search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அடையாமடை"

    • மலையோரப் பகுதியான பாலமோர் பகுதியிலும், பேச்சிபாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.
    • பேச்சிப்பாறை‌ அணை நீர்மட்டம் இன்று காலை 42.43 அடியாக இருந்தது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழுவதும் கொட்டி தீர்த்து வரும் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் இதமான குளிர் காற்று வீசி வருகிறது. தினமும் காலையில் இதமான வெயில் அடித்து வரும் நிலையில் மதியத்துக்கு பிறகு மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருகிறது. நேற்றும் மதியத்துக்கு பிறகு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.

    இரவும் மழை நீடித்தது. அடையாமடை பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு அதிகபட்சமாக 84.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி யுள்ளது. முள்ளங்கினா விளை, குருந்தன்கோடு, கோழிப்போர்விளை, அடையாமடை, ஆணைகிடங்கு, களியல், நாகர்கோவில் பகுதியிலும் மழை பெய்தது.

    மலையோரப் பகுதியான பாலமோர் பகுதியிலும், பேச்சிபாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. திற்பரப்பு அருவி பகுதியிலும் மழை பெய்தது. பேச்சிபாறை அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் நிறுத்தப்பட்டதையடுத்து திற்பரப்பு அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. இதனால் அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    அவர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு வரு கிறார்கள். பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து 1014 கன அடி தண்ணீர் வெளியேற்றப் பட்டு வருகிறது. அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் சானல்களில் ஷிப்ட் முறையில் திறந்து விடப்பட்டுள்ளது. சானல்களில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் பாசன குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. விவசாயிகள் சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 42.43 அடியாக இருந்தது. அணைக்கு 457 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 504 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 67.51 அடியாக உள்ளது. அணைக்கு 512 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையிலிருந்து 510 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    மாம்பழத்துறையாறு, முக்கடல் அணையை தொடர்ந்து முழு கொள்ள ளவான முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. முக்கடல் அணையில் இருந்து மறுகால் பாய்ந்து வருகிறது. மாவட்டம் முழுவதும் மழைக்கு ஏற்கனவே 20-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து இருந்த நிலையில் நேற்று மேலும் 5 வீடுகள் இடிந்து விழுந்துள்ளது.

    இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தொடர் மழையின் காரணமாக தடிக்காரன்குணம், குலசேகரம், கீரிப்பாறை பகுதிகளில் உள்ள ரப்பர் தோட்டங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. ரப்பர் மரங்களில் உள்ள சிரட்டை களிலும் மழைநீர் தேங்கியுள்ளதால் ரப்பர் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

    • 3 அணைகளில் இருந்து 1036 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்
    • கும்பப்பூ சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரம்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளு குளு சீசன் நிலவுகிறது.

    நாகர்கோவிலில் 2 மணி நேரத்திற்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது. இதனால் நாகர் கோவில் நகரமே வெள்ளக் காடாக மாறியது. வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். அடையாமடை, களியல் பகுதிகளிலும் மழை கொட்டி தீர்த்தது. அடையாமடையில் அதிகபட்சமாக 33 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    மயிலாடி, கொட்டாரம் தக்கலை, முள்ளங்கினா விளை, ஆணைக்கிடங்கு மற்றும் அதன் புறநகர் பகுதி களிலும் மழை பெய்தது. பேச்சிப்பாறை அணையில் இருந்து தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கோதை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    இதையடுத்து 14-வது நாளாக அருவியில் குளிப்பதற்கு தடை விதிக் கப்பட்டுள்ளது. அருவி யில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற் றம் அடைந்து உள்ளனர்.

    பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகளுக்கு மித மான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.அணை களின் நீர்மட்டத்தை பொதுப் பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வரு கிறார்கள்.

    பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 41.26 அடியாக இருந்தது. அணைக்கு 477 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 536 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 69.77 அடியாக இருந்தது.அணைக்கு 349 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து 300 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    சிற்றார்-1 அணை நீர்மட்டம் 15.08 அடியாக உள்ளது. அணைக்கு 139 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.அணையில் இருந்து 200 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 3 அணைகளில் இருந்தும் 1036 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவ தால் குழித்துறை ஆறு, கோதை ஆறு, வள்ளி யாறுகளில் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடுகிறது.தொடர் மழைக்கு தோவாளை தாலு காவில் வீடு ஒன்று இடிந்து விழுந்தது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை-3.4, பெருஞ்சாணி-8.2, சிற்றாறு-1-2, சிற்றார்-2-4.2, பூதப்பாண்டி-20.2, களியல்-31, கன்னிமார்-6.8, கொட்டாரம்-2.8, குழித்து றை-22.4, மயிலாடி-5.2, நாகர்கோவில்-31.4, சுருளோடு-8.6, தக்கலை- 6.3, மாம்பழத்துறையாறு- 20, ஆரல்வாய்மொழி-10, அடையாயமடை-33, குருந்தன்கோடு-9.8, முள்ளங்கினாவிளை-6.8, ஆணைக்கிடங்கு-19.

    தொடர் மழையின் காரணமாக ரப்பர் பால் உற்பத்தி செங்கல் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட் டுள்ளது. தொழிலா ளர்கள் ஏராளமானோர் வேலை இன்றி தவித்து வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் விவ சாயிகள் சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரு கிறார்கள். கும்பப்பூ சாகுபடி பணி மாவட்டம் முழுவதும் நடந்து வருகிறது. 6,500 ஹெக்டேரில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற் கான விதை நெல்களை அதிகாரிகள் தங்கு தடை யின்றி வழங்கி வருகிறார்கள்.

    ×