search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீனவர்கள் அச்சம்"

    • மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது.
    • திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம், துறைமுக பகுதி மீன் மார்க்கெட்டுகள் வெறிச்சோடி காணப்பட்டது.

    கடலூர், நவ.20-

    வங்ககடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி தாழ்வு மண்டலமாக உருவாகி உள்ளது. எனவே கடலில் 45 முதல் 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். கடலின் சீற்றம் அதிகம் இருக்கும். எனவே மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. இன்று 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரை மற்றும் துறைமுகங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. இன்று காலையிலும் தாழங்குடா, தேவனா ம்பட்டினம் பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது.

    எனவே மீனவர்கள் கடற்கரையில் நிறுத்தியிருந்த படகுகளை டிராக்டர் மூலம் இழுத்து மேடான பகுதிக்கு கொன்டு சென்றனர். தொடர்ந்து கடல் சீற்றம் நேரம் ஆக ஆக அதிகரித்துக் கொண்டே இருப்பதால் கடலோர கிராம மீனவர்கள் ஒருவித அச்சத்துடனே உள்ளனர். தேவனாம்பட்டினம் கடற்கரையில் வழக்கத்தைவிட கடல் சீற்றம் அதிகம் உள்ளது. எனவே போலீசார் அங்கு ரோந்து சென்று கடலில் யாரும் குளிக்கவேண்டாம் என்று எச்சரிக்கை அறிவிப்பு விடுத்து வருகிறார்கள். மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் கடலூரில் உள்ள திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம், துறைமுகபகுதி மீன் மார்க்கெட்டுகள் வெறி ச்சோடி காணப்பட்டது.

    ×