என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நவ்நீத் ரானா"
- அமராவதி மாவட்டம் ஹலார் கிராமத்தில் நேற்று இரவு பிரசாரம் செய்தார்.
- புகாரின் அடிப்படையில் 45 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் வரும் நவம்பர் 20ஆம் தேதி ஒரேகட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 23ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தேர்தலை முன்னிட்டு மகாராஷ்டிர அரசியல் களத்தில் உள்ளூர் தலைவர்கள் முதல் தேசிய தலைவர்கள் வரை அனல் பறக்கும் பிரசரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜகவின் மாகாயுதி கூட்டணிக்கும், காங்கிரசின் மகா விகாஸ் அகாதி கூட்டணிக்கும் கடுமையான போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில், நடிகையும், பாஜக முன்னாள் எம்.பியுமான நவ்நீத் கவுர் ராணா மீது மகா. பிரசாரத்தின் போது சேர்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டம் ஹலார் கிராமத்தில் நேற்று இரவு 9 மணியளவில் பாஜக தேர்தல் பிரசார நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக கூட்டணியின் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள பாஜக முன்னாள் எம்.பி. நவ்நீத் கவுர் ராணா சென்றிருந்தார்.
அங்கு திரண்டிருந்த பொதுமக்களில் சிலர் முன்னாள் எம்.பி. நவ்தீப் கவுர் ராணா மற்றும் பாஜகவினர் மீது தாக்குதல் நடத்தினர். கவுர் ராணா மீது கற்கள், நாற்காலியை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக ராணா போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் 45 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர். நவ்நீத் ராணா தமிழில் கருணாஸ் நடித்த அம்பா சமுத்திரம் அம்பானி படத்தின் கதாநாயகி என்பது குறிப்பிடத்தக்கது.
??ℝ????? | BJP leader and former MP Navneet Rana was attacked during her rally in Amravati, Maharashtra. Fortunately, she escaped unharmed. During her speech, she was subjected to lewd gestures and offensive slogans, including "Allahu Akbar." The crowd then began throwing… pic.twitter.com/MLIxl8GzB6
— ℝ?? ???? (@Rajmajiofficial) November 17, 2024
कट्टर हिंदुत्ववादी नेत्या भारतीय जनता पक्षाच्या उमेदवार नवनीत राणा यांच्या दर्यापूर येथील सभेत मुस्लिमांचा हल्ला...हाच माज महा विनाश आघाडी आल्यावर वाढणार आहे यांचा.. आज माजी खासादर वर हल्ला होतोय तर तिथे सर्वसामान्य च काय खरं...??सावधान हिंदूंनो हेच संकट तोंड वासून दारासमोर… pic.twitter.com/W52XLHsfQI
— राम ? (@Ram9699_) November 17, 2024
- நவ்நீத் ரானா மீது போலி சான்றிதழ் பெற்றதாக வழக்குப்பதிவு.
- அவரது சாதி சான்றிதழை கடந்த ஆண்டு மும்பை ஐகோர்ட்டு ரத்து செய்தது.
மும்பை
மராட்டிய மாநிலம் அமராவதி தொகுதி சுயேச்சை எம்.பி.யாக இருப்பவர் நவ்நீத் ரானா. நடிகையான இவர் தமிழ் படமான அம்பாசமுத்திரம் அம்பானி படத்தில் நடித்துளளார்.
இவர் தேர்தலில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தனி தொகுதியில் போட்டியிட போலி சான்றிதழ் பெற்றதாக மும்பை முல்லுண்டு போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை மும்பை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது.
ஏற்கனவே வழக்கு விசாரணைக்கு வந்தபோது நவ்நீத் ரானா மற்றும் அவரது தந்தை ஆஜராகவில்லை. எனவே அவர்களுக்கு எதிராக கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் பிடிவாரண்டு் பிறப்பித்து இருந்தது.
இந்தநிலையில் நேற்று வழக்கு மீதான விசாரணையின் போது, நவ்நீத் ரானாவுக்கு எதிரான பிடிவாரண்டை செயல்படுத்த கூடுதல் அவகாசம் வேண்டும் என போலீசார் கேட்டனர். இதை நிராகரித்த மாஜிஸ்திரேட்டு மோகாஷி, நவ்நீத் ரானா மற்றும் அவரது தந்தைக்கு எதிராக புதிதாக ஜாமீனில் வெளி வரமுடியாத பிடிவாரண்டை பிறப்பித்தார். மேலும் பிடிவாரண்டு உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிட்டார். பின்னர் வழக்கு மீதான விசாரணையை வரும் 28-ந் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
நவ்நீத் ரானா போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்து சாதி சான்றிதழ் வாங்கியதாக கூறி அவரது சாதி சான்றிதழை கடந்த ஆண்டு மும்பை ஐகோர்ட்டு ரத்து செய்தது. அதை எதிர்த்து நவ்நீத் ரானா சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்