search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக மீனவர் தினம்"

    • உலகெங்கிலும் பரந்து விரிந்திருக்கும் மீனவ சமுதாய மக்களின் வாழ்க்கையைப் போற்றும் விதமாக கொண்டாடப்படும் உலக மீனவர்கள் தினம் இன்று.
    • மீனவர்களின் மீன்பிடி உரிமைகளை மீட்டிடவும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திடவும் இந்நாளில் அனைவரும் உறுதியேற்போம்.

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    உலகெங்கிலும் பரந்து விரிந்திருக்கும் மீனவ சமுதாய மக்களின் வாழ்க்கையைப் போற்றும் விதமாக கொண்டாடப்படும் உலக மீனவர்கள் தினம் இன்று.

    மழை, புயல் போன்ற இயற்கை பேரிடர்களாலும், இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்களாலும் மிகுந்த இன்னல்களுக்குள்ளாகி வரும் தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமைகளை மீட்டிடவும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திடவும் இந்நாளில் அனைவரும் உறுதியேற்போம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • நட்பு பாராட்டும் குணம் கொண்டு வாழும் பண்பாட்டு இனமாக மீனவ சமுதாயம் இருந்து வருகிறது.
    • கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 3 லட்சம் மீனவர்கள் உள்ளார்கள்.

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலா ளரும், அமைப்பு செய லாளருமான தளவாய்சு ந்தரம் எம்.எல்.ஏ. வெளியி ட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதா வது:-கள்ளம், கபடமின்றி அனைவரிடத்திலும் ஒரு தாய் மக்கள் போன்று பழகி, இருப்பதை கொடுத்து இன்முகத்தோடு நட்பு பாராட்டும் குணம் கொண்டு வாழும் பண்பாட்டு இனமாக மீனவ சமுதாயம் இருந்து வருகிறது.

    பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பா ர்கள். மீனவ சமுதாயம் பொருள் இல்லாத வர்க ளுக்கு தன்னால் இயன்ற பொருளுதவிகளையும், பசித்தவர்களுக்கு உண்ண உணவினையும் எதையும் எதிர்பாராமல் கொடுத்து உதவும் ஈகை நிரம்பிய குணம் கொண்ட சமுதாயம் மீனவ சமுதாயம்.

    உலகம் முழுவதும் உள்ள மீனவ மக்கள் ஆண்டு தோறும் ஐ.நா.சபையால் அங்கீகரிக்கப்பட்ட நவம்பர் மாதம் 21-ந்தேதி அன்று மீனவர் தினத்தை கொண்டாடி வருகின்றனர். இந்தியாவில் ஏறக்குறைய 7515 கிலோ மீட்டர் நீள முள்ள கடற்கரையில், சுமார் 1076 கிலோ மீட்டர் கடற்கரையை கொண்டு ள்ளது தமிழ்நாடு.

    மீனவர்களின் நலனை பாதுகாக்கவும், அவர்களின் உரிமைகளை நிலை நாட்டவும், மீனவர்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கவும், எதிர்பார்ப்புகள் நிறைவேறவும், அவர்களின் உள்ளம் மகிழவும் உலக மீனவர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 3 லட்சம் மீனவர்கள் உள்ளார்கள். அவர்கள் அனைவரும் எல்லா வளமும் பெற்று, சிறந்து விளங்கி வாழ்வில் உயர்வடைய இறைவனை வேண்டி அனைவருக்கும் உலக மீனவர் தின வாழ்த்துக்களை தெரிவித்து க்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்ப ட்டுள்ளது.

    • திருப்பலியும் நடந்தது
    • ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் இருந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

    நாகர்கோவில்:

    உலக மீனவர் தின விழா இன்று குமரி மாவட்டம் முழுவதும் பல்வேறு மீனவ அமைப்புகள் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. குமரி மாவட்ட மீனவர் காங்கிரஸ் சார்பில் ராமன் துறை கடற்கரை கிராமத்தில் விழா நடைபெற்றது. முதலில் கடற்கரையில் பங்கு பணியாளர் சகாய வில்சன் தலைமையில் திருப்பலி நடைபெற்றது.

    தொடர்ந்து கடலில் மலர் தூவி பால் ஊற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அகில இந்திய மீனவர் காங்கிரஸ் செயலாளர் ஜோர்தான் தலைமை வகித்தார். குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கடலில் மலர் தூவி பால் ஊற்றும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் பினுலால் சிங், மேற்கு மாவட்ட மீனவர் காங்கிரஸ் தலைவர் பிரடி கென்னடி, காங்கிரஸ் மாவட்ட செயலாளர்கள் ஷேக் முகமது, அருள்ராஜ், சுனில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பால்மணி, ஆரோக்கிய ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் ஏழை மீனவர்களுக்கு நிழற்குடை, மீன் விற்கும் பாத்திரங்கள் உட்பட நலஉதவிகளை விஜய் வசந்த். எம்.பி வழங்கினார்.

    மீனவர் தினத்தை யொட்டி குளச்சல் கடற்கரை யில் கடல் அன்னைக்கு மலர் தூவி பிராத்தனை செய்யப்பட்டது. விசை படகுகள், வள் ளங்கள் மீன் பிடிக்க செல்ல வில்லை. நிகழ்ச் சிக்கு காணிக்கை மாதா ஆலய பங்குத்தந்தை டைனிசிஸ் லாரன்ஸ் விசை படகுகளுக்கும், கட்டு மரங்களுக்கும் பிராத்தனை செய்து கடல் அன்னைக்கு மலர் தூவி பிராத்தனை செய்தார்.

    நிகழ்ச்சிக்கு விசை படகு சங்க தலைவர் பிரான்சிஸ், துணை தலைவர் வர்கீஸ், செயலாளர் பிராங்கிளின், காணிக்கை மாதா ஆலய உதவி செயலாளர் ரெக்ஸன், வியாபாரிகள், ஏலக்காரர்கள் அமைப்பு மற்றும் விசைப்படகு சங்கத் தினர், பொதுமக்கள், ஊர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மணக்குடி அந்திரேயா ஆலயத்தில் பங்கு தந்தை அந்தோணியப்பன் தலைமையில் இன்று காலை திருப்பலி நடந்தது. இணை பங்கு தந்தை சுவீடன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இதை தொடர்ந்து கடற்க ரையில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த வள்ளம் மற்றும் மீன்பிடி உபகரணங்களுக்கு அர்ச்சிப்பு செய்யப்பட்டது.கடலில் மீனவர்கள் மலர் தூவியும் வழிபட்டனர்.

    பள்ளம் புனித மத்தேயூ ஆலயத்தில் பங்கு தந்தை சூசை ஆண்டனி தலைமை யில் திருப்பலி நடந்தது. இதை தொடர்ந்து கடற்கரையில் மீன்பிடி உபகரணங்கள் அர்ச்சிப்பு செய்யப்பட்டது.

    மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கடற்கரை கிராமங்களிலும் மீனவர்கள் இன்று சிறப்பு பிரார்த்தனை யில் ஈடுபட்டனர். ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் இருந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் கடற்கரை பகுதிகள் வெறிச் சோடி காணப்பட்டது.

    ×