தடை"
- ஐசியுவிற்கு தனி ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கப்படுகிறது.
- மின்தடையால் நோயாளிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர்
சென்னை:
சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் இன்று இரவு திடீரென மின்தடை ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக ஏற்பட்ட மின்தடையால் நோயாளிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர்.
மின்சாரம் செல்லக்கூடிய கேபிள்களில் ஏற்பட்ட தீ விபத்தால் மின் விநியோகம் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதுதொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ செய்தியாளர்களிடம் கூறுகையில், மருத்துவமனை முழுவதிலும் விரைவில் மின் விநியோகம் சீராகும். அவசர சிகிச்சை பிரிவில் உள்ளோருக்கு எந்த பாதிப்பும் இல்லை. அங்கு தனி ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கப்படுகிறது. நோயாளிகள் பயப்படும் அளவுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என தெரிவித்தார்
இந்நிலையில், கிண்டி அரசு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று ஆய்வு செய்தார்
- தமிழகத்தில் தினமும் கொலை, கொள்ளை சர்வ சாதாரணமாக நடக்கிறது.
- பா.ஜ.க ஆளும் மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதிகளை அதிகளவு கொடுக்கிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பவானியில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கருப்பணன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சிறுமியர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுப்பவர்கள், கஞ்சா விற்பனை செய்பவர்களை என்கவுண்டர் செய்ய வேண்டும் அல்லது அவர்களை தூக்கிலிட வேண்டும். இது தொடர்பாக முதல்வர் தனி சட்டம் இயற்ற வேண்டும்.
தமிழகத்தில் தினமும் கொலை, கொள்ளை சர்வ சாதாரணமாக நடக்கிறது. தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன், பா.ஜ.க.வினர் கூட்டணி இல்லாததால் மத்தியில் மைனாரிட்டி அரசாக உள்ளது.
பா.ஜ.க, அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் இருந்திருந்தால் தமிழகத்தில் அ.தி.மு.க 20, பா.ஜ.க 15 என 35 தொகுதிகள் பிடித்திருக்கும். தமிழகத்தில் பா.ஜ.க ஆளும் கட்சியாக வரவேண்டும் என்பதற்கு அ.தி.மு.க பாடுபட முடியுமா? பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் குறைந்து கொண்டே வருகின்றனர்.
பா.ஜ.க ஆளும் மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதிகளை அதிகளவு கொடுக்கிறது. மற்ற மாநிலங்களில் குறைவாக கொடுக்கிறது. மக்களின் பணத்தை ஏமாற்றியதற்கு சிறைக்கு சென்று பிணையில் வெளியே வந்த செந்தில்பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவியை முதலமைச்சர் கொடுத்துள்ளார்.
தி.மு.க.வில் முன்னாள் நிதி அமைச்சர் பழனிவேல்ராஜன் போன்ற பல நல்லவர்கள் உள்ளனர். பழனிவேல் தியாகராஜனிடம் மின்சாரத்துறையை கொடுத்திருந்தால் ஒரு முறை கூட மின்வெட்டு இருந்திருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
- 6 மணி அளவில் எதிர்பாராத விதமாக உயர் மின் அழுத்த மின் மாற்றில் பழுது ஏற்பட்டது.
- 8:10 மணி அளவில் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் துணை மின் நிலையத்தில் நேற்று மாலை சுமார் 6 மணி அளவில் எதிர்பாராத விதமாக உயர் மின் அழுத்த மின் மாற்றில் பழுது ஏற்பட்டது. இதனால் தியாகதுருகம், பெரிய மாம்பட்டு, சின்னமாம்பட்டு, தியாகை, எலவனாசூர்கோட்டை, ரிஷிவந்தியம், பாவந்தூர், நூரோலை, அய்யனா ர்பாளையம், பழைய சிறுவங்கூர், சூளாங்குறி ச்சி, மாடூர், மடம், பிரிதிவிமங்களம், வீரசோழபுரம், வீ.பா ளையம், கூட்டுக் குடிநீர் திட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது.
இதனைத் தொடர்ந்து திருக்கோவிலூர் செயற்பொறியாளர் ரகுராமன் தலைமையில் கள்ளக்குறிச்சி மின் அளவு மற்றும் உணர்த்தி ஓர்வு அதிகாரிகள் விரைந்து வந்து மின் மாற்றியில் ஏற்பட்ட பழுதை சரி செய்தனர். அதனை தொடர்ந்து இரவு சுமார் 8:10 மணி அளவில் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டது. இவ்வாறு அறிவிக்கப்படாத மி ன்வெட்டால் தியாகதுருகம் பகுதி பொது மக்கள் மிகவும் அவதியடைந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்