search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேலம் செய்தி"

    • பொங்கல் பண்டிகையொட்டி பெரும்பாலான வீடுகளில் முதல் நாள் மற்றும் 2-வது நாளான நேற்றும் சைவ உணவுகளை சமைத்து அதனை சாமிக்கு படையலிட்டு கும்பிடுவது வழக்கம். 3-வது நாளான காணும் பொங்கல் அன்று அசைவ பிரியர்கள் இறைச்சி வாங்கி உண்பார்கள்.
    • காணும் பொங்கல் பண்டிகையொட்டி சேலத்தில் இறைச்சி, மீன் கடைகளில் அலைமோதிய கூட்டம் அலைமோதியது.

    சேலம்:

    பொங்கல் பண்டிகை ஓட்டி நேற்று முன்தினம் சேலம் மாநகரில் பெரும்பாலான இறைச்சி மற்றும் மீன்கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    தொடர்ந்து நேற்று திருவள்ளுவர் தினத்தை ஒட்டி மீன் கடைகள் இறைச்சி கடைகளை அடைக்க மாநகராட்சி சார்பில் உத்தரவிடப்பட்டு இருந்தது.

    இதையொட்டி இறைச்சி, மீன் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் அசைவ பிரியர்கள் கறி சாப்பிட முடியாமல் அவதி அடைந்தனர்.

    இந்த நிலையில், இன்று காலை சேலம் மாநகரில் உள்ள இறைச்சி கடைகள், மீன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. காலை முதலே இறைச்சி மற்றும் மீன் கடைகளில் கூட்டம் அலைமோதியது.

    இதைத்தொடர்ந்து1 மணி நேரம் வரை காத்து நின்று கடைகளில் இறைச்சியை பொதுமக்கள் வாங்கி சென்றனர். அதேபோல மீன் கடைகளிலும் கூட்டம் அலைமோதியது.

    1 கிலோ ஆடு இறைச்சி ரூ.800-க்கு விற்பனையானது. அதேபோல சூரமங்கலம் பகுதியில் உள்ள மாநகராட்சி மீன் சந்தை மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள மீன் சந்தைகளிலும் மீன்கள் விற்பனை அதிக அளவில் நடந்தது.

    • சீனாவில் இருந்து சேலம் வந்த மகுடஞ்சாவடியைச் சேர்ந்த ஜவுளி வியாபாரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
    • கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஜவுளி வியாபாரியை கண்காணிப்பதற்காக மகுடஞ்சாவடியில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டுள்ளனர்.

    மகுடஞ்சாவடி:

    சீனாவில் பி.எப்.7 என்ற புதிய வகை கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனால் நமது நாட்டிலும் அந்த வகை தொற்று பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சீனாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக கோவைக்கு விமானத்தில் வந்த சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியை சேர்ந்த ஜவுளி வியாபாரிக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    அவருக்கு இருப்பது புதிய வகை கொரோனாவா? என்பது குறித்து கண்டறிய சளிமாதிரிகள் மரபணு சோதனைக்காக சென்னையில் உள்ள மாநில சுகாதார ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    இதையடுத்து அந்த ஜவுளி வியாபாரி, மகுடஞ்சாவடியில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார். அவரை சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். மேலும், அவரது குடும்ப உறுப்பினர்கள் யாருக்கும் நோய் தொற்று அறிகுறி இல்லை. எனினும் அவர்கள் அனைவரும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

    மகுடஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சேர்ந்த மருத்துவக்குழுவினர் கொரோனா பாதித்த ஜவுளி வியாபாரியை காலை மற்றும் மாலை இருவேளையும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதுதவிர, அந்த நபரின் வீடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நோய் தொற்று அறிகுறியுடன் யாரேனும் வசிக்கிறார்களா? என்பது குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

    எனவே, அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளித்து நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மகுடஞ்சாவடி பகுதியில் நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.தொடர்ந்து மகுடஞ்சாவடி பகுதியில் கண்கா ணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுஉள்ளது. சுகாதார, மருத்துவ துறை யினர் மகுடஞ்சாவடியில் முகாமிட்டுள்ளனர்.

    • சேலத்தில் கடந்த 16-ந் தேதி இளம்பெண் ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இளம்பெண்ணின் தற்கொலைக்கு தூண்டிய மாமியார் கைது செய்யப்பட்டார்.

    சேலம்:

    சேலம் கிச்சிப்பாளையம் சன்னியாசிகுண்டு பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமர்.

    இவரது மனைவி கவிதா (வயது 25). இவர் கடந்த ஏப்ரல் மாதம் 16-ந்தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். விசாரணை அதிகாரி உதவி கமிஷனர் அசோகன் தொடர்ந்து உறவினர்களிடம் விசாரணை நடத்தினார்.

    அதில், கவிதா தற்கொலைக்கு அவரது மாமியார் கல்யாணி (52), தொந்தரவு செய்ததே காரணம் என தெரியவந்தது. இதனால் கல்யாணியை நேற்று போலீசார் கைது செய்தனர்.

    • சேலத்தில் தடைசெய்யப்பட்ட 103 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    • தடை செய்யப்பட்ட பொருட்–களை விற்பனை செய்த கடைகளுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கடைகளில் மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலர்கள் மற்றும் சேலம் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வில் சுமார் 103 கிலோ எடையுள்ள, தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள ஒருமுறையே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழி தட்டுகள், டம்ளர்கள், ஸ்பூன்கள், உறிஞ்சு குழல்கள் மற்றும் கேரி பேக்குகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    மேலும் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்த கடைகளுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

    இதுபோன்ற ஆய்வுகள் அடிக்கடி மேற்கொள்ளப்படும் எனவும், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் இதுபோன்ற ஒருமுறையே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழி பொருட்களை உபயோகம் மற்றும் விற்பனை செய்வதை தவிர்க்குமாறும், நெகிழி கேரி பேக்கிற்கு பதிலாக மஞ்சப்பை போன்ற மாற்றுப் பொருட்களை பயன்படுத்துமாறும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தவறும்பட்சத்தில் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

    • போலி பாஸ்போர்ட் எடுத்து சிங்கப்பூரில் வேலை பார்த்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    • கைதான வாலிபர் மீது ஆள்மாறாட்டம், போலி பாஸ்போர்ட் என 6 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    சேலம்:

    சேலம் வீரகனூர் அருகே உள்ள வடக்கு ராமநாதபுரத்தை சேர்ந்தவர் வீரமுத்து (வயது 46). இவர் அம்மம்பாளையத்தில் உள்ள ஆவினில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது பெயரில் அவரது உறவினரான தெற்கு ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ் (37) என்பவர் வீரமுத்து பெயரில் போலியாக பாஸ்போர்ட் 2002-ம் ஆண்டு எடுத்து சிங்கப்பூரில் டிரைவராக வேலை பார்த்து வந்தது தெரியவந்தது.

    இது குறித்து வீரமுத்து சேலம் குற்றப்பிரிவு போலீசில் கடந்த ஆண்டு புகார் அளித்தார். அதன் பேரில் டிஎஸ்பி இளமுருகன் மற்றும் போலீசார், ஆள்மாறாட்டம், போலி பாஸ்போர்ட் என 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். மேலும் ராஜேஷ் நாடு திரும்பும் போது தகவல் கொடுக்குமாறு லுக் அவுட் நோட்டீஸ் விமான நிலையத்துக்கு அனுப்பினர்.

    இதையடுத்து ராஜேஷ் நேற்று திருச்சி விமான நிலையத்தில் வந்து இறங்கியதும் அங்குள்ள அதிகாரிகள் பிடித்து சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.

    அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் எனக்கு 17 வயது என்பதால் பாஸ்போர்ட் எடுக்க முடியாது. எனவே வீரமுத்து ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை திருடி பாஸ்போர்ட் எடுத்ததாக தெரிவித்தார். இதையடுத்து ராஜேசை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • ஓட்டலில் வாடிக்கையாளரை தாக்கிய 2 ஊழியர்கள் கைது செய்யப்பட்டன்.
    • வாடிக்கையாளர் சாப்பிட்ட 2 தோசைக்கு ரூ.80-யை பில் கொடுத்ததால் தகராறு ஏற்பட்டது.

    சேலம்:

    சேலம் சங்ககிரி அருகே குப்பனூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 53). நேற்று இரவு சேலம் புதிய பஸ் நிலையம் வந்த கண்ணன், அங்குள்ள ஓட்டலில் உணவருந்தினார்.

    இதையடுத்து கடை ஊழியர்கள் ரூ.80-க்கு பில் கொடுத்துள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சி–யடைந்த கண்ணன், 2 தோசைக்கு ரூ.80 கட்டணமான ஓட்டல் ஊழியர்களிடம் கேட்டுள்ளார். இதில் கண்ணனுக்கும், ஓட்டல் ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    ஆத்திரமடைந்த ஓட்டல் ஊழியர்கள், அங்கிருந்த நாற்காலியால் கண்ணனை சரமாரியாக தாக்கினர்.

    இதில் பலத்த காயமடைந்த கண்ணன், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். மேலும் இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், கண்ணனை தாக்கிய வெள்ளக்கல்பட்டியை சேர்ந்த அப்துல் ரஹீம் (39), விழுப்புரம் சூரி நாய்க்கன்பட்டியை சேர்ந்த ஆனந்த் (27) ஆகிய 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • சேலத்தில் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • மாணவியின் தாய் ஓமலூரில் நடந்த உறவினர் நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ள சென்றிருந்தபோது மாணவி தூக்குபோட்டு கொண்டார்.

    சேலம்:

    சேலம் கன்னங்குறிச்சி ரம்யா கார்டன் பகுதியை சேர்ந்தவர் சித்தேஸ்வரன். இவரது மகள் சிந்துஜா (வயது 17).

    இவர் பிளஸ்-1 படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தட்டச்சு கற்று வந்தார். சிந்துஜாவின் தாய் நேற்று ஓமலூரில் நடந்த உறவினர் நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ள சென்றிருந்தார்.

    இந்த நிலையில் வீட்டில் இருந்த சிந்துஜா திடீரென நேற்று இரவு சேலையை கழுத்தில் மாட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவலின் பெயரில் கன்னங்குறிச்சி போலீசார் சம்பவத்திற்கு சென்று சிந்துஜாவின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிந்துஜா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் ? என்பது குறித்து போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அரசு பஸ்களில் டிஜிட்டல் பெயர் பலகை இல்லாததால் 20 கண்டக்டர்களுக்கு மெமோ கொடுத்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
    • ஓமலூர், வாழப்பாடி, எருமாபாளையம், ராசிபுரம், பணிமனை பஸ்களில் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    சேலம்:

    சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழக வணிக பிரிவு மேலாளர் செல்வகுமார் தலைமையில் பயண சீட்டு பரிசோதகர்கள் கடந்த 12-ந்தேதி காலை 5.30 மணிக்கு சேலம் புதிய பஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

    இதில் ஓமலூர், வாழப்பாடி, எருமாபாளையம், ராசிபுரம், பணிமனை பஸ்களில் ஆய்வு செய்யப்பட்டது.

    இந்த ஆய்வில் பஸ்களில் ஸ்டிக்கர் ஒட்டவில்லை. மழை நீர் ஒழுகுகிறது. டிஜிட்டல் போர் பிட்டிங் செய்யவில்லை. வழிதட எண், ஊர் பெயர் கையால் எழுதப்பட்டுள்ளது உள்ளிட்ட குறைகள் கண்டறியப்பட்டது. இது தொடர்பாக 20 பஸ்களின் கண்டக்டர்களுக்கு மெமோ கொடுக்கப்பட்டது.

    அதிகாரிகளின் இந்த நடவடிக்கை டிரைவர்கள், கண்டக்டர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த நாட்டாமங்கலம் பகுதியைச் சேர்ந்த மெக்கானிக் இரவு வீட்டை விட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பி வரவில்லை.
    • நாட்டமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள மழைநீர் வடிகால் ஓடையில் பிணமாக கிடந்தார்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த நாட்டமங்கலம் பகுதியை சேர்ந்த செங்கோட்டையன்.

    இருசக்கர வாகனம் மெக்கானிக்கான இவருக்கு திருமணம் ஆகி அம்பிகா என்று மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் நாட்டமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள மழைநீர் வடிகால் ஓடையில் இன்று காலை செங்கோட்டையன் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து மேட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த மேட்டூர் போலீசார் செங்கோட்டையனின் உடலை மீட்டு, மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், செங்கோட்டையன் எவ்வாறு இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலத்தில் குரூப்-1 தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு நடைபெறுகிறது.
    • இலவச மாதிரி தேர்வு வருகிற 13-ந் தேதி அன்று ஏற்காடு அடிவாரம் பகுதியில் அமைந்துள்ள விநாயகா மிஷன் மருந்தியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணை யத்தால் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-1-ல் அடங்கிய பணிகளுக்கான தேர்வு வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது.

    இதையொட்டி சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக இலவச மாதிரி தேர்வு வருகிற 13-ந் தேதி அன்று ஏற்காடு அடிவாரம் பகுதியில் அமைந்துள்ள விநாயகா மிஷன் மருந்தியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இத்தேர்வு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும்.

    மேலும் தேர்வு நாளன்று தேர்வு நடைபெறும் வளாகத்தில் காலை 8 மணி முதல் 9 மணிக்குள் தேர்விற்கு விண்ணப்பித்த நகல் மற்றும் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை சமர்ப்பிக்க வேண்டும். காலை 9 மணிக்கு பின்னர் வரும் தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். சேலம் மாவட்டத்தை குரூப்-1 தேர்வுக்கு தயாராகும் தகுதிவாய்ந்த தேர்வர்கள் இந்த மாதிரித்தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • விவசாயிகள் கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய சேலம் கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளர்.
    • காப்பீடு திட்டத்தின் மூலம் அதிகபட்சமாக ஒரு குடும்பத்துக்கு 5 பசு, எருமைகளுக்குக் காப்பீடு செய்து கொள்ளலாம்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கால்நடை காப்பீடு செய்ய 3,600 குறியீடு நிா்ணயம் செய்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.35 ஆயிரம் வரை மானியத்துடன் காப்பீடு செய்து கொள்ளலாம். வறுமை கோட்டுக்கு மேல் உள்ளவா்களுக்கு ரூ. 50 மானியத்திலும், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவா்கள், தாழ்த்தப்பட்டவா் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.70 மானியத்திலும் காப்பீடு செய்யப்படும்.

    இத் திட்டத்தின் மூலம் அதிகபட்சமாக ஒரு குடும்பத்துக்கு 5 பசு, எருமைகளுக்குக் காப்பீடு செய்து கொள்ளலாம். இத் திட்டத்தில் இரண்டரை வயது முதல் 8 வயது உடைய பசு மற்றும் எருமைகளுக்கும் மற்றும் 1 முதல் 3 வயதுடைய வெள்ளாடு, செம்மறி ஆடுகளுக்கும் காப்பீடு செய்து கொள்ளலாம்.

    ஓராண்டு காப்பீடு கட்டணமாக அதிகபட்சமாக கால்நடையின் மதிப்பில் 2 சதவீதமும், மூன்றாண்டு காப்பீடு கட்டணமாக அதிகபட்சமாக கால்நடையின் மதிப்பில் 5 சதவீதமும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

    மேலும் ரூ. 35, 000-க்கு மேல் காப்பீடு செய்யப்படும் கால்நடைகளுக்கு அதிகப்படியான மதிப்பிற்கான காப்பீடு கட்டணத்தை கால்நடை உரிமையாளரே செலுத்த வேண்டும். காப்பீடு செய்ய விரும்பும் கால்நடை வளா்ப்போா் அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தினை அணுகி பயன்பெறலாம் என சேலம் கலெக்டர் அலுவலகம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சேலத்தில் விஜிலென்ஸ் குறித்த விவாதப் போட்டி நடைபெற்றது.
    • தனியார் கல்லூரியில் நடைபெற்ற இந்த விவாதபோட்டியில் ஊழலற்ற இந்தியா என்ற தலைப்பில் நடைபெற்றது.

    சேலம்:

    சேலம் உருக்காலையின் விஜிலென்ஸ் துறை சார்பில் விஜிலென்ஸ் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு சேலம் சோனா காலேஜ் ஆப் மேனேஜ்மென்ட் மாணவர்களுக்கு இடையே "ஊழலற்ற இந்தியா - வளர்ந்த இந்தியா" என்ற தலைப்பில் விவாதப் போட்டி நடைபெற்றது.

    மேலாண்மைத் தலைவர் பி.கே. அஞ்சலி வரவேற்று பேசுகையில், விவாதப் போட்டிக்கு சோனா கல்லூரியை தேர்வு செய்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்தார்.

    சேலம் உருக்காலையின் விஜிலென்ஸ் துறை பொது மேலாளர் சுப்பா ராவ் பேசுகையில், இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற, ஊழலுக்கு எதிராக போராட ஒவ்வொரு குடிமகனின் பங்கையும் வலியுறுத்தினார்.

    கடந்த 3 ஆண்டாக சோனா கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வரும் சேலம் உருக்காலைக்கு நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் நித்யா நன்றி கூறினார். 

    ×