என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "முகாம் . CAMP"
- அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி
- இலவச கண் பரிசோதனை முகாம்
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், விளாங்குடி அருகே உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில், இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
முகாமை அக்கல்லூரியின் முதல்வர் பெ. செந்தமிழ்ச் செல்வன் தொடங்கி வைத்தார். திருச்சி பவுண்டேஷன் மருத்துவமனை மருத்துவக் குழுவினர் கலந்து கொண்டு,400 மாணவர்கள், 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு இலவச கண் பரிசோதனை செய்தனர். இதில் 50 பேர் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் ஆ. ஆதிலட்சுமி மற்றும் வேதியியல் துறை பேராசிரியர் ந. ராஜா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
- திருச்சி டைனமிக் ரோட்டரி கிளப் சார்பில் போலீசருக்கான கண் பரிசோதனை முகாம்
- சலுகை அடிப்படையில் அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
திருச்சி,
திருச்சி டைனமிக் ரோட்டரி கிளப்,
மேக்சி விஷன் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய போலீசருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் கிராப்பட்டி சிறப்பு காவல் படை அலுவலகத்தில் நடந்தது. முகாமினை சிறப்பு காவல் படை முதல் அணி கமாண்டன்ட் ஆனந்தன் தொடங்கி வைத்தார். டாக்டர் சிபு வர்க்கி குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
முகாமில் போலீசார் மற்றும் அவரது குடும்பத்தினர் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இதில் விழித்திரை, கண்புரை உள்ளிட்ட கண் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அறுவை சிகிச்சை தேவைப்பட்ட
வர்களுக்கு சலுகை அடிப்படையில் அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை டைனமிக் ரோட்டரி சங்க தலைவர் ரேவதி மோகன் குமார், செயலாளர் சுதா பிரபாகரன், நிர்வாகி சந்திரலேகா விஜயாலயன் ,திட்ட தலைவர் கிருஷ்ணா கணேஷ்,நிகழ்ச்சி தலைவர் சலீமா ஆகியோர் செய்திருந்தனர்.
- 35 திருநங்கைகள், திருநம்பிகள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்து முறையிட்டனர்.
- என்ஜினீயரிங் பட்டதாரியான திருநங்கை டி.என்.பி.எஸ்.சி. போட்டித்தேர்வுக்கு தயாராகுவதற்கு மனு கொடுத்தார்
திருப்பூர்:
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கை, திருநம்பிகளுக்கான குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் தலைமை தாங்கினார். சமூக நலத்துறை அதிகாரி ரஞ்சிதா தேவி முன்னிலை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 35 திருநங்கைகள், திருநம்பிகள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்து முறையிட்டனர்.
அவர்கள் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வீட்டுமனை, வீட்டு வசதி, கல்வி உதவித்தொகை, திறன் வளர்ப்பு பயிற்சி, சுயஉதவிக்குழு உறுப்பினராக சேர்ப்பு, பொருளாதார வளர்ச்சிக்காக காய்கறி கடை நடத்த ஏற்பாடு செய்யக்கோரி மனுக்கள் கொடுத்தனர். என்ஜினீயரிங் பட்டதாரியான திருநங்கை ஒருவர் அவர் டி.என்.பி.எஸ்.சி. போட்டித்தேர்வுக்கு தயாராகுவதற்கு தனக்கு தேவையான புத்தகங்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று மனு கொடுத்தார்.
அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட வருவாய் அதிகாரி, சமூகநலத்துறை அதிகாரிக்கு உத்தரவிட்டார்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவிலான கோடை கால பயிற்சி முகாம் வருகிற 1-ந் தேதி தொடங்குகிறது. தொடர்ந்து வருகிற 15-ந் தேதி வரை 15 நாட்களுக்கு காலை 6.30 முதல் 8.30 மணி வரையிலும், மாலை 4.30 முதல் 6.30 மணி வரையிலும் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து மற்றும் கையுந்துபந்து ஆகிய விளையாட்டுகள் மற்றும் மாவட்டத்தில் பிரசித்தி பெற்றுள்ள பெரிய விளையாட்டுகளும் நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் விளையாட்டு விடுதியில் சேர்வதற்கான அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும். மேலும் பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுபவர்கள் விளையாட்டு விடுதியில் சேருவதற்கு பரிந்துரை செய்யப்படும். எனவே மாவட்டத்திலுள்ள அரசு உயர், மேல், மெட்ரிக், நடுநிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகள் மற்றும் விளையாட்டில் ஆர்வம் உள்ள அனைத்து மாணவ-மாணவிகள் கலந்து கொள்ளலாம். பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களது பெயர்களை அலுவலக வேலை நேரங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேரடியாகவோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளலாம்.
- தராசு முத்திரையிடும் முகாம்
- 18-ந் தேதி வரை நடைபெறுகிறது
புதுக்கோட்டை:
பொன்னமராவதி வர்த்தக கழக கட்டிடத்தில் தராசு முத்திரையிடும் முகாம் தொடங்கப்பட்டது. புதுக்கோட்டை தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர் குணசீலன் தலைமையில் அலுவலர்கள் நேற்று தராசு முத்திரையிடும் முகாமை தொடங்கினர். பொன்னமராவதி வர்த்தகர் கழக தலைவர் பழனியப்பன் முகாமினை தொடங்கி வைத்தார். புதிதாக தராசு முத்திரையிட விரும்புவர்கள் மறு முத்திரையிட விரும்புபவர்கள் முறையாக ஆன்லைனில் பதிவு செய்து அதற்கான கட்டணம் செலுத்தி பின்னர் தராசு முத்திரையிட்டு வழங்கப்பட்டது. இந்த முகாம் வரும் 18-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் பொன்னமராவதி தாலுகாவில் உள்ள அனைத்து வணிகர்களும் தாங்கள் பயன்படுத்தும் தராசு க்கு முத்திரையிட்டு பயன்பெறுமாறு தொழிலாளர் நலத்துறையினர் தெரிவித்தனர்.
- மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் நடைபெற உள்ளது
- கலெக்டர் வெங்கட பிரியா தகவல்
பெரம்பலூர்:
பெரம்பலூர் கலெக்டர் வெங்கட பிரியா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு அரசு துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களை பெறுவதில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படும் சிக்கல்களை களைய சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் இதர நிறுவனங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த மருத்துவ முகாம்கள் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் உள்ள கிராமங்கள் வாரியாக நடத்தப்படவுள்ளது.
அதன்படி மத்திய அரசின் மாற்றுத்திறனா ளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, முகாம் நடத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் எசனை அரசு உயர்நிலைப்பள்ளியில் 15-ந் தேதி அன்றும், அன்னமங்கலம் ஆர்.சி. தொடக்கப்பள்ளியில் 16-ந் தேதி அன்றும், மலையாளப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 17-ந் தேதி அன்றும், பிரம்மதேசம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 18-ந் தேதி அன்றும், வி.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 22-ந் தேதி அன்றும், பாண்டகப்பாடி மானிய ெதாடக்கப்பள்ளியில் 23-ந் தேதி அன்றும், அல்லிநகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 24-ந் தேதியன்றும், கீழமாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 25-ந் தேதி அன்றும், இரூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 29-ந் தேதியன்றும், காரை அரசு மேல்நிலைப்பள்ளியில் 30-ந் தேதியன்றும், ஜமீன் பேறையூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் அடுத்த மாதம்(டிசம்பர்) 13-ந் தேதி அன்றும், மாவிலங்கை இந்து மானிய தொடக்கப்பள்ளியில் 14-ந் தேதி அன்றும், நக்கசேலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 15-ந் தேதி அன்றும், அகரம்சீகூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 16-ந் தேதி அன்றும், கீழப்புலியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 20-ந் தேதி அன்றும், கிழுமத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 21-ந் தேதி அன்றும், ஓலைப்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 22-ந் தேதி அன்றும், பரவாய் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 23-ந் தேதி அன்றும், சிறுமத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 27-ந் தேதி அன்றும், வடக்குமாதவி அரசு உயர்நிலைப்பள்ளியில் 28-ந் தேதி அன்றும், எளம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 29-ந் தேதியன்றும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது
மேற்குறிப்பிட்ட அட்டவணையின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நான்கு ஒன்றியங்களிலும் பார்வைத்திறன் குறையுடையோர், செவித்திறன் குறையுடையோர், மனவளர்ச்சிக்குன்றியோர், உடல் இயக்க குறைபாடுடையோர் மற்றும் பல்வகை குறைபாடுடையோர் தேசிய அடையாள அட்டை வழங்குதல் மற்றும் புதுப்பித்தல், பதிவு செய்தல், மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை, உதவி உபகரணங்கள் மற்றும் அறுவை சிகிச்சை தேவைப்படும் மாற்றுத்திறனாளிகளை கண்டறியும் ஒருங்கிணைந்த மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெறவுள்ளது.
இம்முகாமிற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை (மருத்துவ சான்றிதழுடன்) பிறப்பு சான்றிதழ் நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 6 எடுத்து வரவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்