search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "7 சட்டமன்ற தொகுதிகளில் 18 லட்சம் வாக்காளர்கள்"

    • திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
    • வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் வழங்கினார்.

    திண்டுக்கல்:

    இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் தொடங்குவதை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி இன்று வெளியிடப்படும் வரைவு வாக்காளர்பட்டியல் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.

    இதனை வாக்காளர்கள் பார்வையிட்டு தங்கள் பெயர் உள்ளதை உறுதி செய்து கொள்ளவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய, திருத்தம் செய்ய, முகவரிமாற்றம் செய்ய, நகல் அட்டை பெற விருப்பம் உள்ளவர்கள் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களிலும் நேரடியாக சென்று மனுக்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தும், கட்டணமில்லா தொலைபேசி எண் 1950ல் அழைத்தும் விபரங்களை தெரிந்து கொள்ளலாம். அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வருகிற 12,13, 26 மற்றும் 27-ந்தேதிகளில் காைல 10 மணிமுதல் மாலை 5 மணிவரை சிறப்பு முகாம்கள் நடைெபறும். இந்த முகாம்களில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியின் அடிப்படையில் முடிவு செய்யப்படும்.

    இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற ஜனவரி 5-ந்தேதி வெளியிடப்படும் என்று மாவட்ட தேர்தல்அலுவலரும், கலெக்டருமான விசாகன் தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு அவர் வழங்கினார்.

    பழனி சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 1,34,347, பெண்கள் 1,40,914, இதரர் 52 என மொத்தம் 2,75,313 பேர் உள்ளனர்.

    ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 1,15,490, பெண்கள் 1,22,743, இதரர் 9 என மொத்தம் 2,38,242 பேர் உள்ளனர்.

    ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 1,38,819, பெண்கள் 1,50,891, இதரர் 26 என மொத்தம் 2,90,736 பேர் உள்ளனர்.

    நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 1,20,711, பெண்கள் 1,25,683, இதரர் 11 என மொத்தம் 2,46,405 பேர் உள்ளனர்.

    நத்தம் சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 1,37,960, பெண்கள் 1,44,489, இதரர் 55 என மொத்தம் 2,82,508 பேர் உள்ளனர்.

    திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 1,31,495, பெண்கள் 1,39,302 இதரர் 53 என மொத்தம் 2,70,850 பேர் உள்ளனர்.

    வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 1,28,990, பெண்கள் 1,47,789 என மொத்தம் 2,63,779 பேர் உள்ளனர்.

    இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் ஆண்கள் 9,08,812, பெண்கள் 9,58,815, இதரர் 206 என ெமாத்தம் 18,67,833 பேர் உள்ளனர்.

    ×