search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மளிகை கடைக்காரர் கைது"

    • நம்பிக்கையின் அடிப்படையில் 200-க்கும் மேற்பட்டவர்கள் வார மற்றும் மாத தவணையில் பலகார சீட்டு சேர்ந்துள்ளனர்.
    • கடந்த தீபாவளி பண்டிகைக்கு பணத்தை தருவதாக கூறிய குமார் திடீரென குடும்பத்தோடு தலைமறைவானார்.

    திருப்பூர்:

    திருப்பூர் செரங்காடு பகுதியில் கடந்த 15 வருடங்களாக தங்கி மளிகை கடை நடத்தி வந்தவர் குமார். இவர் அப்பகுதி பொதுமக்களிடம் மாத மற்றும் வார தவணை அடிப்படையில் பலகார சீட்டு நடத்தி வந்தார்.

    நம்பிக்கையின் அடிப்படையில் 200-க்கும் மேற்பட்டவர்கள் வார மற்றும் மாத தவணையில் பலகார சீட்டு சேர்ந்துள்ளனர் . வாரம் தோறும் 100 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை தவணைத் தொகை கட்டி வந்தனர். குமாரிடம் சுமார் 200க்கும் மேற்பட்டோர் ரூ.2 கோடி வரை பணம் கட்டியுள்ளனர். இந்தநிலையில் கடந்த தீபாவளி பண்டிகைக்கு பணத்தை தருவதாக கூறிய குமார் திடீரென குடும்பத்தோடு தலைமறைவானார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பணம் கட்டி ஏமாந்த பொதுமக்கள் திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும், கலெக்டர் அலுவலகத்திலும் பணத்தை பெற்றுக்கொண்டு தலைமறைவானவர்களை கண்டுபிடித்து தர வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.

    இது தொடர்பாக மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் உத்தரவின் பேரில் நல்லூர் போலீசார் தலைமறைவான குமாரை தேடிவந்தனர். அப்போது குமார் குடும்பத்துடன் கேரளாவில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை திருப்பூர் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கஞ்சா விற்ற 2 பேர் சிக்கினர்.
    • காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கோவை,

    குட்கா பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கோவை துடியலூர் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் துடியலூர் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் குரு சந்திர வடிவேல் மற்றும் போலீசார் இடிக்கரை ரோடு டீச்சர் காலனி சந்திப்பு பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குட்காவை விற்பனைக்காக காரில் கடத்தி வந்த சோமனூர் பகுதியை சேர்ந்த மளிகை கடைக்காரர் ஜெகன் அந்தோணி ராஜேஷ் (வயது 39) என்பவரை கைது செய்தனர். அவர் விற்பனைக்கு வைத்திருந்த 120 கிலோ குட்கா மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் கைது செய்யப்பட்ட ஜெகன் அந்தோணி ராஜேசை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் பகுதியில் பள்ளி அருகே கஞ்சாவை பதுக்கி வைத்து விற்ற ரகுகுமார் (30) என்பவரை ஆழியார் போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.இதேபோன்று பெரியநா ய க்கன் பாளையம் பகுதியில் கஞ்சா விற்ற சூலூரை சேர்ந்த தனியார் நிறுவன சூப்பிரவைசர் பாலசுப்பிரமணி (23) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். 

    ×