search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூனை"

    • தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கயிறு கட்டி மாட்டை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
    • கிணற்றில் பார்த்த போது பூனை தவறி விழுந்து உயிருக்கு போராடி கொண் டிருந்தது தெரியவந்தது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் நேசமணி நகர் பெஞ்ச மின் தெரு ரேஷன் கடை பின்புறம் 70 அடி ஆழம் கொண்ட கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் இருந்து பூனையின் சத்தம் கேட்டது.

    அந்த பகுதி மக்கள் கிணற்றில் பார்த்த போது பூனை தவறி விழுந்து உயிருக்கு போராடி கொண் டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கயிறு மூலமாக கிணற்றின் உள்ளே இறங்கி பூனையை மீட்க நட வடிக்கையை மேற்கொண்ட னர். சுமார் 1 மணி நேரத் திற்கு பிறகு பூனை பத்திரமாக மீட்கப்பட்டது.

    இதேபோல் தேரேக் கால்புதூர், சண்முகா நகர் பகுதியில் உள்ள கால்வா யில் மாடு ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக மாடு சேற்றில் சிக்கியது. சேற்றில் சிக்கிய மாடு வெளியே வர முடியாமல் தவித்தது.

    மாட்டை மீட்க பொதுமக்கள் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் முடியவில்லை. இதை யடுத்து தீயணைப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கயிறு கட்டி மாட்டை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மீட்கப்பட்ட மாட்டை உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

    • ஒரு நிமிடத்தில் 9 முறை ஸ்கிப்பிங் செய்து கிட்கேட் பூனை இந்த சாதனையை படைத்துள்ளது.
    • பூனையின் வயது காரணமாக நாங்கள் குதிப்பதை குறைந்த எண்ணிக்கையில் வைத்திருந்தோம் என்றார்.

    மனிதர்கள் மட்டுமல்ல விலங்கினங்களும் கூட கின்னஸ் சாதனை படைத்து வருகின்றன. அமெரிக்காவில் உள்ள மிசூரி பகுதியை சேர்ந்த கிட்கேட் என்ற 13 வயது பூனை அதன் உரிமையாளர் திரிஷா சீப்ரிட் உதவியுடன் ஒரு நிமிடத்தில் அதிக முறை ஸ்கிப் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

    பூனை அதன் உரிமையாளருடன் சேர்ந்து ஜம்ப் ரோப்பிங் திறமையை வெளிப்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில், ஒரு நிமிடத்தில் 9 முறை ஸ்கிப்பிங் செய்து கிட்கேட் பூனை இந்த சாதனையை படைத்துள்ளது. இந்த சாதனை குறித்து பூனையின் உரிமையாளரான திரிஷா சீப்ரிட் கூறுகையில், ஜம்ப் ரோப்பிங் செய்வது எனக்கும், எனது பூனைக்கும் பிடித்து வருகிறது. மேலும் பூனையின் வயது காரணமாக நாங்கள் குதிப்பதை குறைந்த எண்ணிக்கையில் வைத்திருந்தோம் என்றார்.

    • 10 அடி நீளம் உள்ள மலைபாம்பு ஒன்று பூனை ஒன்றை கடித்து கவ்வி கொண்டு இருந்தது.
    • தீயணைப்பு துறையினர் மலைபாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்

    கன்னியாகுமரி :

    குலசேகரம் அருகே வெண்டலிகோடு பம்பச்சை தாழவிளை பகுதியில் கால்வாய் ஒன்று பாய்கிறது. நேற்று மாலை அந்த பகுதியில் சுமார் 10 அடி நீளம் உள்ள மலைபாம்பு ஒன்று பூனை ஒன்றை கடித்து கவ்வி கொண்டு இருந்தது.

    இது அந்த பகுதியில் உள்ள சுரேஷ் என்பவரின் பூனை என்று தெரியவந்தது. உடனே அந்த பகுதி மக்கள் குலசேகரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    தீயணைப்பு அலுவலர் செல்வமுருகன் தீயணைப்பு வீரர்களுடன் வந்து பார்க்கும்போது பாம்பு பூனையை கடித்து கொண்டு இருந்தது. அவர்கள் பாம்பின் பிடியில் இருந்து பூனையை விடுவித்தனர். பூனை இறந்தது தெரியவந்தது. உடனே தீயணைப்பு துறையினர் மலைபாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் மலைபாம்பை பேச்சிப்பாறை அடர்ந்த காட்டு பகுதியில் விடுவதற்கு வேண்டிய நடவடிக்கை எடுத்தனர். இதனால் சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • பத்திரிகையாளர் சந்திப்புக்கு அழையா விருந்தாளியாக வந்த அதை பார்த்து சிரித்தபடியே வினிசியஸ் நிருபர்களிடம் பேசினார்.
    • சில வினாடிகளுக்கு பிறகு அருகில் நின்ற பிரேசில் அதிகாரி அந்த பூனையை பிடித்து கீழே தூக்கிப்போட்டார்.

    தோகா:

    பிரேசில் கால்பந்து அணியின் புயல்வேக வீரர் 22 வயதான வினிசியஸ் ஜூனியர் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளித்துக் கொண்டிருந்த போது திடீரென பூனை ஒன்று துள்ளி குதித்து டேபிள் மீது பவ்வியமாக அமர்ந்து கொண்டது.

    பத்திரிகையாளர் சந்திப்புக்கு அழையா விருந்தாளியாக வந்த அதை பார்த்து சிரித்தபடியே வினிசியஸ் நிருபர்களிடம் பேசினார். சில வினாடிகளுக்கு பிறகு அருகில் நின்ற பிரேசில் அதிகாரி அந்த பூனையை பிடித்து கீழே தூக்கிப்போட்டார்.

    இந்த காட்சி இப்போது சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

    • ஒரே தட்டில் சாப்பிடும் போது பூனைக்கு நாய் விட்டுக் கொடுக்கிறது.
    • பூனையும், நாயும் ஒற்றுமையாக திகழ்வதை பார்க்கும் போது அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது.

    பெருமாநல்லூர் :

    ஊத்துக்குளி அருகே உள்ள திம்மநாயக்கன்பாளையம் சிவசக்தி நகரில் ஒரு வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளான பூனையும், நாயும் ஒற்றுமையாக திகழ்வதை பார்க்கும் போது அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது .

    இந்த பூனையும் நாயும் ஒரே தட்டில் தான் உணவு அருந்துகிறது. வேறு ஒரு நாய் தட்டில் சாப்பிட வரும்போது இந்த நாய்க்கு பிடிப்பதில்லை. ஆனால் ஒரே தட்டில் சாப்பிடும் போது பூனைக்கு நாய் விட்டுக் கொடுக்கிறது. பொதுவாக பூனையை கண்டால் நாய்க்கு பிடிப்பதில்லை. ஆனால் இந்த வீட்டில் இந்த அதிசயம் நிகழ்வதை பார்க்கும்போது மெய்சிலிர்க்க வைக்கிறது.

    இது குறித்து அந்த வீட்டின் உரிமையாளர் கோனியா கூறும் போது, நாங்கள் சிறு வயது முதல் நாயையும் பூனையையும் ஒன்றாக தான் வளர்த்து வருகிறோம். நாய்க்குட்டியாக இருக்கும் போது பூனை அதன் மேல் படுத்து தூங்கும் .  அப்போதே அவர்கள் ஒன்றுக்கொன்று விட்டுக் கொடுப்பதில்லை. அது இன்றுவரை தொடர்கிறது. பொதுவாக எந்த நாயும் தான் உணவருந்தும் போது வேறொரு நாயோ மற்ற விலங்கோ நெருங்கும்போது அதை சும்மா விடுவதில்லை, துரத்தும். ஆனால் இந்த நாயின் குணம் பிரமிக்க வைக்கிறது.

    ×