search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐபிஎல் 2024"

    • கேப்டன் சாம் கர்ரன் 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.
    • சிமர்ஜீத் சிங், துஷார் தேஷ்பாண்டே தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் கடைசி கட்டத்தை எட்டியுள்ளன. இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், முதலாவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

    இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை எட்டியது. சென்னை சார்பில் கேப்டன் கெய்க்வாட் (32), டேரில் மிட்செல் (30) மற்றும் ரவீந்திர ஜடேஜா (43) சிறப்பாக ஆடினர்.

    பஞ்சாப் சார்பில் சிறப்பாக பந்துவீசிய ராகுல் சாஹர் மற்றும் ஹர்ஷல் பட்டேல் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும், சாம் கர்ரன் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    168 ரன்களை துரத்திய பஞ்சாப் அணிக்கு பிரப்சிம்ரன் சிங் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 30 ரன்களை குவித்தார். இவருடன் களமிறங்கிய பேர்ஸ்டோ 7 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ரோசோ ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். சஷான்க் சிங் 27 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் சாம் கர்ரன் 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    ஜிதேஷ் ஷர்மா கோல்டன் டக் ஆன நிலையில், அஷுடோஷ் ஷர்மா 3 ரன்களில் ஆட்டமிழந்தார். போட்டி முடிவில் பஞ்சாப் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் மூலம் சென்னை அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    சென்னை சார்பில் ரவீந்திர ஜடேஜா மூன்று விக்கெட்டுகளையும், சிமர்ஜீத் சிங் மற்றும் துஷார் தேஷ்பாண்டே தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஷர்துல் தாக்கூர் மற்றும் மிட்செல் சாண்ட்னர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • லக்னோ அணி 10 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 4 தோல்வியுடன் 12 புள்ளி பெற்றுள்ளது.
    • கொல்கத்தா அணி 10 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 3 தோல்வியுடன் 14 புள்ளி பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை நெருங்கி விட்டது.

    ஐபிஎல் தொடரின் 54-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சந்திக்கின்றன. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    லக்னோ அணி 10 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 4 தோல்வியுடன் 12 புள்ளி பெற்றுள்ளது. கொல்கத்தா அணி 10 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 3 தோல்வியுடன் 14 புள்ளி பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை நெருங்கி விட்டது. அந்த அணி கடந்த 2 ஆட்டங்களில் டெல்லி, மும்பை அணிகளை அடுத்தடுத்து பதம் பார்த்தது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 3-ல் லக்னோவும், ஒன்றில் கொல்கத்தாவும் வென்றுள்ளன.

    • இலங்கையை சேர்ந்த இளம் வீரர் மதிஷா பதிரனா வேகப்பந்து வீச்சு துறையில் நம்பிக்கை அளித்து வந்தார்.
    • நடப்பு சீசனில் 6 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    சென்னை:

    இந்தியாவில் நடைபெற்று வரும் 17-வது ஐ.பி.எல் தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 போட்டிகளில் 5 வெற்றியும், 5 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது.

    அந்த அணிக்கு இலங்கையை சேர்ந்த இளம் வீரர் மதிஷா பதிரனா வேகப்பந்து வீச்சு துறையில் நம்பிக்கை அளித்து வந்தார். நடப்பு சீசனில் 6 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    இதனிடையே காயம் காரணமாக சில போட்டிகளை தவறவிட்ட அவர், சென்னை அணிக்கு கடைசியாக நடைபெற்ற பஞ்சாப்புக்கு எதிரான போட்டியிலும் களமிறங்கவில்லை.

    இந்நிலையில் தொடை தசையில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை மேற்கொள்ள இலங்கை திரும்பி உள்ளார். இதனால் இவர் நடப்பு சீசனின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    • சென்னை அணியில் துபே மற்றும் டோனி 0 ரன்னில் ஆட்டமிழந்தனர்.
    • பஞ்சாப் தரப்பில் ராகுல் சாஹர், ஹர்சல் படேல் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் கடைசி கட்டத்தை எட்டியுள்ளன. இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், முதலாவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற அணி பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி சென்னையின் தொடக்க வீரர்களாக ருதுராஜ்- ரகானே களமிறங்கினர். ரகானே 9 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த டெரில் மிட்செல் ருதுராஜூடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர். 32 ரன்னில் ருதுராஜ் அவுட் ஆனார். அடுத்து வந்த துபே கோல்டன் டக் அவுட் முறையில் வெளியேறினார்.

    அடுத்த சிறிது நேரத்தில் மிட்செல் 30 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். மொயின் அலி 17, சாட்னர் 11, ஷர்துல் தாகூர் 17, டோனி 0, என ஆட்டமிழந்தனர். இறுதி அதிரடி காட்டிய ஜடேஜா 43 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.

    இறுதியில் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 167 ரன்கள் குவித்தது. பஞ்சாப் தரப்பில் ராகுல் சாஹர், ஹர்சல் படேல் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    • நல்ல ரன்களை அடிக்கும் அவரைப் போன்ற ஒருவரால் மட்டும் போட்டியை வெற்றி பெற முடியாது.
    • 16 வருடங்களாக நம்முடைய செயல்பாடுகள் ஏன் தொடர்ச்சியாக நன்றாக இல்லை என்பது பற்றி பெங்களூரு அணி நிர்வாகம் சிந்திக்க வேண்டும்.

    கராச்சி:

    ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 11 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளை பதிவு செய்து விளையாடி வருகிறது. இருப்பினும் அடுத்த 3 போட்டிகளில் வென்றாலும் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்வது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

    முன்னதாக வழக்கம் போல இந்த வருடமும் பெங்களூரு அணிக்கு நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 500-க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து அசத்தலாக செயல்பட்டு வருகிறார். அதனால் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள அவர் ஆரஞ்சு தொப்பியையும் தன்வசம் வைத்துள்ளார். இருப்பினும் அந்த ரன்களை விராட் கோலி கொஞ்சம் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் எடுத்துள்ளார். அதனால் பெங்களூரு அணி தோற்கும் போதெல்லாம் அதற்கு விராட் கோலிதான் காரணம் என்று விமர்சனங்கள் காணப்படுகின்றன.

    இந்நிலையில் விராட் கோலி போன்ற தனிநபரால் கோப்பையை வெல்ல முடியாது என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    அவர் என்ன விமர்சனத்தை எதிர்கொள்கிறார்? ஒரு வீரர் 100 - 150 ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்கள் அடித்தால் அது நன்றாக இல்லையா? ஒருவேளை அதே ரன்களை வைத்து அணி வெற்றி பெற்றிருந்தால் இந்த விமர்சனங்கள் வருமா? கேப்டனாக இருந்தபோது சந்தித்த அதே அழுத்தத்தை இப்போதும் விராட் கோலி சந்திக்கிறார். நல்ல ரன்களை அடிக்கும் அவரைப் போன்ற ஒருவரால் மட்டும் போட்டியை வெற்றி பெற முடியாது. எனவே அவரை விமர்சிப்பது தேவையற்றது நியாயமற்றது. விராட் கோலியிடம் இன்னும் நிறைய ஆட்டம் இருக்கிறது.

    16 வருடங்களாக நம்முடைய செயல்பாடுகள் ஏன் தொடர்ச்சியாக நன்றாக இல்லை என்பது பற்றி பெங்களூரு அணி நிர்வாகம் சிந்திக்க வேண்டும். அவர்களின் பேட்டிங் நன்றாக இருக்கிறது. ஆனால் பவுலர்கள் பலவீனமாக இருக்கின்றனர். சிலர் பவுண்டரி அளவு சிறியதாக உள்ளதாக பேசுகின்றனர். ஆனால் 1987-ல் டெஸ்ட் போட்டியில் நான் விளையாடியபோது இருந்த அதே பவுண்டரி அளவு தான் பெங்களூரு மைதானத்தில் இப்போதும் இருக்கிறது.

    270 ரன்கள் அடிக்கப்படும் ஐ.பி.எல். தொடரில் ஒருவர் 150 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடினால் உடனே நங்கூரமாக விளையாடுகிறார் என்று அனைவரும் சொல்கின்றனர். அதனால் இப்போதெல்லாம் நீங்கள் முதல் பந்திலிருந்தே நிற்காமல் அடிக்க வேண்டிய நிலைமையை சந்திக்கின்றனர்.

    என்று அக்ரம் கூறினார்.

    • சென்னை அணி விளையாடிய கடைசி போட்டியில் தோல்வியை தழுவியது.
    • பஞ்சாப் அணி ஆறு போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் கடைசி கட்டத்தை எட்டியுள்ளன. இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், முதலாவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    தரம்சாலாவில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. நடப்பு ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் அணியை கடந்த போட்டியில் எதிர்கொண்ட சென்னை அணி தோல்வியை தழுவியது.

    அந்த வகையில், தோல்வியில் இருந்து மீண்டு பஞ்சாப் அணியை வீழ்த்தி பழிதீர்க்கும் முனைப்பில் சென்னை அணி களமிறங்குகிறது. பஞ்சாப் அணி தொடர் வெற்றியை பெறும் முனைப்பில் களமிறங்குகிறது.

    • குஜராத் டைட்டன்ஸ் பவர்பிளேயில் 23 ரன்கள் மட்டுமே எடுத்தது.
    • ஷாருக் கான் 37, டேவிட் மில்லர் 30, டெவாட்டியா 35.

    பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் ஆர்சிபி- குஜராத் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற ஆர்சிபி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி குஜராத் அணியின் சகா, சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தொடக்கத்திலேயே குஜராத் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரின் 3-வது பந்தில் சகா 7 பந்துகள் சந்தித்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து சாய் சுதர்சன் களம் இறங்கினார். மறுமுனையில் விளையாடிய சுப்மன் கில் 7 பந்தில் 2 ரன் எடுத்த நிலையில் சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். அதேவேளையில் சுதர்சன் 14 பந்தில் 6 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இதனால் 19 ரன்கள் எடுப்பதற்குள் குஜராத் 3-விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

    4-வது விக்கெட்டுக்கு ஷாருக் கான் உடன் மில்லர் ஜோடி சேர்ந்தார். குஜராத் டைட்டன்ஸ் பவர்பிளேயான முதல் 6 ஓவரில் 23 ரன்களே அடித்தது.

    பின்னர் ஷாருக் கான்- மில்லர் ஜோடி மெல்ல மெல்லி சரிவில் இருந்து மீண்டது. 9 ஓவரில் 49 ரன்னைத் தொட்ட நிலையில், 10-வது ஓவரில் 12 ரன்கள் கிடைத்தன.

    மில்லர் 20 பந்தில் 30 ரன்கள் எடுத்த நிலையிலும், ஷாருக்கான் 24 பந்தில் 37 ரன்கள் எடுத்த நிலையிலும் வெளியேறினர். இதனால் மீண்டும் ஸ்கோரில் தொய்வு ஏற்பட்டது.

    குஜராத் அணி 14.3 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. 5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டெவாட்டியா, ரஷித் கான் அதிரடியில் இறங்கினர். இருந்தபோதிலும் 18-வது ஓவரில் ரஷித் கான் ஆட்டமிழந்தார். இதே ஓவரில் டெவாட்டியா 21 பந்தில் 35 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனால் குஜராத் டைட்டன்ஸ் 18 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் அடித்திருந்தது.

    கடைசி ஓவரில் தொடர்ச்சியாக 3 விக்கெட்டுகளை இழக்க குஜராத் டைட்டன்ஸ் 147 ரன்னில் ஆல்அவுட் ஆனது. ஆர்சிபி அணி சார்பில் முகமது சிராஜ், யாஷ் தயாள், விஜயகுமார் வைசாக் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    • குஜராத் அணி இன்று பவர்பிளேயான முதல் 6 ஓவரில் 23 ரன்களே எடுத்திருந்தது.
    • சகா இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 136 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விக்கெட் கீப்பர் சகா விளையாடி வருகிறார். இந்த முறை அவருக்கு சிறப்பான சீசனாக அமையவில்லை என்றுதான் கூறவேண்டும்.

    இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிராக ஏழு பந்துகளை சந்தித்து ஒரு ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 136 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். சராசரி 15.11 ஆகும். ஸ்டிரைக் ரேட் 118.25 ஆகும். அதிகபட்ச ஸ்கோர் 39 ஆகும்.

    தொடக்க வீரராக களம் இறங்கிய அவர் ஒரே ஒருமுறை மட்டுமே பவர்பிளேயை கடந்து பேட்டிங் செய்துள்ளார். பவர்பிளேயான முதல் 6 ஓவர்களுக்குள் விரைவாக அவட்டாகி ஏமாற்றம் அளித்துள்ளார்.

    மேலும் சிராஜிக்கு எதிராக இவரது ரெக்கார்டு மிகவும் மோசமாக உள்ளது. 6 இன்னிங்சில் பேட்டிங் செய்து 37 பந்துகளை எதிர்கொண்டு 38 ரன்கள் அடித்துள்ளார். 4 முறை அவட்டாகியுள்ளார்.

    குஜராத் அணி இன்று பவர்பிளேயான முதல் 6 ஓவரில் 23 ரன்களே எடுத்திருந்தது. இதன்மூலம் இந்த ஐபிஎல் தொடரில் பவர்பிளேயில் குறைந்த ரன்கள் அடித்த அணி வென்ற மோசமான சாதனையை பதிவு செய்துள்ளது.

    • நாளை நடைபெறும் சிஎஸ்கே-வுக்கு எதிரான போட்டியில் விளையாடமாட்டார் என அறிவிப்பு.
    • வியாழக்கிழமை ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் விளையாட வாய்ப்புள்ளதாக பஞ்சாப் அணி தெரிவித்துள்ளது.

    பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஷிகர் தவான் செயல்பட்டு வந்தார். முதல் ஐந்து போட்டிகளில் விளையாடிய அவர் 152 ரன்கள் எடுத்த நிலையில், தோள்பட்டை காயம் காரணமாக அதன்பின் விளையாடாமல் உள்ளார்.

    அவர் அணிக்கு எப்போது திரும்புவார் என்பதை பாஞ்சாப் அணி நிர்வாகம் உறுதியாக தெரிவிக்கவில்லை. கடந்த ஐந்து போட்டிகளில் அவர் விளையாடவில்லை. சாம் கர்ரன் பொறுப்பு கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

    இந்த நிலையில் பஞ்சாப் அணி நாளை தரம்சாலாவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்த போட்டியிலும் அவர் விளையாடமாட்டார் என பஞ்சாப் அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர் சுனில் ஜோஷி தெரிவித்துள்ளார்.

    ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக வியாழக்கிழமை நடைபெறும் போட்டியில் இருந்து விளையாட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

    பஞ்சாப் அணி 10 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. கடைசி ஐந்து போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா, சிஎஸ்கே அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து வெற்றியை பெற்றுள்ளது.

    • மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியா மற்றும் டிம் டேவிட்டை கடைசியில் பேட்டிங் இறக்கி விட்டு என்ன சாதித்தீர்கள்
    • மும்பை அணியில் என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியவில்லை

    நேற்று மும்பை இந்தியன்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 170 இலக்கை எட்ட முடியாமல் 145 ரன்னில் ஆல்அவுட் ஆகி 24 ரன்னில் தோல்வியைத் தழுவியது.

    இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் 11 போட்டிகளில் விளையாடி மூன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் ஏறக்குறைய பிளே ஆப் வாய்ப்பை மும்பை அணி இழந்துள்ளது.

    இந்நிலையில் மும்பை அணியின் தொடர் தோல்விகளுக்கு கேப்டன் ஹர்திக் பாண்டியா தான் காரணம் என்று வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியுள்ளார். அதில், "மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியா மற்றும் டிம் டேவிட்டை கடைசியில் பேட்டிங் இறக்கி விட்டு என்ன சாதித்தீர்கள். எதிர்கொள்வதற்கு நிறைய பந்துகள் இருந்தும் அவர்கள் அவுட்டானார்கள்.

    மும்பை அணியில் என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியவில்லை. பாண்டியா, டேவிட் 7, 8வது இடத்தில் பேட்டிங் செய்வதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒருவேளை அவர்கள் முன்கூட்டியே களமிறங்கினால் விரைவில் ஆட்டமிழக்கும் அளவுக்கு மோசமான வீரர்களா?

    குஜராத் கேப்டனாக ஹர்திக் பாண்டியா 4வது இடத்தில் தொடர்ச்சியாக விளையாடியுள்ளார். ஆனால் மும்பை அணியில் என்ன நடந்தது? அதில் நான் குழப்பமடைந்துள்ளேன். மும்பை அணி நிர்வாகம் இந்த வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அங்கு என்ன நடந்தது என்று கேள்வியெழுப்ப வேண்டும். அல்லது தங்களுடைய பேட்டிங் வரிசை ஏன் மாறியது என்பதை வீரர்கள் விளக்க வேண்டும். இங்கே கேப்டன், பயிற்சியாளர் ஆகியோர் மீதும் தவறு இருக்கிறது. எனவே உரிமையாளர்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

    • பிராவோ ஐபிஎல் கிரிக்கெட்டில் 183 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
    • சாவ்லா 184 விக்கெட்டுகள் வீழ்த்தி பிராவோவை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

    மும்பை இந்தியன்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 169 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா ரிங்கு சிங்கை 9 ரன்னில் ஆவுட்டாக்கினார். இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் இருந்த பிராவோவை 3-வது இடத்திற்கு தள்ளி, 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    பிராவோ 183 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். பியூஷ் சாவ்லா ரிங்கு சிங்கை அவுட்டாக்கியதன் மூலம் 184 விக்கெட்டுகள் வீழ்த்தி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

    சாஹல் 200 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளார். புவனேஷ்வர் குமார் 178 விக்கெட்டுகள் வீழ்த்தி 4-வது இடத்தில் உள்ளார்.

    • 11 போட்டிகளில் விளையாடி 3-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
    • லக்னோ, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் தலா 6 போட்டிகளில் வெற்றி பெற்று முறையே 3 மற்றும் 4-வது இடத்தில் உள்ளன.

    ஐபிஎல் கிரிக்கெட்டின் லீக் ஆட்டங்கள் இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டன. பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது யார்?. லீக் சுற்றோடு வெளியேறுவது யார்? போன்ற முடிவுகள் ஏறக்குறைய தெரிந்து வருகிறது.

    நேற்று மும்பை இந்தியன்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 170 இலக்கை எட்ட முடியாமல் 145 ரன்னில் ஆல்அவுட் ஆகி 24 ரன்னில் தோல்வியைத் தழுவியது.

    இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் 11 போட்டிகளில் விளையாடி மூன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. இன்னும் 3 போட்டிகளில் விளையாட வேண்டியது உள்ளது. மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றாலும் மொத்தம் அறு வெற்றிகள் ஆகும்.

    ராஜஸ்தான் 10 போட்டிகளில் 8-ல் வெற்றி பெற்று முதல் இடம் வகிக்கிறது. கொல்கத்தா 10-ல் 7-ல் வெற்றி பெற்றுள்ளது.

    எல்எஸ்ஜி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் தலா 6 வெற்றிகள் பெற்றுள்ளன. இந்த அணி இன்னும் 4 போட்டிகளில் ஒரு போட்டிகளில் வெற்றி பெற்றாலும் கூட மும்பை இந்தியன்ஸ் அதிகாரப்பூர்வமாக பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துவிடும். தற்போது ஏறக்குறைய பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துள்ளது.

    ஆர்சிபி 10 போட்டிகளில் 3-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இன்று குஜராத் அணியை எதிர்கொள்கிறது. இன்றைய போட்டியில் ஆர்சிபி தோல்வியடைந்தால் மும்பையை போன்று ஏறக்குறைய பிளுஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துவிடும்.

    ×