என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சீரமைக்கும் பணி தீவிரம்."
- சாலை விரிவாக்கம் காரணமாக சாலையோரத்தில் இருந்த பழமை வாய்ந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது.
- போத்தனூர் சாலை விரிவாக்க பணியானது போத்தனூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்
குனியமுத்தூர்,
போத்தனூர் சாலை ஆனது பாதாள சாக்கடை திட்டம் மற்றும் குடிநீர் இணைப்பு திட்டம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக பலமுறை தோண்டப்பட்டு சரி செய்யாமல் குண்டும் குழியுமாக காணப்பட்டு வந்தது.
இதனால் மழைநேரங்களில் சேரும் சகதியுமாக காணப்பட்டு, நீர் நிரம்பி குளம் போல் காட்சி அளித்து வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் சிரமப்பட்டு வந்தனர்.
திருமலை நகர், நேரு நகர், வசந்தம் நகர் , கருப்பராயன் கோவில், சாய் நகர், உமர் நகர், ஜம்ஜம் நகர், சத்யா நகர், எம்.ஜி.ஆர் நகர், கலைஞர் நகர் பகுதியில் வசிப்பவர்கள் இந்த வழியாகத்தான் வந்தாக வேண்டும். இப்பகுதியில் வசிக்கும் அனைவரும் போத்தனூர் சாலையை சீரமைக்க கோரி பலமுறை வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் முதல் கட்டமாக நேற்று சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
குறிச்சி பிரிவிலிருந்து போத்தனூர் வரை கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. சாலை விரிவாக்கம் காரணமாக சாலையோரத்தில் இருந்த பழமை வாய்ந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது.
இது குறித்து 95-வது வார்டு கவுன்சிலரும், குறிச்சி பகுதி செயலாளருமான எஸ்.ஏ.காதர் கூறியதாவது:-
போத்தனூர் சாலை விரிவாக்க பணியானது போத்தனூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். இச்சாலையை சீரமைக்க கோரி ஒரு வருட காலமாக அதிகாரிகளிடம் பலமுறை நான் வலியுறுத்தி வந்தேன். ஆனால் அதிகாரிகள் யாரும் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.
அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் முறையிட்டு, அவரே நேரடியாக அதிகாரிகளிடம் உத்தரவிட்டு, பின்னர் இறுதி முடிவுக்கு வந்தது. கோவை மாநகரில் 144 கிலோ மீட்டர் சாலை பணிகளுக்கு ரூபாய் 211.80 கோடி நிதி ஒதுக்கிய தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். போத்தனூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பகுதி மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இச்சாலை விரிவாக்க பணி துரிதமாக நடைபெற்று விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்பதையும் தெரிவிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்