search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முட்டை விலை உயர்வு"

    • நாமக்கல் மண்டலத்தில் 5 கோடிக்கும் அதிகமாக முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
    • முட்டைகள் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 5 கோடிக்கும் அதிகமாக முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த கோழிகள் மூலம் 4 கோடிக்கும் அதிகமான முட்டைகள் தினசரி உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த முட்டைகள் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    இந்த நிலையில் முட்டை கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடந்தது. முட்டை விலை நிர்ணயம் மற்றும் உற்பத்தி குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி முட்டை விலையை மேலும் 10 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதனால் 540 காசுகளுக்கு விற்கப்பட்ட முட்டை விலை 550 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது.

    இதே போல பல்லடத்தில் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கறிக்கோழி விலை மாற்றம் செய்யப்படவில்லை. இதனால் ஒரு கிலோ கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை ரூ.113 ஆக நீடிக்கிறது. அதேபோல முட்டை கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. இதில் எந்த மாற்றமும் இல்லாமல் ரூ.90 ஆக விலை நீடிக்கிறது.

    • முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டு 525 காசாக நிர்ணயிக்கப்பட்டது.
    • பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கறிக்கோழி விலை ரூ.75 ஆகவும், முட்டை கோழி விலை ரூ.95 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கலில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவில் மண்டல ஆலோசனை கூட்டம் அதன் தலைவர் டாக்டர் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. முட்டை விலை நிர்ணயம் குறித்து பண்ணையாளரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. மற்ற மண்டலங்களில் விலையில் தொடர்ந்து மாற்றம் செய்யப்பட்டு வருவதால் இங்கும் மாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

    இதன்படி, முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டு 525 காசாக நிர்ணயிக்கப்பட்டது. பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கறிக்கோழி விலை ரூ.75 ஆகவும், முட்டை கோழி விலை ரூ.95 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது.

    ×